03 October 2009

திரு(டன்)விளையாடல் - 6

கத்தி

மச்சி ரத்தக்கறையோடடா, ஓஹ் காட், இங்கபாருடா

(இருவரும் கட்டிலுக்கு கீழ் இருக்கும் ப்ரேதத்தை பார்த்து ஸ்தம்பிக்கிறார்கள்

(உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய
்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்)

வாங்க இன்ஸ்பெக்டர் நாந்தான் உங்களுக்கு கால் பண்ணினேன்,

ஹலோ சுந்த்ரம் சார், உங்களை கேள்வி பட்டீருக்கேன், நான் இன்ஸ்பெகட்ர் பால்ராஜ்,
என்ன பிரச்சனை,

மர்டர்

வாட்? தெளிவா சொல்லுங்க

எஸ் இன்ஸ்பெக்டர், நேத்து எங்க லாட்ஜ்ல தங்கின பொண்ணூ ஒன்னு,

தெரியலை இன்ஸ்பெக்டர், இவங்க இரண்டு பேர்தான் நைட் ஷிப்ட் பார்த்தவங்க

உன் பேர் என்னப்பா

ஸ்ரீ,

உம்பேரு

ஸ்ரீ

என்னடா விளையாடுறிங்களா

இல்லைசார் என் பேர் ஸ்ரீகாந்த் இவன் பேர் ஸ்ரீநிவாஸ்

எனக்கு அதிகம் வேலை வைக்காம உண்மையை ஒத்துக்கோங்க

எந்த உண்மை சார்

ஏண்டா இந்த பொண்ணை கொலை பண்ணிங்க,

அய்ய்ய்யோ சார், செத்துப்போன எங்க பாட்டி மேல சத்தியமா நான் பண்ணலை சார்

அப்ப இவன் பண்ணானா, அப்ரூவராகிடு தண்டனை குறையும்

டேய் எதாச்சும் இசகு பிசகா சொல்லிடாதேடா, நம்ம வாழ்க்கை பிரச்சனைடா

டேய்ய், எம் முன்னாலையே சாட்சியை மிரட்டுறியா, போட்டேன்னா......

சார், நாங்க சொல்றதை கொஞ்சம் தெளிவாக கேளுங்க சார், என்ன நடந்துச்சினா

(@$$$^$&*&^%#$@!#( #&%@^&$*@(@^#%@^*$(@&@$^@&!&!*!**$*()%%)
இதான் சார் நடந்தது.

ஓ அப்போ அந்த கொலையிலேயும் உங்களுக்கு தொடர்பு உண்டா,

அய்யோ சார், கேசை சிம்பிளா க்ளோஸ் பண்ணனும்னு விசாரிக்காதீங்க சார், எங்களை
பார்த்தா கொலை பண்ற மாதிரியா இருக்கு,

யாருக்குடா தெரியும் 1500ரூ வசூல் பண்ண முயற்சி பண்ணவங்க கொலை பண்ணி இருக்கலாம்
இல்லே,
கான்ஸ்டபில்ஸ்,

எஸ் சார்

எல்லா ரூம்லயும் போய் சோதனை போடுங்க, அப்படியே லாக் லிஸ்ட்ட பார்த்து நைட் யார்
யார் தங்கினா, காலைல யார் யாரெல்லாம் ரூம் காலி பண்ணாங்கனு பார்த்து அட்ரஸ்
கலெக்ட் பண்ணுங்க

எஸ் சார்ர்

அந்த பொண்ணோட தங்கினவன் பேர் என்னப்பா

பரத் சார், மங்களூர்னு சொன்னான்

கேமரா இருக்கா

சார் அப்படிலாம் பண்ணமாட்டோம் சார்

யோவ் எண்ட்ரன்ஸ்ல எதும் ஹிடன் கேம்ரா இருக்கானு கேட்டேன்,

இல்ல சார்,

என்னய்யா இதெல்லாம் வச்சி இருக்க மாட்டிங்களா.

(அப்போ ஒரு கான்ஸ்டபில் வந்து சல்யூட் வைக்கிறார் இன்ஸ்பெகடர் பால் ராஜ்க்கு)

என்ன சொல்லுய்யா எல்லா ரூமை சோதனை போட்டாச்சா

போட்டாச்சி சார், ரூம் நம்பர் 44 மட்டும் திறக்கவே மாட்டேன்றாங்க சார், உள்ளே
தாழ்பாள் போட்டிருக்கு. யாரோ இருக்காங்க,

நல்லா தட்டி பார்த்தியா

பார்த்தேன் சார் திறக்கலை. நீங்க ஆர்டர் தந்தா உடைச்சிடலாம் சார் கதவை.

ஏம்பா ஸ்ரீ, அன்த ரூம்ல யார் இருக்கா,

சார் வினோத்தோ என்னவோ சார்,பேர் ஞாபகம் இல்லை சார், சினிமா நடிகர் கணக்கா
இருந்தார் சார். வக்கில்னு சொன்ன நியாஹ்பகம்.

கான்ஸ்டபிள் மறுப்டி போய் தட்டி கூப்பிடு, திறக்காட்டி உடைச்சிடு,

சார்ர்ர்ர்ர்

யோவ்வ்வ், என்ன கதவு உடையுதுனு பீல் பண்றியா,

இல்லை சார், நீங்க உடைக்கலாம் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.

அது,,, கான்ஸ்டபில், டூ வாட் ஐ சே.,,,,,,

(அறை எண் 44ல்)

தட் தட் தட் தட் ஹலோ தட் தட் தட் தட் தட் ஹலோ

உடைச்சிடுய்யா, மோதி திற

சொத்..... சொத்.......... சோஓஓஓஓஒ........

யார் யா நிங்க நிம்மதியா தூங்க விடாம, என்ன பிரச்சனை ஏன் கதவை உடைக்கிற மாதிரி
சத்தம் போடுறிங்க.

சாரி சார், நான் இன்ஸ்பெகடர் பால் ராஜ், இந்த லாட்ஜ்ல ஒரு கொலை விழுந்துட்டது,

வாட் கொலையா,

ஆமாம் சார், சார் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, நீங்க லாயர் கணேஷ்?

எஸ்.... நான் லாயர் கணேஷோட ஒன் அண்ட் ஒன்லி அசிஸ்டண்ட்
வசந்த்......

(தொடரும்ம்ம்ம்ம்)

திரு(டன்)விளையாடல் - 5

kaya miyama kayam miya kaya miya (பயபபட கூடாது டிரைவரு இந்தில பேசறான்)

என்ன சொல்றான் இவன்

என்ன சொல்லுவான் எதாச்சும் ஒன்னை சூஸ் பண்ணிக்கோனு சொல்லுவான், ம்ம், சீக்கிரம்
சூஸு

இந்த ப்ளாக் கலர்

******************************

அடுத்த நாள் பொழுது விடிந்தது

மச்சி நைட் கலக்கல்டா. இதுக்கு முன்னாடி இப்படி இருந்ததே இல்லை, சூப்பர்

தெளிவா பேசுடா நம்மை தப்பா நினைக்க போறாங்க

தப்பா நினைக்க என்ன இருக்கு, 4 பீரு இது வரை அடிச்சதே இல்லை, உன் புண்ணியத்தால
தம்ம்பிக்கு
அனுப்பவேண்டியது போக மிச்சம் காசுல நல்லா தண்டியடிச்சாச்சி

அதிருக்கட்டும் போதைல இப்படியாடா என்னோட சிக்கனை சாப்பிட்டே தீருவேன்னு அடம்
பண்ணுவ,

சாரி மச்சி, அப்புறம் அந்த பிகர் அந்த பையன்லாம் போயாச்சா,

அந்த பையன் போயிட்டான், பொண்ணு மேலதான் இருக்க்கு,

அடப்பாவி ஏண்டா. அப்போ எக்ஸ்ட்ரா காசு வாங்கிட்டியா

டேய். என்னோட ஒரு சிக்கன் பீசை உருவிட்டு ஓவரா எங்கிட்டயேவா, அதுலதான் சிக்கனே
தெரிஞ்சிக்கோ.

சரி விடு நெட் ட்ரான்சாங்கன் பண்ணிட்டு வரேன், மணி என்னாச்சிடா

9 ஆக போகுது, சீக்கிரம் போயிட்டு வா, இந்த ஏழுமலை வேற எங்க போனான்னு தெரியலை.
அவளை எழுப்பி துரத்தனும் முதல்ல

சரிடா நான் வரேண்டா, எதுக்கும் போன் நம்பர் வாங்கி வை மச்சி

ரொம்ப முக்கியம், போய்ட்டு சீக்கிரம் வா. எத்தனை மணிக்கு ஷிப்ட், ம்தியம்தானே

ஆமாம்,

ஓகே, கிளம்பு,
ஏழுமலை.......... ஏழுமலை...........
(எங்க போய் தொலைஞ்சான் இவன்)

அண்ணே வந்துட்டேன்னே, 26ம் நம்பர் ரூம்ல காபி கேட்டாங்க வாங்கி கொடுத்துட்டு
வரேன்.

சரி நேத்து வந்த பார்ட்டி போயிட்டதா 9.30 வரைதான் டைம். சொல்லிட்ட இல்லே.

சொல்லி இருக்கேன்னே, இப்ப கிளம்பிடும், நான் பார்த்துக்கறேன்னே,

சரி எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகிடுச்சி, விஸ்வா வந்துட்டாரா

அவர் வந்துட்டு பேப்பர் படிச்சிட்டு இருக்கார், டாண்னு 10 மணிக்கு வந்து
உட்கார்ந்துடுவார்

சரி நான் குளிச்சிட்டு வரேன்...

****************

(குளிச்சிட்டு ரெடியாகி ஆபிஸ்க்கு போக ரெடியாகறச்ச மற்றொரு ஸ்ரீ வேகமா ஓடி
வருகிறான்)

டேய் பேப்பர் பார்த்தியா.....

இருடா ஏன் இப்படி பதறி ஓடி வர்ர, கன்னடப்பேப்பர்தான் இருக்கு, எனக்கு அதெல்லாம்
படிக்க தெரியாது

ஸ்டுபிட், இந்து பேப்பர் பாருடா, 8 பக்கம்டா

என்ன மேட்டர் என்ன ஆச்சி? தெளிவா சொல்லு

நேத்து பார்த்தோமே,

யாரு பரத்தா?

அவன் இல்லை அந்த போன் பண்ணி அலையவச்சானே அவன்....

அவனா? அவனுக்கு என்ன?

அவன் செத்து போயிட்டாண்டா

வாட்? செத்து போயிட்டானா.. உனக்கு எப்படி தெரியும்

பேப்பர பார்டா. அவனை யாரோ கொலை பண்ணி இருக்காங்க, அதும் மதியம் 2ல இருந்து
3க்குள்ளே.

என்னடா சொல்ற அவன் நம்மை பார்த்து போகறச்சே டைம் 1.45தானே இருக்கும் அடுத்த 15
நிமிசத்துல எப்படிடா
அவன் பேர் என்னடா

தரம் சிங்னு சொன்ன நினைவு,

சரி விடு இப்படிப்பட்ட ப்ராத்தல் பண்றவனுக்கு 1008 எதிரிகள் இருப்பாங்க, சரி
நான் கிளம்பறேன்

டேய்ய்ய், நீ அவனுக்கு போன் பண்ணீ இருக்க ஞாபகம் வச்சிக்கோ,

அதுக்காக? அடப்பாவி நான் ? அய்யோ..... தப்பு பண்ணிட்டேனே, நீதாண்டா இந்த
செல்போன்லயே கால் பண்ண சொன்ன.

எனக்கு என்ன தெரியும் இப்படி ஆகும்னு.

அப்போ போலிஸ் நம்மை கண்டுபிடிச்சி இங்கே வருவாங்களா.

அது வந்தா நமக்கு என்ன பயம், நாம என்ன கொலை பண்ணோமா இல்ல வேற எதாச்சும்
பண்ணோமா.
சரி அந்த பொண்ணூ போயிடுச்சி இல்லே.

ஏழுமலை........ ஏழுமலை....... சே நேரங்கெட்ட நேரத்துல அப்ஸ்காண்ட் ஆகிடுவான்,

என்ன ரூம்டா அவ

34னு நினைக்கிறேன், ம்ம் 34தான், சாவி இல்லையே இங்கே, அப்போ இன்னும் காலி
பண்ணலை போல,

சீக்கிரம்டா போலிஸ் தேடி வந்து ரைடு கிய்டு விட்டா பிரச்சனையாயிடும். அனுப்பி
வைடா முதல்ல,

நீ போடா, என்னமோ எனக்கு பயமா இருக்கு,

போடா இவளும் அவ மாதிரி, அய்யோ........ வேண்டாம் நினைச்சாவே மயக்கம் வருது நீயே
போ..

சரி நீயும் கூட வா பின்னாடியே நில்லு, சொல்லிட்டு ஒன்னா வந்துடலாம்

சரி வா, போலாம்

மச்சி கையை பிடிச்சிக்கடா

என்னடா இப்படி நடுங்குது உன் கை.

டேய் போலிஸ் வருமா

மச்சி நீதான் என்னைய சமாதானம் பண்ணனும், நீ என்னடானா என்னய கேட்கீற,

(34ம் நம்பர் ரூமுக்கு போயாச்சி)

டொக்க் டொக்க்

என்னடா திறக்க மாட்டேன்றா, சத்தமா தட்டு,

குளிச்சிட்டு இருக்காளோ, சனியன் இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கா

டொக் டொக், தட் தட் தட், டொம் டொம் டொம் டொம்ம்

என்னடா ஒரு பதிலும் வரலை, நல்ல தண்ணியடிச்சிட்டு தூங்கிட்டு இருக்காளா என்ன.

இந்த கதவு கைப்ப்ப்ப்ப்

என்னடா திறந்து இருக்கு

மச்சி நீ உள்ளே போயேன்

மச்சி எனக்கு வெட்கமா இருக்குடா நீயே போயேன்

சனியனே வா 2 பேரும் போலாம்,

(உடனே இந்த ஸ்ரீ அந்த ஸ்ரீ காதுல ஏதோ சொல்ல)

ரொம்ப முக்கியம், பேசாம வாடா...
ஹலோ எங்கேங்க இருக்கிங்க

மச்சி பாத்ரூம் கதவு திறந்துதான் இருக்கு, பெட்லயும் ஆள காணோம், கிளம்பிட்டா
போல இருக்கேடா,
நாம எதும் பைசா தரனுமா அவளுக்கு, இல்ல அவ எதும் தரணுமா.

யாரும் தர தேவையில்லை, போயிட்டால்ல அப்பா இப்பதான் நிம்மதி.

என்ன நிம்மதி போன் நம்பர் அவனோட செல்போனில் பதிவாகி இருக்கும்,
போலிஸ் விசாரிக்க கண்டிப்பா வருவாங்க, எதாச்சும் சொல்லி சமாளிக்க்க்

என்னடா கையிலே ரத்தம்

தெரியலைடா இந்த பெட்ல கை வச்சேன் ஈரமா இருந்துச்சி

சரி பெட்ட மாத்த சொல்லு ஏழுமலையை அப்புறம், சரி வா கிளம்பலாம்.

டேய் அங்கே பாரு.

என்ன

கத்தி

மச்சி ரத்தக்கறையோடடா, ஓஹ் காட், இங்கபாருடா

(இருவரும் கட்டிலுக்கு கீழ் இருக்கும் ப்ரேதத்தை பார்த்து ஸ்தம்பிக்கிறார்கள்)

*(தொடரும்ம்ம்)*

திரு(டன்)விளையாடல் - 4

அண்ணே வந்தவங்க க்வாலிஸ் வச்சி இருக்காங்க, நீங்க ரெண்டு பேரும், அந்த பையனும்
போயிடுங்க, 20 நிமிசத்துல
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(அங்க கட் பண்ணா ஏர்போர்ட் ரோட்ல வண்டி வேகமா போயிட்டு இருக்கு)

டிரைவர் வ்ண்டியை இந்த பெட்ரோல் பங்கை தாண்டி நிறுந்துங்க

நான் டிரைவர் இல்லைங்க, இந்த காரே என்னோடது நியாபகம் வச்சிக்கோங்க.

சாரி பாஸ் பழக்க தோசத்துல........

என்னது ப்ழக்க தோசமா. மச்சி நீ எப்போ மச்சி காருக்கு டிரைவர் வச்சி இருந்த.

டேய் நிறுத்துடா, ஒரு ப்ளோல வந்திடுச்சி, இங்கனதானே வரச்சொன்னான்.

போன் அடி டா

சிவிட்ச் ஆப்ல இருக்குய்யா, ஓ கால் வருது.... இது என்ன வேற நம்பர்ல இருந்து
கால் வருது.
ஹலோ

வண்டியை அப்படியே நேரா ஓட்டிட்டு போயி எங்க யூ டர்ன் வருதோ அங்கே யூ டர்ன்
போட்டு
அதுல இருந்து 3வது பெட்ரோல் பங்கை தாண்டி நிறுத்து...

ஹல்... வச்சிட்டான், என்னடா இவனுங்க இப்படி கடுப்படிக்கிறாய்ங்க, இந்த ரோட்ல
போயி யூ டர்ன் போட்டு வரச்ச 3வது பெட்ரோல் பங்க் வரணுமாமாம், கஷ்டகாலம். ஏம்பா
டிரைவர், சாரி சார்
சார், வண்டியை எடுங்க

என்னங்க ரோடு போகிட்டே இருக்கு, எங்கத்தான் யூடர்ன் போடறது, இப்படியே
ஏர்போர்ட்டு வரையே போகும் போல இருக்கே,

அதோ யூ டர்ன்ன், திரும்பு திரும்பு திரும்பு...............
இதோ அவன் சொன்ன 3வது பெட்ரோல் பங்க் அதை தாண்டி போய் நிறுத்துங்க பாஸ்.

மச்சி சீக்கிரம் கால் பண்ணுடா,

இருடா, டயல் பண்ணிட்டு இருக்கேன்ல, என்னடா இந்த நம்பரும் இப்போ ஸ்விட்ச் ஆப்ல
இருக்கு, ப்ழைய நம்பரும் ச்விட்ச் ஆப் டா, என்னடா இவனுங்க பயங்கர தில்லாலங்கடி
வேலையா பண்றாங்க

இருடா வேற நம்பர்ல இருந்து கால் கண்டிப்பா பண்ணுவாங்க, பார்ரு பண்றாங்க

ஹலோ, நாங்க வந்துட்டோம் இப்ப என்ன பண்ணனும்,

மறுபடி வண்டியை பழைய இடத்துக்கே விடுங்க....

ஹல்... யோவ் இவனுங்க லூசா இருப்பானுங்க போல இருக்கே மறுபடி பழைய இடத்துக்கே
போக சொல்றாங்க,

கண்ணுக்கு எட்டின தூரம் யூடர்ன் வர மாதிரியே இல்லையேடா, 1000ரூ அநியாயமா
பெட்ரோலுக்கே செலவாகி இருக்கேடா, சே என்னடா பொழப்பு இது, அநாவசிய செலவுக்கு
அவனவன் 1000-2000 செலவு பண்றான், வாழ்க்கைக்கு முக்கியமான கல்விக்கு, அதுவும்
எக்ஸாம் எழுத 1000ரூபா இல்லை எங்கிட்ட, என்னடா இது உலகம்.

மச்சி அநாவசியமா கம்யூனிசம் பேசிட்டு இருக்காதே, உட்காரு உள்ளே போய், பாஸ்
மறுபடி பழைய இடத்துல நிறுத்துங்க பாஸ்...

*******************

என்னடா வந்து 10 நிமிசமாகுது ஒரு பயலையும் காணோமேடா,

அங்கே பார்டா ஒரு சிவப்பு மாருதி வேன் வருது, வண்டி எண் என்ன KA 01 AB........
டேய் இந்த வண்டி இல்லை போல இருக்கே நிக்காம போயிட்டானே,

டேய் அங்க பாரு ஒருத்தன் போன் பேசிகிட்டே நடந்து வரான், அவந்தான் நினைக்கிறேன்,
ஏற்கனவே அவனை நான் நம்ம லாட்ஜ்ல பார்த்து இருக்கேன், அவனாதான் இருக்கும்,
எஸ், இவந்தான் என்னைய பார்த்ததும் இங்கேயே வரான்.

நமஸ்தே சாப், (அப்படினு ஆரம்பிச்சி இந்திலயே சல்மான் உட, அட அதான்பா ஆங்கிலம்னா
பீட்டர்
இந்தினா சல்மான், சபி டீகே)

ஆப்கா நை இந்தி, உஸ்கா பாய்க்கு லடிக்கி சாயியே,

தமிழா...., தமிழிலெயே பேசுங்க, எனக்கு தமிழ் எழுத படிக்க நல்லா வரும்,

அச்ச்சா... சே அப்படியா, என் பேர் ஸ்ரீ

என் பேரு ஸ்ரீ

இப்ப என்ன நானும் என் பேரு ஸ்ரீ சொல்லனுமா,

இல்ல என் பேரும் ஸ்ரீ, அவன் பேரும் ஸ்ரீ, உங்க பேர் என்ன,

அது நம்மக்கு எதுக்கு தலைவா, வண்டி அங்க நிக்குது போய் செலக்ட் பண்ணுங்க,
மால் வெட்டுங்க, கிளம்புங்க, மேட்டர் ஓவர்

எங்க எந்த வண்டியும் வரலையே..

டேய் ஒரு மாருதி வேன் போச்சே அதாந்தான் இருக்கனும், எங்க நிக்குது வண்டி,

கொஞ்சம் முன்னாடி போங்க, 2 மினிட்ஸ் வாக் போதும்,

சரி வாடா ஸ்ரீ நாம போகலாம்

பாஸ் என்ன என்னை விட்டு நீங்க போறிங்க, பார்க்க வந்தவன் நான்,

வாங்க 3 பேரும் போகலாம்.

3 பேரா போகாதீங்க, போலிஸ் ரவுண்ட்ஸ் வரலாம், வந்தா டவுட் வரலாம், ஒருத்தர்
நில்லுங்க இங்கேயே.

மச்சி நீ போடா நீதான் பார்க்கனும்னு ஆசை பட்ட, நான் உனக்காக இங்கேயே வெயிட்
பண்றேண்டா

நல்ல நண்பன், வாங்க சார் நாம போகலாம், உங்க பேர் என்ன சொன்னிங்க,

இன்னும் சொல்லவே இல்லையே...

ஏன் கேட்டாதான் சொல்லுவீங்களா,

என் பேர் பரத், மங்களூர்ல இருந்து வர்ரேன்,

அங்கே இல்லாததா இங்கே இருக்கு

என்னது?

ஒன்னுமில்லை, போவோம்,
அட நான் பார்த்தே அதே வண்டி போல இருக்கே,

டொக்க்க் டொக்க்க் டொக்க்க்

(மாருதி வேன் கதவு சடாரென்று திறக்கிறது, உள்ளே 4 நங்கைகள் நவநாகரிக உடையில்)

kaya miyama kayam miya kaya miya (பயபபட கூடாது டிரைவரு இந்தில பேசறான்)

என்ன சொல்றான் இவன்

என்ன சொல்லுவான் எதாச்சும் ஒன்னை சூஸ் பண்ணிக்கோனு சொல்லுவான், ம்ம், சீக்கிரம்
சூஸு

இந்த ப்ளாக் கலர்

**
*(தொடரும்ம்ம்ம்)*

திரு(டன்)விளையாடல் - 3

நீங்க இன்னும் மேலே போகலையா, இப்படியே நேரா போயி படிக்கட்டுல ஏறி ரைட்ல கட் பண்ணா

அப்புறம் கட் பண்ணலாம் சார், குஜிலி சூப்பாரா இருக்கு சார், கொஞ்சம் அரேஞ்ச்
பண்ண முடியுமா

செருப்பாலையே அடிப்பேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

ஹலோ என்ன மரியாதையில்லாம

அட உங்களை இல்லை சார், வாசல்ல பிச்சைகாரங்க,
போய்யா போ வந்துட்டுடானுங்க
நீங்க போங்க சார் மேலே

நான் கேட்டது....

பரதேசி பரதேசி இன்னும் போகலையா நீ, போடா,

ஹலோ

இன்னும் போக மாட்டேன்றாங்க சார் பிச்சைகாரனுங்க
என்ன சார் கேட்டிங்க

ஒன்னுமில்லை, நான் அப்புறம் வந்து கேட்கிறேன்
(அடக்கடவுளே என்ன கொடுமையான வேலை இது,)
டேய் ஸ்ரீ வாடா சாப்பிட போலாம்.

நீ போடா நான் வரலை...

அடடா என்னடா, சாப்பிட போலாம் போலாம்னு சொல்லிட்டு இருந்த இப்ப
என்னாச்சி

மனசு சரியில்லை மச்சி

விடுடா, இனிமே இப்படி உன்னை எந்த ரூமுக்கு அனுப்ப மாட்டேன், தெரியாம
பண்ணிட்டேன்..

அதில்ல மச்சி, அம்மா போன் பண்ணினாங்க, தம்பிக்கு எக்ஸாம் பீஸ் கட்டனுமாம்
2000ரூ அரேஞ்ச பண்ண சொல்லி கேட்டாங்க,

என்னடா திடிர்னு சொல்ற, எங்கிட்ட சுத்தமா இல்லையேடா, ஏற்கனவே கம்பெனிலயும்
அட்வான்ஸ்
வாங்கிட்டேன், இங்கே என்னதான் பண்ணாலும் சாப்பாடு தங்க தவிர சம்பளம்னு ஒன்னு
4மாசம் ஒரு தடவ கிடைக்கும், நீ வேற இன்னிக்குதான் சேர்ந்து இருக்க, என்னடா
பண்றது.

எங்கிட்ட ஒரு 1000 இருக்கு, இன்னும் ஒரு 1000 இருந்தா அனுப்பிடலாம்.. என்ன
பண்றதுனே தெரியலை,

சரி சாப்பிடபோலாம், சாப்பிட்டு வந்தா எதாச்சிம் யோசிக்க முடியும் போலாம் வா....

ட்ரிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

இந்த 34ரூம்காரனுக்கு வேற வேலை இல்லை வா போய் சாப்பிட்டு வந்து கண்டுக்கலாம்

***************************

சாப்பிட்டா யோசனை பண்ணுவேன்னு சொன்னே, இப்ப்டி தூங்கறியேடா,

டேய் கண்ணை மூடிகிட்டே யோசிக்கிறேன் வெயிட் பண்ணுடா,

மறுபடி 34ம் நம்பர்ல இருந்து ட்ரிங்க்க்க்க்க்க்க்க்க்

ஹலோ, சொலுங்க சார் என்ன ஹெல்ப் வேணும்.

சார் நான் கேட்டேனே, நண்பர்கள் வரதுக்குள்ள ஹெல்ப் பண்ண்ணா நல்லா இருக்கும்,

(அடங்கொன்னியா, இவன் என்னை கொலை பண்ணாம விடமாட்டான் போல இருக்கே)
சாரி சார் எனக்கு அதுக்கும் சம்பந்தம் இல்லை, அதுவுமில்லாம முதலாளி நைட்
டைம்லதான்
அனுமதிக்க சொல்லி இருக்கார் பகலில் இல்லை, சாரி சார்.
(டொக்க்க்க்க்க்க்க்க்)

என்ன மச்சி, என்ன ப்ராப்ளம்

எதாச்சிம் குட்டி வேண்டுமாம், சனியனுங்க

அண்ணே, எங்கிட்ட ஒரு கார்ட் இருக்கு, போன தடவ வந்த பிலோமினா கொடுத்துச்சி.
அந்த நம்பருக்கு போன் பண்ணி பேசலாம்.

ஏழுமலை, உத வாங்க போற, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுனு தெரியுமில்லே..

அய்யோ அண்ணே, உங்க தோஸ்த்க்கு 1000ரூ திரட்ட இதை விட்டா இன்னா வழி உங்களுக்கு
யோசிங்க,

சே இவங்கிட்ட 1000ரூ கேட்கிறதா அதெல்லாம் வேண்டாம். அதுவுமில்லாம இதுக்காகலாம்
1000ரூ எவன் தருவான் எங்கிட்ட போயி,

அண்ணே நல்லா கேட்டுக்கோங்க, இந்த போனுக்கு நாமலே பேசலாம், பேசி ரெடி
பண்ணிடலாம், இவங்ககிட்ட அவன் எவ்ளோ சொல்றானோ அதைவிட அதிகமா சொல்லலாம், எப்படி
ஐடியா

உன் ஐடியாவை போய் உடப்பிலே போடு,

மச்சி செஞ்சிதான் பார்க்கலாமே டா, ஆபத்துக்கு பாவம் இல்லைடா, எக்ஸாம் பீஸ்
கட்டாடா ஒரு வருசம் வீணாகிடும்டா.

சே நீ ஒன்னுடா, ஏழுமலை இப்போ என்னா பண்ணனும்

இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க........

என்னடா லாண்ட் லைன் வர்க் ஆகலை.

உங்க செல்போனில் இருந்தே பண்ணிடுங்கன்னே.

கன்றாவி, இந்த நம்பருக்கெல்லாம் கால் பண்ண வேண்டியதா இருக்கு,
என்னடா ரொம்ப நேரமா ரிங் போறது, எடுக்க மாட்டேன்றாங்க.

ஹலோ

ஏய்ய்ய்ய் எடுத்துட்டாங்க,

அண்ணே பிலோமினானு சொல்லி ஆரம்பிங்க, அதான் கோடு வேர்டு

(அது வேறையா) பிலோமினா....... தரம் சிங் இருக்காரா....

ஓ தரம் சிங் பேசறேன்.. எப்ப வேணும்

(என்னடா எப்ப வேணும்னு நேரடியா விசயத்துக்கு போயிட்டார்.) மதியம் 2-6 வரை
வேண்டும்

பகல்லயா.... ஹா ஹா, ஓகே. இப்போ மணி 12.20, மணி 1.க்கெல்லாம் ஏர்போர்ட் ரோடு
வந்துடுங்க,
நான் 1.05க்கு கால் பண்றேன் இதே நம்பருக்கு.

வச்சிட்டான்ன், டாக். இப்ப என்ன பண்ண இன்னும் 40 நிமிசத்துல எப்படி போறது
அங்கே, பஸ்லதான் போனும், ஏழுமலை எதாச்சும் ஐடியா கொடுய்யா.

அண்ணே கார்ல போலாம்,

சுத்தம். கிடைக்க போற 1000த்துல காருக்கே போயிடும்.

அண்ணே வந்தவங்க க்வாலிஸ் வச்சி இருக்காங்க, நீங்க ரெண்டு பேரும், அந்த பையனும்
போயிடுங்க, 20 நிமிசத்துல
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(அங்க கட் பண்ணா ஏர்போர்ட் ரோட்ல வண்டி வேகமா போயிட்டு இருக்கு)

*(தொடரும்ம்ம்)*

11 August 2009

திரு(டன்) விளையாட்டு - 2

ம்ம் அது டீலக்ஸ் ரூம், அங்க ஹீட்டர் வர்க் ஆகலையாம், இந்த இந்த ஹீட்டரை கொண்டு போய் கொடு, முதல் வேலை, ஒழுங்கா பண்ணு

இதோ கிளம்பறேன்ன்ன்ன்.


அப்பாடி ஏழுமலை காபி வாங்கிட்டு வாய்யா

அண்ணே, அப்புறம் போறேன், 23நம்பர் ரூம்ல இருந்து கூப்பிடுவாங்க இப்போ

கூப்பிட்டாச்சி, என் ப்ரண்ட் போயிட்டான் அதை கவனிக்க நீ போய் வாங்கிட்டு வா

அண்ணே, என்னன்னே இப்படி பண்ணிட்டிங்க

ஏண்டா, என்னாச்சி,

அந்த ரூம் ராத்திரி நம்ம அய்யா தங்கின ரூம் அடடே அப்படியா தெரியாம அவனை அனுப்பிட்டேனே
பயந்துடுவானே, யார் இருக்கா உள்ளே சரசா இல்லை பிலோமினாவா

2 பேரும் இல்லை மோனிகா

சூப்பர், ம்ம் பயபுள்ள என்னாவாகப்போறான்னோ.

*************

டொக்க்க் டொக்க்க்

யாரு

ஸ்ரீ

எந்த ஸ்ரீ என் ப்ரண்ட் ஸ்ரீயோட ப்ரண்ட் ஸ்ரீ

எந்த ஸ்ரீ எந்த ப்ரண்ட்,

ஹீட்டர் கொடுக்க வந்தேங்க

அட் ரூம் சர்விஸ் பையனா, துரை ரூம் சர்வீஸ்னு சொல்ல மாட்டிங்களோ
சரி சரி உள்ளே வா.

(என்ன கொடுமை இது, இதலாம் கேட்கவேண்டியதா இருக்கே)
இந்தாங்க ஹீட்டர்

இருப்பா நீ பாட்டுக்கு கொடுத்துட்டு போயிட்டே இருக்க
இருந்து எப்படி யூஸ் பண்றதுனு சொல்லி கொடுத்துட்டு போ.

(விளங்கும்) இதை பக்கெட் மேல குச்சி வச்சி இதுல...
ஏங்க படுத்துகிட்டே இருந்தா எப்படி தெரியும் எழுந்து வாங்ங்ங்ங்ங்ங்ங்.......

***************

டேய் ஸ்ரீ டேய்ய் ஸ்ரீ என்னடா ஆச்சு, பேயறைஞ்ச மாதிரி இருக்கியேடா,

அண்ணே அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் 23 நம்பர் ரூம் நான் போறேன்னு

எழுமலை இதெல்லாம் ஓவரு, நீ சொல்றதுக்கு முன்னாடியே போயிட்டான் இவன்
டேய்ய்ய் ஸ்ரீ, இந்தாடா தண்ணி குடிடா.

டேய் நான் எங்கடா இருக்கேன்

பயப்படாத 23ல இருந்து உன்னை தூக்கிட்டு வந்துட்டேன்,

மச்சி நான் 23 நம்பர் போனேனா, ஹீட்டர் கொடுத்தேனா,

போதும் போதும், ஒன்னும் விளக்கம் வேண்டியதில்லை, வா சாப்பிட போகலாம்,
இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்காதேடா, இனிமே உன்னை இப்படி அனுப்ப மாட்டேன்.

மச்சி கதவை திறந்தேனா, ஹீட்டர் கொடுத்தேனா...

அய்யோ நிறுத்துடா போதும் வா சாப்பிட போகலாம், முதல்ல இந்தா சோடா குடி

அண்ணே க்வாலிஸ்ல வந்து இறங்குறாங்கன்னே, பெரிய இடம் போல இருக்கு எதாச்சும் பண்ணி கறந்துடுங்க

வாங்க வாங்க, எத்தனை பேர் சார், இப்போதிக்கு டீலக்ஸ்தான் இருக்கு அரை நாளுக்கு 750ரூ. ஏசி இருக்கு, டிவி இருக்கு ஹீட்டர் இருக்கு

அதேதாண்டா கதவை திறந்தேனா ஹீட்டர் கொடுத்தேனா..

அடிங், கம்முனு இருடா கொஞ்சம், பிசினஸ் பண்ற நேரத்துல பொலம்பிகிட்டு, சொல்லுங்க சார்
எத்தனை பேர் சார்,

மொத்தம் 5 பேர் இருக்கோம், சாயந்திரம் 8 மணி வரைதான் இருப்போம், இப்போ டைம் என்ன

8.30 சார், மாலை 6 மணி வரைதான் தான் 750ரூ அதுக்கு மேல ஒரு மணி நேரத்துக்கு 100ரூ,
அப்புறம் 8 மணி மேலே போனா முழுசா 750ரூ தரணும், இது கம்பெனி ரூலு, இதுக்கு கம்மியா இங்க ரூம் கிடையாது சார்

சரி இந்தாங்க 1000ரூ, இந்த 3 பேர் மட்ட்ம்தான் இங்க தங்குவாங்க, நானும் இவரும் வெளியே ஒரு வேலையா போறோம், 6 மணி சுமார் வந்துடுவோம். 6 மணிக்கே வந்துட்டா மிச்சம் 250ரூ அப்ப வாங்கிக்கறேன், போதுமா, எந்த ரூம் எங்களுக்கு, நல்ல ரூமா தாங்க

இதுல ஒரு கையெழுத்து போடுங்க, ஏழுமல.. 34 நம்பர் டீலக்ஸ் ரூம் சாவி எடுத்துட்டு போய் இவரை அந்த ரூமல விட்டுட்டு வா...

(அப்போ மோனிகா எண்டராவுது)

ஹாய் ஏழுமல்லை

நான் ஏழுமல்லை இல்ல ஏழுமலை,

ம்கூம் இப்ப முக்கியமா இது, நீ மேலே போ,
ஏம்மா மோனிக்கா கொஞ்சம் துப்பட்டாவை சரியா போட்டுக்கோம்மா, காலங்காத்தால
நீ வேற ரோதனை பண்ணாத,

ஹாய் ஸ்ரீ, ஏன்பா அப்படி மயக்கம் போட்ட,
ஏய்ய்ய் ஏய்ய்ய் ஏன் இவனுக்கு என்னாச்சி அடிக்கடி மயக்கம் போடுறான்

அவன் அப்படித்தான்மா, கொஞ்சம் கிளம்புறியா

டாட்ட்டா, பை பை, சியூ

வெளங்கும், ஸ்ரீ, ஏண்டா மறுபடி மறுபடி மயக்கம்போடுற எழுந்துறுடா. சாப்பிட போகலாம்

சார்ர்ர்ர்ர்........

நீங்க இன்னும் மேலே போகலையா, இப்படியே நேரா போயி படிக்கட்டுல ஏறி ரைட்ல கட் பண்ணா

அப்புறம் கட் பண்ணலாம் சார், குஜிலி சூப்பாரா இருக்கு சார், கொஞ்சம் அரேஞ்ச் பண்ண முடியுமா

செருப்பாலையே அடிப்பேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

(தொடரும்ம்ம்ம்)

திரு(டன்) விளையாட்டு - 1

காலை 7.30 மணி

ட்ரிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

அடக்கவுளே, ஏண்டா காலைலயே ஏழரைய கூட்டுற ஞாயிறுக்கிழமையும் அதுவுமா தூங்கவிடேண்டா

மச்சி என்னடா இப்ப்டி சொல்லிட்ட நீதாண்ட உங்க லாட்ஜ்லயே எனக்கு பார்ட்ட் டைம் ஜாப் அரேஞ்ச் பண்றேன்னு சொன்ன
அதாண்டா 7.30க்கு அலாரம் வச்சேன்,

(மு.க.சு: அதாவது சின்ன முன் கதை சுறுக்கம், அலாரம் அடிச்சி எழுந்தது ஸ்ரீ, அலாரம் வச்சதும் ஸ்ரீதான், ஒரு ஸ்ரீ பெங்களூர்ல ஹார்டுவேர் எஞ்சினியரா இருந்துகிட்டே ஒரு லாட்ஜ்ல ஈவ்னிங் டைம்ல சூப்பர் வைசரா இருக்காப்ல, இன்னொரு ஸ்ரீ ஒரு ப்ரோடக்சன் எஞ்சினியரா இருக்கான் ஜீனியர் லெவல்ல, அவனுக்கு ஈவ்னிங் டைம்ல பார்ட் டைம் ஜாப் பண்ண ஆசை, அதனால தன்னோட நண்பன் ஸ்ரீகிட்ட கேட்டிருக்கான், இனி)

மச்சி சிவாஜி நகர்லயே இந்த லாட்ஜ்தான் ரொம்ப பெரிசு, இதோட ஒனர் பேரு சுந்தரம்,
பெங்களூர்லயே பெரிய பணக்காரங்களில் ஒருத்தர்.

மச்சி அவருக்கு பொண்ணு இருக்கா

ஏன் கேட்கிற

இல்ல லைப்ல செட்டில் ஆகனும் இல்லையா அதான் கேட்டேன்.

அப்படி எதும் முயற்சி செய்தேனு வச்சிக்க, கண்டிப்பா உன் லைப்பை செட்டில் பண்ணி வச்சிடுவாரு,
பெரிய ரவுடியும் கூட, அல்சூர் லேக்ல எதாவது பாடி மொதந்தா, அது அவரோட கைங்கர்யமாக கூட இருக்கும்,
ஜாக்கிரதை சொல்லிபுட்டேன்.

இல்ல மச்சி, அவருக்கு பொண்ணு இருந்தா தங்கச்சி மாதிரி மச்சி.

ம்ம் அது, இப்படியே இருந்துக்க, அதான் உனக்கும், எனக்கும் நல்லது.

(மொதலாளி வந்துட்டாரு)

அய்யா நான் சொன்னது இவனைதான்யா, இவன் பேரும் ஸ்ரீதான், நல்ல பையந்தான், இவனுக்கு என்னை போல பார்ட் டைம் வேலை போட்டு கொடுத்திங்கனா நல்லா இருக்கும்யா

என்ன வேலை தம்பி கொடுக்க, தம்பிய ரூம் சர்வீஸ் பாய் வேலை பார்பாகளா

ம்ம் பார்ப்பான்யா,

(டேய் என்ன ரூம் சர்வீஸ் பாய் வேலையா, என்னய்யா என்னை என்ன நினைச்சிகிட்ட, இதெல்லாம் நான் செய்ய முடியாது)

(உளறாத, அது ஒன்னும் பிரச்சனையில்லை, நானும் இருக்கேன் உனக்கு உதவிக்கு, மொதல்ல சரி சொல்லு)

என்னப்பா தம்பி எதோ குசு குசுனு சொல்றாப்ல, என்ன பிரச்சனை.

இல்லைங்யா, பையனுக்கு வேலை கிடைசதுல சந்தோசமாம், சம்பளம் எவ்ளவுன்ன்னு?

ம்ம், சம்பளம் கொடுக்காமலா, நம்ம ஹோட்டல்லயே சாப்பாடு, மாசம் மாசம் 500ரூ,

ரொம்ப சந்தோசம்யா, இன்னில இருந்தே வேலைக்கு சேர்ந்துடலாம்,

அப்படியே ஆகட்டும், நான் கிளம்பறேன் தம்பி. நல்லா பார்த்துக்க,

சரிங்கய்யா ஆகட்டும்

டேய் அந்த டபரா தலையன் 500ரூ சம்பளம்னு சொல்றான், நீ என்னடானா ஓகே சொல்ற, 1500ரூகூட இல்லாம என்னடா பார்ட் டைம் ஜாப்பு. அதும் சர்விஸ் பாய் வேலை, கண்றாவி, என்னை பத்தி என்ன நினைச்சிகிட்ட நீ

கூல் டவுன் மாப்பு, இங்க சாதா ரும்ஸ் 15 இருக்கு, செமி டீலக்ஸ் 15, டீலக்ஸ் ரூம் 15,

இருந்துட்டு போகட்டும்

முழுசா கேளுடா, எப்படியும் அதிக பட்சன் டீலக்ஸ் ரூம் ஒரு நாள்ல 10 வரைதான் புக் ஆகும், அதுவே ஜாஸ்தி, நாம டெய்லி, ஒரு மணி வரைக்கு மேல எவனும் வர மாட்டான், ஜாலியா டீலக்ஸ் ரூம்ல தங்கிக்கலாம், காலைல வென்னீர் குளியல், பெங்களூர்ல இப்படி வசதியா செலவில்லாம் தங்க முடியுமா உன்னால. அதும்

அட அப்படியாடா, டிவி உண்டா.

ம்ம் எல்சிடி டிவியே உண்டு.

அப்ப டபுள் ஓகேடா.

சும்மா இல்லடா திங்கள் முதல் சனி வரை மாலை 6 - காலை 6 வரை உனக்கும் எனக்கும் இங்க ஷிப்டு, ஞாயிறு முழுசா நம்மதான் பார்க்கனும், புரியுதா

புரியுது மச்சி.

இதோ இங்க இருக்கு பாரு சிவப்பா லைட்லாம் இருக்கில்லையா இதுல எதுல லைட் எரியுதோ அந்த ரூமு்க்கு போயி என்ன வேணும்னு கேட்டு உதவனும், அவ்ளோதான்,

மச்சி, என்னய தொடைக்க விட்டுட மாட்டியே,

யோவ் அப்படிலாம் நடக்காது, அதுக்குலாம் வேற பசங்க இருக்காங்க, நீ போய் என்ன வேணும் அப்படினு கேட்டு அதை வந்து இந்த பசங்களுக்கு சொன்னா போதும், போதுமா

அப்படினா சரி மச்சி, மச்சி 23நம்பர் ரூம் லைட் எரியுதுடா

ம்ம் அது டீலக்ஸ் ரூம், அங்க ஹீட்டர் வர்க் ஆகலையாம், இந்த இந்த ஹீட்டரை கொண்டு போய் கொடு, முதல் வேலை, ஒழுங்கா பண்ணு

இதோ கிளம்பறேன்ன்ன்ன்.

(23ம் நம்பர் ரூம்ல என்ன நடக்க போகுது, வில்லங்கமா நடக்காது, ஆனா வில்லங்கம்தான் அங்க இருக்கு)


தொடரும்ம்ம்ம்

10 August 2009

திருவிளையாடல்ல் - 8

உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு, என்னை உனக்கு பிடிச்சிருக்கா

(பதில் கண்டிப்பா வராதுனு சொல்ல முடியாது, வரதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டு சொல்லிடனும், இந்த தாரக மந்திரத்தை)

நாம கல்யாணம் பண்ணிப்போமா - ஐ லவ் யூ

நான் என்ன சொல்றதுனு எனக்கு தெரியலை

எது வேணா சொல்லேன் முதல்ல ஓகே சொல்லேன்

நானும் உங்கிட்ட இதை எப்படி சொல்லலாம்னுதான் நினைச்சிட்டு இருந்தேன்,

ஓ அப்படியா, சொல்லு சொல்லு என்ன சொல்ல போற சொல்லு

ம்ம்

ஐயோ இதுக்கு என்ன அர்த்தம், எனக்கு புரியலையே

ம்ம்ன ம்ம்னுதான் அர்த்தம்

நான் அவ்ளோ புத்திசாலி இல்லையே, தெளிவா சொல்லேன்.

போடா

ஏய் சொல்லுடி

(எஸ் ஐ லவு யூ திஸ் லவ்வபிள் இடியட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்)

அய்ய்ய்ய்யோஓஓஓஓஒ.

சாரி சார் சாரி சார். நான் என் ப்ரண்டுனு நினைச்சேன், நீங்க தூங்குங்க சார்

என்னது தூக்கமா, ஏய் என் பக்கத்துல தாரிணி, நான். என்னாச்சி அய்யோ

என்ன சார் எதாச்சும் கெட்ட கனவா

கெட்ட கனா? அய்யோ இதெலாம் கனவா

சார் நீங்க உட்கார்ந்துட்டு தூங்கிட்டு இருந்திங்க, நான் என் ப்ரண்ட் அஜித்குமார் மாதிரி இருந்தீங்கனு தட்டி கூப்பிட்டேன் சார் அவ்ளோதான்,

அப்போ எல்லாம் இல்லையா

எது எல்லாம் சார்

யோவ் போய்யா நான் செம்ம காண்டுல இருக்கேன் ஓடிடு, சே...
என்னடா என் வாழ்கையிலும் ஒரு வசந்தம் வண்டி ஓட்டிகிட்டு வருதேனு பார்த்தேன்.

ஹாய் ஸ்ரீ, சாரிடா கொஞ்சம் லேட் ஆகிடுச்சி

(கொஞ்சமா 2 ஹவர்ஸ், பாவிகளா இப்படி காத்துட்டு இருந்த நேரத்துல உலகை வலம் வந்திருந்தா உலகத்தையே 2 ரவுண்ட் அடிச்சிருப்பேன் சே. ஏந்தான் இந்த பொண்ணுங்களுக்கு பஞ்சுவாலிட்டியை மெயிண்டெனே பண்ணமாட்டேன்றாங்களொ)
சே சே இப்பதான் சொல்லு சொலு ஒன்னும் பிரச்சனையில்லை. என்ன விசயம்

ம்ம் சொல்றதுக்கு முன்னாடி. ஐஸ்க்ரீம் சாப்பிடலாம், பயப்படாத நானே பே பண்றேன்.

ம்ம் இப்ப சொல்லு, என்ன்ன சொல்லனும்னு சொல்ல கூப்பிட்ட

(என்ன சொன்னா ஏது சொன்னானுலாம் சொல்லிட்டு இருக்க முடியாது, இப்ப ஓவர் டூ ரூம்)

என்னடா ஸ்ரீ இவ்ளோ நேரம், என்ன ஓகேவா. ட்ரீட் எப்போ


மச்சி ஏண்டா அவனோட வெந்த புண்ல வேலை பாய்ச்சுற, பாவம்டா
கிண்டல் பண்ணாதீங்க

அட நீ என்னப்பா ஏதோ அங்க நடந்ததெல்லாம் உன் ஞானதிருஷ்டில தெரிஞ்ச மாதிரி அவனை கலாய்க்கிறே.

இல்லேன்றியா நீ, இன்னும் நீங்க வளரனும்டா, நாந்தான் சொன்னேனே புதன் கிடைச்சா பொண்ணு கிடைக்காது
பொண்ணு கிடைச்சா புதன் கிடைக்காதுனு, அதுமில்லாம ஸ்ரீயை பாரேன், என்னமோ பரிகொடுத்தவன் கணக்கா இருக்கான். இது போதாதா உனக்கு.

அப்ப்டியா ஸ்ரீ என்ன ஆச்சிடா, என்ன ப்ராப்ளம். என்னடா கேள்வி கேட்டா எதோ ஜிகினா கயிரை தர்ர என்ன இது?

இதுக்கு பேருதான் ராக்கி கயிறு


(முற்றும்)

திருவிளையாடல்ல் - 7

கன்டிப்பா அவன் வரும் போது சந்தோசமா வருவான்ற‌

ஏன்டா அப்படி சொல்ற‌

மச்சி பொண்ணு கிடைச்சா புதன் கிடைக்காது புதன் கிடைசசா பொண்ணு கிடைக்காதுடா
இன்னிக்கு புதன் கிழமை, கன்டிப்பா அட்டம்ப்ட் பெயில்டு தான்.


(மாலை 6.30 மெரினா கடற்கரை, ஏதோ ஒரு இடம்)


(எப்படி ஆரம்பிக்கலாம், வந்ததும் எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது, சே வரச்ச ப்லாக்ல நல்லதா
நாலு கவிதையை மன்ப்பாடம் பண்ணிட்டு வந்திருக்கலாம், என்னன்னு பேச்சை தொடங்கிறது
ஒன்னும் புரியலையே, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிற்துனு ஆரம்பிக்கலாமோ.........
அது செம்ம பழசு ட்ரிக்கு, புச்சா புடிக்கனும், நானே ஒரு ஜினுக்கு சொல்லி அசத்திடனும்.
வந்ததும் நல்லா சமைப்பேன்னு சொல்லி வைக்கனும், அப்பத்தான், எடுத்தவுடனே ஏன் மேல ஒரு இது வரும்,)


ஹாய்

ஹாய் வா வா

வந்து ரொம்ப நேரமாச்சா,

இல்லை இப்பத்தான் ஒரு ஒரு மணிநேரம்தான் ஆகி இருக்கும்.

சாரி, ட்ராபிக்டா அதான் லேட்ட்.

அட விடு, இதுல என்ன. சொல்லு என்ன சாப்பிடலாம்.

எதும் வேண்டாம், நாம அலைகிட்ட போகலாமா.

ம்ம் போலாமே, அதுக்கு முன்னாடி ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு போலாம்,
ஏம்பா இரண்டு கோன் கொடுப்பா, மீதி டிப்ஸ்சா வச்சிக்கோ.

என்னாது டிப்ஸா வாத்யாரே 20ரூபாக்கு இரண்டுலாம் எவன் கொடுப்பான், அதுலயும்
மிச்சன்றே, இன்னும் 30 கொடு வாத்தியாரே, சோக்கா பிகர் கூட வந்திருக்க க்ஞ்சத்தனமா இருக்காதே
வாத்யாரே,

யோவ் மெதுவா பேசுய்யா, முன்ன பின்ன பீச்ல வந்து காசு கொடுத்து வாங்கினாத்தானே தெரியும்
சரி சரி இந்தா நல்ல கோன் ஐஸா கொடு,


இந்தா நைனா, என்ன கட்டிக்க போற பொண்ணா,

யோவ் அதிகம் பேசாதே. இன்னும் முடிவு பண்ணலை.

தபார்யா, பிகரு நயந்தாரா கணக்கா சோக்கா இருக்கு, இதுக்கு போயி யோசிக்கறையே நைன்னா,
டபார்னு ஓகே சொல்லி கட்டிக்க பா.

யோவ் நீ அதிகம் பேசுற, முடிவு இன்னும் பண்ணாதது நான் இல்லை, அவ, கம்ம்னு இருய்யா
நானே காலைல இருந்து பயங்கர நெர்வெசா இருக்கேன்,
தாரிணி, இந்தா கோன், இருக்கிறதுலயே இதான் பெஸ்ட் ஐஸ்க்ரீம், ஒன்னு 50ரூபா

50ரூபாதான் கொடுத்த மாதிரி இருந்தது இங்க இருந்து பார்த்தப்பா

(ம்கூம் சிஐடியா இருந்திருப்பா போல) அது அது வந்து அந்த ஆளு முன்னாடியே எனக்கு ஒரு 50ரூ கடன் பாக்கி வச்சிருந்தான், அதான், அதை விடு, வா போகலாம்.

நான் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்

நானும் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்

அப்படியா நீயே சொல்லு

இல்லை நீயே சொல்லு,

நீ சொல்லேன்

லேடிஸ் பர்ஸ்ட் நீயே சொல்லிடு

எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியலை.

சரி வா அலைக்கு பக்கத்துல இருக்க மணல் திட்டுல உட்கார்ந்து பேசுவோம்
ம்ம் இப்போ சொல்லு,

நீ சொல்லுடா ப்ளீஸ்.

அது வந்து, எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியலை, கொஞ்சம் கை நடுங்குது

(மக்களே என் மக்களுக்கு மக்களே, இங்க இங்க நல்லா நோட் பண்ணிக்கோங்க, எப்படி ஒரு ப்ரபோசை நாடகத்தனம் இல்லாம நாடகத்தனமா பேசுறதுனு உஙளுக்கு சொல்லி தர போறேன்,

பிரபோஸ் பண்ண ரெடியா இருக்க என்ன மாதிரி சின்ன பையாஸ், மற்றும் இப்படி பண்ணாம விட்டுட்டோமேனு நினைக்க போற பெரிய பையாஸ் எல்லாரும் ரெடியா)

(கொஞ்சம் கூட பயப்படாம ஒரு நெர்வெஸ்ல பேசற மாதிரி பேசனும் புரியுதா மாணாக்கர்களே, கை நடுக்கம்னா ஏதோ மைக் டைசன்கிட்ட அடிவாங்கி பார்கின்சனோ என்னவோ வந்த கணக்கா நடுங்க கூடாது,

க்வார்ட்டர் அடிச்ச மாதிரியும் நடுங்க கூடாது நண்பர்களே, பனி காலத்தில் சாயங்கால நேரத்துல லைட்டா காற்று வீசும் போது குளிருமே அந்த கணக்கா நடுங்கிகிட்டே நடுக்கமா இருக்குனு சொல்லனும்)


ஏன் என்னாச்சி

உன்னை பார்த்ததில் இருந்துதான்,

ஏய் என்ன சொல்ற

என்னோட அடுத்த பொறந்தநாளுக்கு நான் உன் முகத்துல முழிக்கனும்னு சொல்றேன்

ஏய் என்ன சொல்ற

(டப்புனு ஆனது ஆகி போச்சி கையை பிடிசிடுங்க, டபாருனு புத்தூருக்கு அனுப்பி வைக்கிற மாதிரிலாம் பிடிக்கப்படாது, மெதுவா ஜெண்டிலா பிடிக்கனும், இந்த ஐஸ்க்ரீம்ல ராப்பர் பிஸ்கெட் ஒன்னை சொருகி தருவாங்க தெரியுமோ, அதுல ஐஸ்க்ரிமை எடுக்கிற மாதிரி மெதுவா)

உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு, என்னை உனக்கு பிடிச்சிருக்கா

(பதில் கண்டிப்பா வராதுனு சொல்ல முடியாது, வரதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டு சொல்லிடனும், இந்த தாரக மந்திரத்தை)


நாம கல்யாணம் பண்ணிப்போமா - ஐ லவ் யூ


(தொடரும்ம்ம்ம்ம்)

திருவிளையாடல்ல் - 6

இப்ப என்ன உன் பிரச்சனை,

இப்ப கேட்டியே இது ஒரு நியாயமான கேள்வி. சரி வா சேலம் பஸ் இன்னும் வரலை,அதுக்குள்ளே நாம,

நாம??

ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாமே.


(அப்புறம் என்னாச்சி என்னாச்சி என்னாச்சினு எல்லாரும் எதிர் பார்க்கறிங்களா, இது ப்ளாஷ் பேக்தானே மறுபடி நாம கொஞ்சம் ப்ளாஷ் ப்ரண்டுக்கு போயிட்டு அப்புறம் பேக்கலாம்)

மறுபடி போன்,

இப்ப யாரு அட்வைஸ் பண்ண போறாங்க‌ ஹலோ

ஹாய்

ஹாய் (ஐ லேடிஸ் வாய்ஸ், அய்யய்யோ லேடிஸ் வாய்ஸ்)

யாருஙக நீங்க‌

என்னடா என் வாய்சை மறந்துட்டியா

(நேத்துல இருந்தே எனக்கு எல்லாம் மறந்து போன மாதிரிதான்)
யார்னு தெரியலயே,

போடா லூசு நான் தான் தாரிணி,

ஓ.............
தாரிணி சொல்லு தாரிணி

இன்னிக்கு நீ ப்ரீயா

புதன் கிழமை காலைல போன் பண்ணி ப்ரீயானு கேட்டா எப்படி நான் ப்ரீனு சொல்ல முடியும்,
ஆபிஸ் இருக்கே.

ஓ சரி அப்போ.... அப்போ சாயங்காலம் மீட் பண்ணலாமா,

ஓ கண்டிப்பா, ரொம்ப முக்கியமானதுனா சொல்லு நான் லீவு போட்டுடறேன்

லீவ்வா... சரி, உனக்கு லீவ் போடறது பிரச்சனையில்லைனா ஓகே

எனக்கு என்ன பிரச்சனை, ஆபிஸ்ல என்னை ஒரு பய கேட்க முடியாதாக்கும்
(இங்கே ஒரு சிறு ப்ளாஷ் பேக்க்க்க்)

ஓம் ஸ்ரீ என் ரூமுக்கு வாங்க

(போச்ச்சி போ, இன்னிக்கு நாந்தானா சிக்கினேன்) எஸ் சார்

ஓம் ஸ்ரீ போன மாசம் 7 நாள் லீவு போட்டிருகிங்க

இல்லை சார் வெறும் 6 நாள்தான், இன்னொரு நாள் அரை நாள்தான் லீவு, ஆக மொத்தம் 6.5நாள்தான் லீவு

ஷட் அப், 6 நாள் இன்பார்மேசன் எதும் கொடுக்காமலே லீவ் போட்டிருக்கிங்க, இது என்ன ஆபிஸ்னு நினைச்சிங்களா இல்லை ஏதாவது தர்ம சத்திரம்னு நினைச்சிங்களா.

சார்ரி சார், நான் போன் பண்ணி முத்துகிட்ட சொன்னேன் சார், நான் எர்ணாகுளம் போறதா,

யார் முத்து? உங்க டீம் லீடரா, மேனேஜரா இல்லை எச் ஆர்ரா, உங்களை போல வரும் ஒரு டிசைனர். அவ்ளோதான். நீங்க எர்ணாகுளம் போங்க இல்ல ஏர்வாடிக்கு போங்க, ஐ டோண்ட் மைண்ட்,ப்ராப்பரான இன்பார்மேசன் கொடுங்க. திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங் டு யு, இனிமே இப்படி நடந்தா ஐவில் பனிஷ் யு ஆஸ் பெர் ஹவர் கம்பெனி நார்ம்ஸ், கோ நவ்...

ஓகே சார்......................................................................................................................................................)

அதான் சொல்றேன் இல்லே ஆபிஸ்ல என்னை கேள்வி கேட்க ஒருத்தன் பொறந்து வரனும்.சொல்லு எங்க வரட்டும்..

வேண்டாம் ஸ்ரீ நீ சாயந்திரமே வா, நான் எங்க வரட்டும்.

சரி ஓகே உன் விருப்பம், எப்பவும் போல மெரினா கண்ணகி சிலை அருகில். பொடி நடையாவே வந்து சேருவோமில்லே,

நீயும் உன் கண்ணகி சிலையும், சென்னைல மீட்டிங் ஸ்பாட் வேற எத்தனை இருக்கு, சரி போ, வந்துடறேன் பை சாயந்திரம் பார்ப்போம்.

(அய்யய்யோ பேசிகிட்டே டயமாகி போச்சே, ஏற்கனவே இரண்டு நாளா 10 நிமிசம் லேட்டா போயி இருக்கேன், இன்னிக்கும் லேட்டாச்சு அந்த பஞ்சி மிட்டாய்காரன் வள்னு எரிஞ்சி விழுவான், உடனே கிளம்.............)

(ஆபிஸ் கிளம்பியாசி, வேலை பார்த்தாச்சி, திரும்பி வந்தாச்சி, மீண்டும் அறைக்கே வந்துட்டோம்ல)

என்னய்யா 5 மணிக்கே இன்னிக்கு வந்துட்ட,

வா வா நம்ம குரு எல்லா ஆட்டமும் ஜெயிக்கிறான், வந்து குந்து,
நீயும் அவனும் ஒரே டீம்ல ஆடுங்க‌
அப்பத்தான் நாங்க ஜெயிக்க முடியும்

சாரி மச்சி, ஐயாவுக்கு முக்கிய வேலை இருக்கு,கேரம் விளையாடலாம் நேரம் இல்லை. நான் கிளம்புறேன்,

ஐயாவுக்கு வேலை இருந்தா நீ ஏன் மச்சி கிளம்புற

டேய் இன்னிக்கு ஒரு டேட்டிங்கா போறேன் மச்சி, அழகா பொறந்துட்டாவே, வாட் அ பிட்டி வாட் அ பிட்டி, வை ஆல் பிகர் பாலோ மை

அடப்பாவி சொல்லவே இல்லை,
கல்பனா கடைசில ஓகே சொல்லிட்டாளா.

இடியட், சந்தோசமா இருக்க நேரத்துல ஏன் பழசை கிளர்ர,

மச்சான் உனக்கு விசயம் தெரியாதாடா, கல்பனா இவனை கட் பண்ணிட்டு போயிட்டா இல்லே, சும்மா எப்ப பார்த்தாலும் பீலா உட்டுகிட்டு இருந்தா.

டேய் அவ கட் பண்ணிட்டாளா, அவ சுமார்தான்டா, வெள்ளையா மூஞ்சி, கொஞ்சும் லைட்டா உப்பலா கன்னம், ஏதோ பொம்மை மாதிரி இருக்கா, திரிஷா மாதிரி மொக்கை பிகர்டா அவ, அதான் கழட்டிவிட்டுட்டேன்,

ஓ அப்ப இப்ப நயந்தாராவை பார்க்க போறியோ. பேர் என்ன

தாரிணி

என்னது தலகாணியா

டேய்ய், தாரிணிடா

என்ன சனியனோ, பேசிகிட்டே என் சட்டையை போடுற,

டேய் நாம என்ன அப்படியா பழகி இருக்கோம், உன் சட்டை போட எனக்கு உரிம இல்லையா

அட பன்னாட, உரிமை சட்ட போடுறதுல மட்டும்தானா, அதை துவைச்சி தரதுலயும் இருக்கனும்,

மச்சி உங்கிட்ட ஆர்க்யூ பண்ணிட்ட இருக்க நேரமில்லை, டாடா

டேய் டேய் என் செருப்பு. சே அதை லவட்டிகிட்டானே.

விடு மச்சி ஏதோ பிக்கிட்டான், சந்தோசமா இருக்கட்டும்,

கன்டிப்பா அவன் வரும் போது சந்தோசமா வருவான்ற‌

ஏன்டா அப்படி சொல்ற‌ மச்சி

பொண்ணு கிடைச்சா புதன் கிடைக்காது புதன் கிடைசசா பொண்ணு கிடைக்காதுடா இன்னிக்கு புதன் கிழமை, கன்டிப்பா அட்டம்ப்ட் பெயில்டு தான்

(தொடரும்ம்ம்ம்ம்)

திருவிளையாடல்ல் - 5

உன் போன் நம்பர்?

சென்னை வந்து நீ என்னை பார்க்க முடிஞ்சா கண்டிப்பா நம்பர் தறேன்ன்,

(சேலம் கிருஷ்ணகிரி வந்துடுச்சி சேலம் போறவங்க இறங்குங்க)

அப்புறம் அவ்வளவுதானா..

ம்ம் அப்புறம் என்ன,

(ஏம்பா கருப்பு சட்டை சேலம்தானேப்பா நீ, இறங்குங்க, தனியாசொல்லுவாய்ங்களா உங்களுக்கு மட்டும்)

யோவ் இருய்யா, எல்லாம் சரியா இருக்கானு பார்த்து இறங்க வேண்டாமா,
என்னோட நம்பர் இருக்குல்ல.. என் ஞாபகம் வந்தா ஒரு மிஸ்ட் கால் கொடுக்காத,கால் பண்ணியே பேசிடு.
பை...

(ஏம்மா நீ இறங்கலையா, சேலம்தானே நீயும், ஏதும் சண்டைனா வீட்டுல போய் பேசிதீர்த்துக்கோங்க, அதுக்காக பஸ்லயே உட்கார்ந்தா எப்படி, இறங்குங்க இறங்குங்க)

(இந்த இடத்துல நான் தேடும் செவ்வந்தி பூ இது ஒரு நாள் பார்த்து அந்தியில்பூத்தது மங்கைக்குள் என்ன நிலவரமோ என்ற பாட்டை, நாதஸ்வரம் தவில்லவாசிக்கும் பேக்க்ரவுண்டை மனசுல நினைச்சிக்கோங்க,
குஜாலா இருக்கா,
அப்படித்தான் நானும் இருந்தேன்)

(கண்டக்டர் எங்க இரண்டு பேரையும் கழுத்தை பிடிச்சி தள்ளாத குறையா கீழே தள்ளினார்)

ஏய் நீ சேலமா, கிருஷ்ணகிரினு சொன்ன, இப்ப பெங்களூர் போயிட்டு இருக்கிறதாசொன்னா, ஏன் இந்த பித்தலாட்டம்.

ஏய் ஓவரா பேசாத, பித்தலாட்டம்லாம் இல்லை, உங்கிட்ட சொல்ல விரும்பலை.

இது என்ன அநியாயம், அப்ப நீ சொன்னது எல்லாம் பொய்யா, பேர் என்ன,ராக்கம்மாவா பொன்னமாவா, சிடிஎஸ்னு சொன்னியே எந்த கார்ப்பரேசன்ல குப்பைகொட்டுற,

ஏய் ஓவரா போகாதே, உங்கிட்ட எதும் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை, நீ உன் வழிய பார்த்துட்டு போ.

அதெப்படி நானும் சேலம் நீயும் சேலம், ரெண்டு பேரும் ஒரே பஸ்லதான் போகனும் தெரிஞ்சிக்கோ,

நீ ஏறும் பஸ்ல நான் ஏற போறதில்லை,

நீ ஏறின பஸ்ல இருந்து நான் இறங்க போறதில்லை,

என்னை பாலோ பண்ணாத நான் போலிஸ்ட போவேன்,

ஏன் நான் என்னமோ ப்ராடு மாதிரி சொல்ற, நீதான் ப்ராடு, ஏறினதில இருந்துசொன்னது எல்லாம் பொய், நல்ல வேளை உங்கிட்ட இருந்து போன் நம்பர் வாங்கலை,ஒரு வேளை கொடுத்திருந்தா அதும் ப்ராட் நம்பராதான் இருக்கும்.

ஏய் சும்மா பேசிட்டே போகாதே, என் பேர் தாரினி தான், தாரிணி கலா. நான்வேலை செய்யிற இடத்தைலாம் முன்ன பின்ன தெரியாதவன்கிட்ட சொல்ல முடியாது,அதான் மாத்தி சொனேன்.

அப்ப ஓப்பனா சொல்ல வேண்டியதுதானே, எனக்கு சொல்ல விருப்பம் இல்லை, அதனால
சொல்ல மாட்டேன்னு. அப்புறம் ஏன் பொய்யா சொல்ற.பொண்ணுங்கனாவே சீட்டர்ஸ் சே.

ஹலோ மிஸ்டர், பசங்களை பத்தி தெரியாதா, இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கபார்ப்பீங்க, எல்லாரும் அயோக்கிய ராஸ்கல்ஸ், செல்ப் பிஷ் ஜெயிண்ட்ஸ்.

யாரு செல்பிஷ்? பசங்களா பொண்ணுங்களா? பஸ்ல லேடிஸ் சீட்ல இது வரை எந்தவயசான பாட்டிக்கும் எந்த பொண்ணும் இடம் தந்ததா வரலாறும் இல்லைபரமசிவனும் இல்லை.

அது என்ன பரமசிவன்.

அது தல படம், ஒரு ப்லோல வந்துட்டது, நீ பேச்சை மாத்தாத, பொண்ணுங்கதான் செல் பிஷ்.

ம்கூம், நான் மட்டும் கம்பெனி பேரையும் போன் நம்பரும் தந்திருந்த அடுத்தநாளே அங்கே வந்து நின்னுருப்ப,
ஒரு கப் காபி சாப்பிடலாம்,னு கூப்பிடுவ
அப்புறம் அழகா இருக்கே பயமா இருக்கு அப்படினு பிட்டு போட்டிருப்ப.(_________________________________________________________________)

ஏய் என்ன முணுகிற தைரியமா இருந்தா சத்தமா சொல்லு இந்த முணுகிற வேலைலாம் வேண்டாம்.

இப்ப என்ன உன் பிரச்சனை,

இப்ப கேட்டியே இது ஒரு நியாயமான கேள்வி. சரி வா சேலம் பஸ் இன்னும் வரலை,அதுக்குள்ளே நாம,

நாம??

ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாமே



(தொடரும்ம்ம்ம்)

திருவிளையாடல்ல் - 4

யூ ஆர் லுக்கிங் (அச்சச்சோ என்னமோ சொலனுமே ப்ரெட்டியா பிட்டியானு மறந்து போச்சே)
யூ ஆர் லுக்கிங் சோ அழகு

ஹா ஹா, தேங்க்ஸ்

எங்கே வர்க் பண்றிங்க

ஆபிஸ்ல

ஹா ஹா, நல்ல ஜோக் அடிக்கிற. ஆபிஸ் பேர் சொன்னா நான் என்ன அங்கே வந்து நின்னுடுவேன்னு பார்க்கறிங்களா, நான் அவ்ளோ சுறுசுறுப்பான ஆள் இல்லை, ஒரு வேலை என்னை தேடி நீங்க மெரீனா வந்தா, ஒரு வேளை பார்க்க வரலாம்,

சிடிஎஸ்ல வர்க் பண்றேன் போதுமா,

ஓஹ் நான் டிசிஎஸ், நான் இஞ்சினியரிங், ஈஈஈல நீங்க

நானும்தான்,

குட் குட் ரொம்ப நெருங்கிட்டோம்,

என் சொந்த ஊர் சேலம், நீங்க.

நான் கிருஷ்ணகிரி, ஓ பரவாயில்லை,

என் போன் நம்பர் 9xxxx - xxxxx உன் நம்பர் சொல்லு.

சாரி நான் செல் போன் யூஸ் பண்றதுல்ல

அப்ப உன் லேண்ட் லைன் நம்பர் தா..

சாரி, அதை நான் யாருக்கும் தரதில்லை, அப்புறம் என்ன நீங்க நீயாகி போச்சி ம்ம்ம்ம்.

அதான் ப்ரண்டாகிட்டோமே, எனக்கு நீங்க வாங்க போங்கலாம் ப்ரண்டுகிட்ட பார்மலா பேசறதில்லை. நீ வா போதான், என்ன சொல்ற நீ

இது என்ன விளையட்டு ப்ரண்ட்னுட்டு, நீங்க யாரோ நான் யாரோ,

அப்ப நீ என்னை ப்ரண்டா நினைக்காட்டி என்னை நீ வாங்க போங்க கூப்ப்பிடு, நான் உன்னை ப்ரண்டா நினைச்சிகிட்டு நீ வா போ பேசறேன் போதுமா.

உங்களுக்கு ம்ம்.... உனக்கு கல்யாணமாகிடுச்சா ஸ்ரீ,

இதுவரை ஒரு தடவை கூட ஆனதில்லை, இனிமேதான் நல்ல பொண்ணா பார்க்கனும்

பாவம் அந்த பொண்ணு

எந்த பொண்ணு

ம்ம் நீங்க பார்க்க போகும் நல்ல பொண்ணு, பாவம் கேள்வி கேட்டு கொன்னுடுவிங்க போல இருக்கே,

உனக்கு எப்போ தாரு கல்யாணம்

எனக்கு கல்யாணம் ஆகலைனு நான் சொல்லவே இல்லையே,

அட முசல் புடிக்கிற நா... சாரி, பார்த்தா தெரியாதா, நெற்றி உச்சில குங்குமம் இல்லை, கால்ல மெட்டி இல்ல,

ஏன் இதுலாம் இல்லாம இருக்க கூடாதா கல்யாணம் பண்ணினா

இது அடிப்படை விதிதான், கல்யாணம் ஆனா இந்த பொண்ணூங்களுக்கு ஏதோ தனியா பொறுப்பு வந்த கணக்கா முகத்தை கஸ்டப்பட்டு புத்திசாலித்தனமா வச்சிப்பாங்க,அது உன் பேஸ்ல மிஸ்ஸிங். அதான்.

பயங்கரமா ஆராய்ச்சிலாம் பண்ணி இருப்பீங்க போல இருக்கு,

போன் நம்பர் இன்னும் தரவே இல்லையே.

போன் நம்பர்லாம் இல்லை எங்கிட்ட,

பொய் சொல்ல கூடாது, நம்பர் தர விருப்பம் இல்லைனா தர விரும்பலைனு மறைக்காம சொல்லனும், இல்லைனு பொய் சொல்லக்கூடாது,

சரி. தர விருப்பம் இல்லை,

அப்ப போன் இருக்கு.

ம்ம். இருக்கு, ஆனா முன்பின் தெரியாதவங்களுக்குலாம் தரமாட்டோம்.

ம்ம் இப்படித்தான் இருக்கனும், யாராச்சும் முன் பின் தெரியாதவங்க கேட்டா தரவே கூடாது,
ஆனா நாமதான் ப்ரண்டாகிட்டோமே. எனக்கு தரலாமே.

ப்ளீஸ் போன் நம்பர் மட்டும் கேட்காதீங்க,

சரி ஓகே, போன் நம்பர் கேட்கிறது என் கடமை, தரதும் தராததும் உன் உரிமை,

அப்புறம்....என்ன

சென்னைல எங்க தங்கி இருக்க

நான் சென்னையில்லை, பெங்களூர்,

ஓ பெங்களூரா, (கிருஷ்ணகிரி, பெங்களூர் இரண்டுமே எனக்கு சம்பந்தமில்லாத இடமா இருகே) பெங்களூர்லயா இருக்க, அது ஒரு மோசமான ஊராச்சே, வெயில்காலத்துல கூட வெயில் அடிக்காம மழை வரும், கன்றாவி, எங்க சென்னைல 24*7 வெயில்தான், ஏன் மார்கழில கூட குளிரவே குளிராது நல்ல சூடா ஹாடட இருக்க்கும், செம்ம ஹாட்டு மச்சி... சென்னைக்கு வந்திட வேண்ட்கியதுதானே,

அடடா வெயில்தான் உங்களுக்கு பிடிச்சி இருக்கா, கண்டிப்பா பெங்களூரை விட்டு நான் வரவே மாட்டேன், போதுமா


(வண்டி கிருஷ்ணகிரியை நெருங்க போது, பெங்களூர் போறவங்க மட்டும் இதுலயே இருங்க, மத்தவங்க எல்லாரும் இறங்கி அங்க இருக்க இன்னொரு பஸ்ல ஏறிக்கோங்க சேலம் போக)

போச்சி, கண்டக்டர் கெடு கொடுத்துட்டான். சீக்கிரம் சொல்லுங்க

என்ன சொல்ல

பஸ் இப்ப கிருஷ்ணகிரி வந்துடும், நீங்க கிளம்பிடுவிங்க, அப்புறம்எப்போ மீட் பண்ண.

ஒரு வேளை நான் சென்னை வந்தா.

உன் போன் நம்பர்?

சென்னை வந்து நீ என்னை பார்க்க முடிஞ்சா கண்டிப்பா நம்பர் தறேன்ன்,

(சேலம் கிருஷ்ணகிரி வந்துடுச்சி சேலம் போறவங்க இறங்குங்க)

(தொடரும்ம்ம்ம்)

திருவிளையாடல்ல் - 3

ரொம்ப தாங்க்ஸ், கொஞ்சம் தள்ளியே உட்காருங்க, எனக்கு லேடிஸ் பக்கம் உட்கார பிடிக்காது, இருந்தாலும் விதியேனு உட்கார்றேன், அப்புறம் உங்க பேர் என்ன.

தாரிணி கலா...........

அடடே நல்ல பேர், எனக்கு இந்த பேர் ரொம்படி பிடிச்சி இருக்கு

தேங்க்ஸ்

உங்களை எப்படி கூப்பிடறது, தாரிணியா இல்லை கலாவா

நீங்க ஏங்க என்னை கூப்பிடனும்,

இல்லிங்க பக்கத்துல உட்கார்ந்து இருக்கிங்க எதாச்சிம் கேட்கனும், இல்லாட்டி எதாச்சிம் சொல்லனும்னா எப்படி சொல்ல, ஏய் உன்னைத்தான்னு கூப்பிட்டா நல்லா இருக்காதே, அதான்,

(கடவுளே) கலானு கூப்பிடுங்க

ம்ம், நானும் அதைத்தான் நினைச்சேன், ஆனா எனக்கு கலானு பேர்ல 2-3 பேர் ப்ரண்ட்ஸ் இருக்காங்க, அதும் இல்லாம கலா இப்ப ஓல்ட் பேஷன் யு நோ. அதனால தாரிணினு கூப்பிடறேனே.


Sir உங்களுக்கு எத்தனை ப்ரண்ட்ஸ் இருந்தா எனக்கு என்ன Sir, நீங்க ஒன்னும் என்னை கூப்பிட வேண்டாம், தேவைப்பட்டா கலானு போதும், கொஞ்சம் என்னை படிக்க விடுறிங்களா.

நான் பேர் கேட்ட மாதிரி நீங்க கேட்கலையே,

எக்ஸ்க்யூஸ் மி Sir?

அடடா, எல்லாரும் எழுதறச்சதான் ஸ்பெல் மிஸ்டேக் பண்ணுவாங்க, நீங்க என் பேரை செல்றச்சே தப்பு பண்றிங்களே. Sir இல்ல Sri. ஸ்ரீ.

ஓகே மிஸ்டர் ஸ்ரீ, நான் கொஞ்சம் படிக்கனும். So?

ஓ படிங்களேன் தாராளமாய், ஆத்தர் பேர் என்ன?

வாட்?

இல்ல எழுதினவர் பேர் என்னானு கேட்டேன்?

ஓ A.A.K. சந்துரு,

இவர் நல்ல ரைட்டராச்சே, இவரோட விசிறி நான் தெரியுமோ, இவரோட Ghost, in the Darkness படிச்சி இருக்கிங்களா, பயங்கர சஸ்பென்ஸ் திரில்லர்,

அப்படியா

ஆமாங்க, என் ப்ரண்ட் அதை படிச்சிட்டு 2 நாளுக்கு இரட்டுனாவே அலறினான்.

ரொம்ப சந்தோசம், இவர் நாவல் ரைட்டர் இல்ல, எஞ்சினியரிங் காலேஜ் ப்ரபசர், இது 4த் செமஸ்டர் பாட புத்தகம்.

ஓஹோ, அப்போ அது யாரு அந்த Ghost, in the Darkness எழுதினது, அவரோட தம்பி A.A.K.இந்துருவா இருக்குமோ.

சார் கொஞ்சம் தொந்துரு பண்ணாம இருக்கிங்களா

சார் இல்லை, ஸ்ரீ

ஓ மைகாட், ஸ்ரீ ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா வறிங்களா.

(ஒரு 10 நிமிசம் அமைதி)

ஓகே தாரினி தண்ணி இருக்கா, நான் வர அவசரத்துல மறந்துட்டேன்.

இந்தாங்க.....

நன்றிங்க, நீங்க வாய்ல படாமதானே குடிச்சிங்க, எனக்கு எச்சினா பயம், எதாச்சிம் அலர்ஜி வந்துடுமோனு, இப்படித்தான் என் ப்ரண்ட் பஸ்ல போறச்ச

உங்க ப்ரண்ட்ஸும் இப்படித்தான் தன்ணி கொண்டு போகாம ஓசில சாப்பிடுவாரா?

ஹா ஹா, ஆக்சுவலி, அன்னிக்கு என்னாச்சினா, அவங்க வீட்டுல இருந்து தோசை, கட்டு சட்டினி, மிளாகாய் பொடி, பருப்பு பொடி, சப்பாத்தி, குர்மா, பிஸ்கெட், துண்டு, கர்ச்சீப், ஸ்வெட்டர் எல்லாம் கட்டி தந்தாங்க, ஆனா தண்ணி மட்டும் அவங்க வீட்டுல வச்சி தர மறந்துட்டாங்க, செம்ம காமெடி

ஏன் சார்,
அய்யோ ஏன் ஸ்ரீ ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்துல 9 வாத்தை பேசி கொல்றிங்க

ஓ அதுவா நான் சின்ன வயசா இருக்கச்ச, என்னால பேச முடியலையாம்,

உங்களுக்கு? பேச்சி வரலை?

ஆமாம் சின்ன வயசில. எங்க அம்மா பேச்சியம்மனுக்கு வேண்டிகிட்டாங்க, அப்புறம் தான் பேச்சி வந்துச்சாம், அதான் நான் பேச்சியம்மன் நியாபகார்த்தமா என்னை பேசிகிட்டே இருக்க வேண்டிகிட்டு பேசிகிட்டு இருக்கேன்,

:)

நீங்க அழகா சிரிக்கிறிங்க

x-(

ஹி ஹி அழகாகவும் முறைக்கறிங்க.

ஹா ஹா

யூ ஆர் லுக்கிங் (அச்சச்சோ என்னமோ சொலனுமே ப்ரெட்டியா பிட்டியானு மறந்து போச்சே)
யூ ஆர் லுக்கிங் சோ அழகு

ஹா ஹா, தேங்க்ஸ்


(தொடரும்ம்ம்ம்)

திருவிளையாடல்ல் - 2

ஹாய்

ஹாய் (ஐ லேடிஸ் வாய்ஸ், அய்யய்யோ லேடிஸ் வாய்ஸ்)

யாருஙக நீங்க‌

என்னடா என் வாய்சை மறந்துட்டியா

(நேத்துல இருந்தே எனக்கு எல்லாம் மறந்து போன மாதிரிதான்)
யார்னு தெரியலயே,

போடா லூசு நான் தான் தாரிணி,

ஓ.............

(இந்த இடத்துல ஒரு சின்ன ப்ளாஷ் பேக், ப்ளாஷ் பேக்னா சீன் மாதிரிலாம் சொல்ல முடியாது, ஒரு சிறு குறிப்பா சொல்றேன் எல்லாரும் புரிஞ்சிக்கோங்க)

(சில மாதங்களுக்கு முன்னால் நான் பெங்களூர்க்கு போகும் பஸ்ல போனேன், அங்கே ஏன் போனேன்னுலாம் கேட்கப்படாது, தீபாவளி டைம் பஸ்ல இடம் இல்லை, பெங்களூர் பஸ்ல போயி க்ருஷ்ணகிரி வந்து அங்க இருந்து லோக்கல் பஸ்ஸ பிடிச்சி சேலம் வர ப்ளான் எனக்கு)

(அந்த பஸ்ல இருந்தது பின்னாடி சீட் மற்றும் முன்னாடி இருவர் உட்காரும் ஒரு சீட் மட்டும் பெண்டிங். நான் போயி இருவர் சீட்டில் உட்கார்ந்தேன்)

எஸ்க்யூஸ் மீ
(அப்ப்டினு ஒரு குரல், ஐஸ்க்ரீம் மாதிரி இருந்துச்சி, ஐ மீன் குரல்)

ம்ம் சொல்லுங்க,

if u dont mind, இந்த சீட்ல உட்கார முடியுமா,

(அப்போ பாழாய் போன ட்ரைவர், சார் பின்னால குந்துதார், லேடிஸ் பின்னாடி எப்படி சார் உட்காரும்)

(நான் முடிவெடுக்கும் முன் அவன் முடிவெடுத்த காரணத்தால் பின்னாடி போய் உட்கார்ந்தேன்.
பின்னாடி இன்னும் ஒரு நபர் ஏறனும், அந்த பெண் பக்கத்துல யாரும் இல்லை, சரி நல்லா இங்கிலீச்சுல பேசுதே சும்மா பேசிதான் பார்ப்போமேனு நானும் பிட்டு போட ரெடியாகிட்டேன்)

.
எஸ்க்யூஸ்மி,

ம் சொல்லுங்க

இல்ல நான் ஒரு ஆறடி 2 அங்குலம்

அத ஏன் எங்கிட்ட சொல்றிங்க,

இல்லிங்க சிலருக்கு வாய் நீளம்னு சொல்லுவாங்க, சிலருக்கு கை நீளம்னு சொல்லுவாங்க
எனக்கு கொஞ்சம் கால் நீளம்

சுத்தமா புரியலை, இதெல்லாம் ஏன் எங்கிட்ட இப்ப சொல்றிங்க

இல்லிங்க பின்னாடி சீட் என்னோட கால் வைக்க வசதியா இல்லை, if u dont mind... உங்க பக்கத்துல உட்காரலாமா, எப்படியும் வண்டி கிருஷ்ணகிரி போக 5 மணி நேரமாகலாம், அதுவரை நான் இப்படி குறுகி உட்கார்ந்து, காலுக்கு ரத்தம் போகாம எதாச்சும் ஆச்சினா, அந்த பாவம் உங்க மேல வந்துட கூடாதுல்லயா. அதான்...

இல்லே வேற எங்கயாச்சும்ம்,

சும்னு சொன்னா இடம் கிடக்குமா, இங்கதான் கொஞ்சம் எனக்கு வசதி, வேணும்னா நான் இறங்கும் வரை என்னோட லைசென்ஸ், பான் கார்ட், ஐசிஐசிஐ க்ரெடிட் கார்ட் எல்லாத்தையும் நீங்க வச்ச்க்கங்க, இறங்கும் போது கொடுத்தா போதும்,

இதெல்லாம் எதுக்கு.

சும்மா. ஏங்க டைம் ஆகுதுங்க வேற யாராச்சும் வந்துடபோறாங்க,

சரி உட்காருங்க,

ரொம்ப தாங்க்ஸ், கொஞ்சம் தள்ளியே உட்காருங்க, எனக்கு லேடிஸ் பக்கம் உட்கார பிடிக்காது, இருந்தாலும் விதியேனு உட்கார்றேன், அப்புறம் உங்க பேர் என்ன.

தாரிணி கலா...........

(தொடரும்ம்ம்)

06 August 2009

திருவிளையாடல்ல் - 1

பெயர்: வி.ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ் (எ) திரு வெற்றி உலகநாதன் (எ) ஜேக்

வயது மற்றும் பிறந்த தேதி: 13.02.83 (ஜஸ்ட் 1 ஹவர் லேட் பா)

இருப்பிடம்: சென்னை சொந்த ஊர் சேலம்

பணி மற்றும் பணியிடம்: எலக்டிரிகல் டிசைன் எஞ்சினியர்ஆனா எஞ்சினியர் இல்ல டிப்ளோமா

திருமணம் ஆனவரா?: இல்லை

பிடித்தவைகள்: பெண்கள், அஜித், கமல், ஆவி(ஆனந்த விகடன்யா), கடலை ம்ற்றும் சைட்டு

பிடிக்காதவைகள்: சிலநேரங்களில் சில பெண்கள்(டேட்டிங் கூப்பிட்டா வராதப்போ)

சாதனை அல்லது படைப்புகள்: செஞ்சா சொல்றேன்

திறமைகள்: நீங்கதான் அதை சொல்லனும்

எதிர்கால நோக்கம்: காதலிக்கனும் எப்படியாச்சும் யாரையாவது,(பெண்கள் மட்டும்)

தமிழ்நண்பர்களில் இணைய காரணம்: தமிழும் நண்பர்களும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது நான் இந்த குழுமம்ல சேரும் போது நான் போட்ட அறிமுகம்.



*****************************************



நவ் ஓவர் டூ போன் & Story



ஹலோ ஹலோ, டேய் நான் பிரகாஷ் பேசறேன்டா,



அய்யோ அண்ணன், (சிகரெட்டை கீழே போட்டுட்டேன், ஒரு பவ்யம்தான்) சொல்லுங்க அண்ணன்.



டேய் நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்,



டேய் அண்ணா, என்ன காபி சாப்பிட போற மாதிரி சொல்ற,



ஆமாம்டா, என்னோட வேலை செய்யிற பொண்ணு, அம்மாகிட்ட சொல்ல்லிட்டேன், நம்ம அண்ணன்களிடமும் சொல்லிட்டேன், உனக்குதான் 2௩ நாளா டிரை பண்ணேன், அந்த நம்பரை ஏன்டா மாத்தினே,



எண்ண பண்ண சோ மெனி கால்ஸ், சோ மெனி கேர்ள்ஸ், ஆனா சோ மெனி பைசா இல்லைய்ய்ய்யே. அதான் மாத்திட்டேன்,



சரிடா, அவங்க வீட்டலயும் பேசிட்டேன், அநேகமா அக்டோபர்ல கல்யாணம் இருக்கலாம்டா சரி நான் அப்புறம் பேசறேன்

சரி ஓகே டா (அப்பாடி என் ரூட்டு இப்ப படு க்ளியர், கண்றாவி பொண்ணுதான் கிடைக்கலை, கிடைக்க்க்கும்ம்ம்ம்ம்)

(ஒரு அரை மணி நேரம் கழிச்சி பெத்த அண்ணா காலிங்)
என்ன்டா பண்ற‌

ரூம்லதான் இருக்கேன் சொல்லு

பிரகாஷ் பேசினானா

ம்

என்ன சொன்னான்,
கல்யாணம் பண்ணிக்க போறான்னு சொன்னானா

ம்

உன் 2வது, 3வது அண்ணங்க மாதியரியே நீயும் பண்ண போறியா இல்லை, அதுவாகச்சிம் பெரியவா பார்த்து வச்சி வைதீக முறைபடி நடக்குமா,

இதுவரை அப்படி யாரும் இல்லை.

இல்லையா இங்க சேலம்ல இருக்கச்ச ஏதோ சுமதினு ஒரு பொண்ணு பின்னாடி சுத்தினியாமே,

அவளுக்கு கல்யாணம் ஆகி போச்சி.

அப்புறம் கிருத்திகானு யாரோ,

அவளுக்கும்...

ஒஹோ யாரோ ஒரு பொண்ணு கூட போன்ல பேசிட்டு இருகறதா உங்க மன்னி சொன்னாளே, அது

அது மார்சோட கழட்டிவிட்டுட்டேன்,

ம்ம்ம், இனிமே யாரையாச்சும் பார்க்கற ஐடியா இருக்கா,

எனக்கு இருக்கு, பொண்ணுங்களுக்கு இருக்கானுதான் தெரியலை

அடி செருப்பாலே, ஒழுங்கா இருந்துக்கோ, பொண்ணுங்க பின்னாடி சுத்தாம ஒழுங்க வேலையை பாரு, நல்ல பொண்ணா நாங்க பார்க்கிறோம், வீட்டுல கடைசி பையன் நீ, ஒழுகங்கா சமர்த்தா நடந்துக்கோ,

சரி,

சரி சரினு சொல்லிட்டு நாளைக்கு அப்படி இப்படினு எதும் பண்ணாதே, புரியுதா

சரி

சரி வைக்கிறேன், (அடடடா பெரியவன்ன்ன்ன்னாம்ம்ம்ம்ம், இதுக்கெல்லாம் பயந்தா என்னோட லட்சியம் என்னாவறது)

அடுத்து அரை மணி நேரத்தில் அம்மா காலிங்
(அண்ணன் செஞ்ச அதே அட்வைசை அம்மாவும் சொல்றாங்க, என்ன பண்ண தாயாச்சே, உடனே வாக்கு கொடுத்துட்டேன், கண்டிப்பா நீங்க பார்க்கிற பொண்ணையே கட்டிக்கிறேன்னு)

நாளைல இருந்து பொண்ணுங்க ஆர்குட்ல இருந்து வந்தா நான் அண்ணா சொல்லிடடனும், அடடா என் அம்மா என்னை இப்படி குழப்பிட்டியே, தங்காய்னு சொல்லிடனும்.

காலை 7 மணி

உப்ப்பிலியப்பா, எல்லாரையும் நல்லா வையப்பா (ம்கூம் என்ன உப்பிலி திப்பிலி அதான் எல்லாம் நாச்மா போச்சே, போய்யா வென்றுனு சொல்லனும் உன்னை)

மறுபடி போன்,

இப்ப யாரு அட்வைஸ் பண்ண போறாங்க‌ ஹலோ ஹாய் ஹாய் (ஐ லேடிஸ் வாய்ஸ், அய்யய்யோ லேடிஸ் வாய்ஸ்) யாருஙக நீங்க‌


(தொடரும்ம்ம்ம்)

29 June 2009


--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

கேள்வி-பதில்

நானும் எவ்ளோதான் பொறுமைகாப்பேன், யாராச்சும் எனக்கு 32 கேள்வி கேட்டு மடல் போடுவீங்கனு பார்த்தா ஒருத்தரும்
கேட்கலை, அதனால சும்மாதானெ இருக்கோம் நாமும் ஒரு பதிவை போட்டா என்னன்னு நானே 30கேள்விக்கு பதில் எழுதி போட்டுட்டேன்,
இத சாக்கா வச்சாவது என்னோட வலைப்பதிவை எட்டிப்பாருங்க எல்லாரும்......!!!!


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர்
பிடிக்குமா?

முழுப்பெயர் : ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ், ஏன் என்ற காரணமெல்லாம் பெருசாக இல்லை, இது எங்கள் குடும்ப பேர்னு கூட் சொல்லலாம், என் மூன்று அண்ணன்களுக்கும் ஓம் ஸ்ரீ ஜெய என்றே பேர் இருக்கும்,

இந்த பேரை நான் எதிரில் இருப்பவரிடம் சொன்னாலே அவர்கள் ஒரு நிமிடம் ஸ்தம்பிப்பார்கள், மனோதத்துவரீதியாக மற்றவருடன் எளிதாக ஊடுறுவி
நட்பு வளர்க்க அல்லது காரியம் சாதிக்க(சும்மாவா வில்லனாக்கும்) இந்த பெயர் எனக்கு உதவி இருக்கிறது.

இந்த பெயரையும் நான் விரும்பாமல் இருக்கவும் செய்திருக்கிறேன், வங்கி கணக்கை தொடங்கும் விண்ணப்பபடிவத்தை நிரப்பும் போது,
இடம் பத்தாது :(.

******
2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு தோழி விளையாட்டாக அவர்கள் அப்பாவை பற்றி குறை சொன்னப்ப, அப்படிலாம் சொல்லாதனு அறிவுரை சொல்லப்போக
கண்ணுல தண்ணிவச்சுண்டேன்ன்ன்.

******
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

என்னால ஒரே மாதிரியான கையெழுத்தை மீண்டும் போட வராது, மறந்துடுவேன், இதனால் பல முறை வங்கிகளில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது, இதற்கு கூட எதோ
போபியானு பேர் வச்சி இருக்காங்க, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கும் இதே போன்ற பிரச்சனை இருப்பதாக படித்தபின்புதான், இதன் மூலம் ஏற்பட்ட
தாழ்வு மனப்பான்மையிலே இருந்து வெளி வந்தேன், நானு ம் ஒரு காலத்துல சினிமால பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிறேன்.

******

4. பிடித்த மதிய உணவு என்ன?

என்னால அரிசி சாதம் சாப்பிடாம இருக்க முடியாது, அலுவகம் பக்கத்தில் இருக்கும் ஆந்திரா மெஸ்க்கு போயி ஒரு கட்டு கட்டினாதான் சாப்பிட்ட ஒரு திருப்தி கிடைக்குது எனக்கு.

******

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பார்த்தவுடனும் இல்லை, பார்க்காமலே கூட என்னால் சாத்தியம் என்றே நம்புகிறேன், இதுக்கு எங்க தமிழ் நண்பர்கள் குழுமம்தான் சாட்சி,

******

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

குத்தாலத்துக்கு போயி அருவியிலே குளிக்காம வந்தது நான் ஒருத்தனாதான் இருக்கும், அதென்னமோ பொது இடத்தில் அத்தனை பேர் முன்னிலையில்
குளிக்க பிடிக்கலை,

கடலில் குளித்து இருக்கிறேன், பிரத்யேகமான தனி இடத்தில் நண்பர்களுடன் மகாபலிபுரத்தில், நீச்சல் தெரியாததால அதோட சுகத்தை முழுமையாக அனுபவிக்கலை

******

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

முதன் முதலில் பார்க்கும் போதா,

பெண்ணா இருந்தா மெட்டி இருக்கானு பார்ப்பேன், ஆணா இருந்தா கூட யாராச்சும் கூட்டிட்டு வந்திருக்கானானு பார்ப்பேன்.

உண்மையாக சொலனும்னா கண்னையும் உதட்டில் உள்ள சிரிப்பின் நிஜத்தையும் பார்ப்பேன், என்னால் ஓரளவுக்கு எதிரில் இருப்பவரின்
மனநிலையை உணரமுடியும், அவர் எப்படி பட்டவர் என்று,

சரியாக ஊகிக்கப்பட்ட எல்லாரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

தவறாக ஊகிக்கப்பட்டவர்கள் ஒரு வேளை நல்ல நண்பர்களாக இருக்க கூடியவர்களாக கூட இருந்திருக்க கூடும்,

******

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

கோபம் சாதரணமாக வராதது எனக்கு பிடித்தது, வரும் கோபம் சாதரணமாக இல்லாதது எனக்கு பிடிக்காதது

சாதாரணமா எனக்கு கோபம் வராது

கோபம் வந்துட்டா, அது சாதரணமாக இருக்காது

(வருஙகால ஹீரோவாக்கும், பஞ்ச் பேசாட்டி எப்படி)

******

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விசயங்கள் என்ன?

அப்படினா? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே, சரி காதலி என்றால் முன்னாள் என்றுதான் சொல்லனும், முன்னாள் என்றாலும் அது ஒரு சிறு பட்டியல் வேறு, அதனால இதை கண்டுக்காம போயிடலாம்

******

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

நிச்சயமா அம்மாதான்,

******

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

நீல நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட்.

******

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இதை எடுத்து கொள்வான்
நல்லவன் யார் கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

இப்போதிக்கு இதுதான் கடைசியா கேட்ட பாட்டு.

******
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு
ஆசை?

வர்ணமா இல்லை வண்ணமா ?

நீலம், வானில் கலந்துடலாம் இல்லையா


******

14. பிடித்த மணம்?

பிடிச்சதுனு சொல்ல முடியாது, யோசிச்சா மல்லிகையின் மணம்தான் நியாபகம் வருது

******

15. பிடித்த விளையாட்டு?

இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்(!?)

******

16. கண்ணாடி அணிபவரா?

இல்லை,

******

17. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நல்ல திரைக்கதை அம்சமுள்ள எந்த படமும்,
முக்கியமாக கமலின் எல்லா படங்களும் பிடிக்கும்,
செல்வராகவன், கௌதம் மேனன், சசிகுமார் போன்ற இயக்குனர்களது படங்கள்,
சில சமயம் சிவா மனசுல சக்தி படங்களும் எக்கச்சக்கமாக பிடித்து போகிறது.

******

18. கடைசியாகப் பார்த்த படம்?

தியேட்டர்லயா?

சிவா மனசுல சக்தி,(3 முறை பார்த்தேன்), இந்த மூன்று முறைக்கு நடுவில் நான் கடவுள் ஒரு முறை

******

19. பிடித்த பருவகாலம் எது?

கார்காலம்தான்,

******

20. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

நிலமெல்லாம் ரத்தம் ( 2 வருடம் முன்னாடியே இணையத்தில் படித்ததுதான், இப்போ புத்தக வடிவத்தில் படிக்கிறேன்)

******

21. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை
மாற்றுவீர்கள்?

இதுவரை மாற்றியதே இல்லை, என்னமோ தெரியலை இன்னிக்கு மாற்றினேன், டாம் & ஜெர்ரி

******

22. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது புல்லாங்குழல் வகை சாதங்க்ளின் இசை, மற்றும் கிதார், சிதார் மற்றும் வீணை போன்ற கம்பி வாத்தியங்கள் இசை.

உதாரணம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் சந்தன தென்றலின் பாடல் இடையில் வரும் அந்த குழல் ஒலி.
அது புல்லாங்குழல் இல்லை ஒரு வகை ஆப்ப்ரிக்க வாத்தியமாம், அதே போல தொடாமலே ஒரு பூ எரியுதே என்ற காதல் கொண்டேன் பாடல் ஆரம்பத்தில் வரும் சிதார் வாத்திய ஒலி மற்றும் காக்க காக்க உயிரின் உயிரே போன்றவை.
பாடல்களின் வரிகளுக்கு அடுத்து நான் அதிகம் விரும்புவது இது போன்ற இசை கருவிகளின் இசையே.

பிடிக்காத சத்தம் : அம்மா பசி என்றொரு கூக்குரல்

இது வரை பிச்சையிட்டதில்லை, சில சமயம் தோணும் அந்த மூதாட்டிக்கு உதவியிருக்கலாமோனு,

******

23. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

மேலே டெல்லி மற்றும் பரிதாபாத், இப்படிக்கா பெங்களூர் வரை, இப்படி கீழே எர்ணாகுளம் வரை.

******

24. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

திறமைலாம் எதும் இல்லை, ஒரு விசயம் என்னையே எனக்கு ஆச்சர்யபடுத்தி காட்டும். என்னையே அறியாமல் சில
கமெண்டுகள் டைமிங்காக தருவேன் நகைச்சுவையாக,

******

25. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்?
தவறை ஒப்புக்கொள்ளாமல் அதற்கு மேன் மேலும் வியாக்கியானம் பண்ணி கொண்டிருப்பது

******

26. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

எதையும் அலட்சியமாக கையாள்வது, சீரியஸ்னஸ் இல்லாமல் இருப்பது,

******

27. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

ஏற்காடு, ஏற்காட்டுக்கு மட்டுமே நான் விரும்பி விரும்பி சென்று இருக்கிறேன், அதும் மழைகாலத்தில் எனது வண்டியை எடுத்துட்டு கிளம்பிடுவேன் நண்பர்களோடு முன்பெல்லாம், டெல்லியில் 6 மாதம் இருந்தப்போ தாஜ்மகால் முதற்கொண்டு ஜம்மு வரை நிறைய ப்ளான் போட்டு எல்லாம் சொதப்பி எதையும் பார்க்காம வந்தாச்சி, ஜம்முக்கு போகமுடியாம போனதுதான் எனக்கு வருத்தம், தாஜ்மகால் என்னவோ பார்க்காமல் வந்தது ஒரு குறையாவே நினைகலை,

******

28. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

யாருக்கும் கஷ்டம் தராத வாழ்கை வாழ ஆசை

******

29. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

கல்யாணம் ஆகலையே, ஆனபின்னாடி இல்லாமல் என்ற வார்த்தையே வராதே, அப்படியே வந்தாலும் அது என் அலுவலக வேலைகளாக இருக்கலாம், ஒரு வேளை என் மனைவியாக வருபவள் என் அலுவலகத்தில் இல்லாது இருக்கும்பட்சத்தில்

******

30. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

முடிவு தெரிந்த பின்பும் சுவாரஸ்யம் கூட்டும் விளையாட்டு



(எனக்கு யாரும் அனுப்பாததால நானும் யாருக்கும் அனுப்பலை, அதனால இரண்டு கேள்விகள்களுக்கு பதில் போடமுடியாத நிலமை)

28 May 2009

ஸ்ரீ ப்ரியா ஸ்ரீ - 2

காட்சி - 3

(இப்ப நிறைய ஜனஙள், அப்புறம் நம்ம இரண்டு ஸ்ரீ மற்றும் முக்கியமா கமல்ஹாசன்)

அங்கே மூடும் போது பண்ண கட், இங்கே ஓப்பன் பண்ணும் போது கதவு திறக்குது, க்தவிலே இருந்து வருவது நம்ம காதல் மன்னன் கமல்)

(கமல் வரும் போதே ஹாப்பி நியூ இயர் என்று சொல்லி கொண்டே வருகிறார், இளமை இதோ இதோ பாடலுடன் அவரது ஆட்டம் ஆரம்பமாகிறது)

(இப்போ படத்தின் டைட்டில் போடப்படுகிறது)

(கூடி இருந்த கூட்டத்தில் இரண்டு ஸ்ரீக்களுமே ஆட்டமும் கும்மாளமாகவும் இருந்தார்கள்)

(பாடல் முடியும் தருவாயில் கமல் தான் அணிந்திருக்கும் ஓவர் கோட்டை கழட்டுகிறார், கழட்ச்சி சுழற்றுகிறார், அதை ரசிகர்கள் பக்கம் தூர வீசி எறிகிறார். அது அதிர்ஷ்டக்கார ஹீரோ ஸ்ரீயிடம் தஞ்சமைகிறது)

(இங்கே பிக்சைரை ப்ரீஸ் பண்றோம்)



கதை


திரை கதை


வசனம்


டைக்ரக்‌ஷன்


மணிபாரதி


காட்சி - 4

(இப்போ இரண்டு ஸ்ரீ மற்றும் அண்டைவீட்டு குழந்தைங்கள் சிலர்)

(கீழே சப் டைடில்ல் போல குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு மற்றும் புகை பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்ற ஸ்லோகன் வர்ருகிறது)

ஸ்ரீ : நண்பனே, ஓ நண்பனே. என்னோட துக்கத்தை பகிர்ந்துக்கிறது இந்த _____ பீரும் ( சென்சார்ல ப்ராண்ட் நேம் கட் பண்ணிட்ட்டாங்க), நீயும் தாண்டா. இதுவும் என் செல்ல ப்ரண்ட். ( ரஜின் ஸ்டலிலில் லைட்டா கலங்கிய கண்ணை விரலால் துடைக்கிறான்

ஸ்ரீ : நண்பா, நீ என்ன கலங்க பிறந்தவனாடா கலக்க பிறந்தவன், ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீயும் இப்படி கமல் மாதிரி, ரஜினி மாதிரி மாஸ் ஹீரோவா ஆகத்தான் போற பார்த்துகிட்டே இரு

ஸ்ரீ : என்னமோ போடா, நேத்து ஒரு ஷூட்டிங் போனோமே, என்ன படம் அது, என்னவோ கண்றாவி படம், ஹீரோவை நாலு பேர் சுட்டும், கடைசிவரை ஹீரோ எதிர்த்து நின்னு எல்லாரையும் கொன்னுட்டு, அவன் பிழைச்சிக்கிறான், படமாடா அது. படம்னா நம்ம கமல் நடிச்சாரே மூன்றாம் பிறை. அப்படி இருக்கனும், படம்மா நடிக்கிறாங்க, கதையும் இல்லே ஒரு மண்ணும் இல்ல, 6 பாட்டு 7 சண்டை கலர் கலர்ரா பொண்ணுங்க கூட்டம் இப்படியே ஓட்டிடறாங்க.

ஸ்ரீ : நீ ஏண்டா வருத்தப்படற, இங்க சினிமால ஜெயிச்சா லக்குனு சொல்லுவாங்க, தோத்தா மக்குனு சொல்லுவாங்க, திறமைலாம் இரண்டாம் பட்சம்தான்

சிறுவன் 1 : அண்ணே, மறுபடி சொல்லுங்க குறிச்சி வச்சிக்கிறேன்.

ஸ்ரீ : யார்டா இவன்

ஸ்ரீ : இவனா, நம்ம பழனிசாமி இருக்கான் இல்லே, அவனோட பையன், அவந்தான் சினிமால டைரக்டரு ஆகனும் சொல்லி சொல்லி வாய்பும் கிடைக்காம குடிச்சி குடிச்சி செத்து போனானே, அவன் பையன். சாகறதுக்கு முன்னாடி இவன்கிட்ட எப்படியாச்சிம் நீயாச்சும் டைரக்டரு ஆகிடுனு சொல்லிகிட்டு பூட்டான், அப்ப இருந்தே பயபுள்ள கதை, வசனம்னு சுத்த ஆரம்பிச்சிட்டான்

சிறுவன் 1 : அண்ணே, டயலாக் சூப்பர், ஜெயிச்சா லக்கு, தோத்தா மக்கு

ஸ்ரீ : ஹா ஹா, பய ரொம்ப ஆர்வமா இருக்கான் போல, யாருக்கு தெரியும், இன்னும் 10-15 வருசம் கழிச்சி இவனுக்கும் யாராச்சிம் சினிமாவில முகவரி கொடுத்து அந்த படத்துல இதை பயன்படுத்துவானோ என்னவோ, யார் கண்டா

ஸ்ரீ : நண்பா, நீ ஹீரோவானா என்ன பண்ணுவ

ஸ்ரீ : நானா, நான் நிறைய கற்பனை பண்ணி வச்சி இருக்கேன்,

ஸ்ரீ : சொல்லு சொல்லு நண்பா

ஸ்ரீ : பெரிய வட்டமான வெல்வெட் மெத்தைலதான் என் தூக்கமே, அப்புறம் நான் எழுந்ததும் நான் கீழே கால் வைக்கும் முன்னமே என் காலில் செருப்பு மாட்டிவிட இரண்டு பேர், அப்புறம் எனக்கு ப்ரஷ் பண்ணி விட இரண்டு பேர், கூல்டிர்ங்ஸ், ஜூஸ் கொண்டு வர இரண்டு பேர், என்னோட பழைய ட்ரஸை கழட்ட இரண்டு பேர், மறுபடி புது டிரஸ்சை போட்டு விட இரண்டு பேர், அப்படியே ராஜா வீட்டு பிள்ளையா வாழ்வேன்.

ஸ்ரீ : சர்தான், இதுகுதான் உன் சினிமா ஆசையா, நான் ஏதோ கலைச்சேவை பண்ணுவியோனு நினைச்சேன்.

ஸ்ரீ : இப்ப சொன்னது என் பொதுவான என் ஆசை, அதை த்விர சினிமால, நிறைய அவார்ட் வாங்கனும், கமல் 3ம் பிறைல வாங்கின மாதிரி தேசிய விருது, அப்புறம் ப்லிம்பேர் விருது, அதிகமா அவார்ட் வாங்கினவனா நான் சாதனை பண்ணனும், அப்புறம் வெளிநாட்டுல எதோ சினிமாக்கு அவார்ட் தராங்களாம், அவார்டோ காரோ என்னவோ தருவாங்களாம், அதும் வாங்கனும், இதான் என் லட்சியம்

ஸ்ரீ : நண்பா, (கையில் இருக்கும் பீர் பாட்டிலை எடுத்து கொள்கிறான், இதுதான் பிலிம்பேர் அவார்ட்,உனக்கு நான் தறேன், அப்படியே இந்த இடத்தை பிலிம்பேர் மண்டபமா நினைச்சி, அவார்ட் வாங்கினதும் என்ன பேசுவன்னு பேசிகாட்டு பார்க்கலாம்


(அங்கிருந்த 7-8 சிறுவர்களும் அவர்களுக்கு முன் அமரசொல்கிறான், எல்லாரும் பலமாக கைதட்டுகிறார்கள்)

(நண்பனிடமிருந்து பாட்டிலை, பில்ம்பேர்ர் அவார்டாக நினைத்து கையில் மெருமிதத்துடன் வாங்குகிறான், பாட்டிலை அதாவது அவார்ட்டை ஒரு கையில் தூக்கு கூட்டத்தில்(?!) இருப்பவ்ர்களிடம் காட்டி
பேச ஆரம்பிக்கிறான் ஸ்ரீ எங்கிற ஸ்ரீதர வெங்கட்டரமணன்)


(தொடரும்)

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

27 May 2009

ஸ்ரீ ப்ரியா ஸ்ரீ - 1

முன் குறிப்பு:

(வணக்கம், சினிமா திரைக்கதை மாதிரியான ஒரு கதை எழுதலாம்னு யோசிச்சப்ப்ப இப்படி ஒரு கதை எழுதனும்னு தோணிச்சி
அதை எழுத போறேன், படிச்சிட்டு இது அந்த கதை, இந்த கதை, அதை உல்டா பண்ணிட்டேன், இதை கலாட்டா பண்ணிட்டேன்னு
என்னை திட்டப்படாது, இதான் முக்கிய கண்டிசனே)


(காலம் - 20ம் நூற்றாண்டின் எண்பதாம் வருடம்,
சுறுக்கமா சொன்ன ஒரு 25 வருடங்க்ளுக்கு முன்னாள்,
ஒரு டிசம்பர் மாதம் 31ம் தேதியில்)
காட்சி - 1

(இரண்டு பேர் இந்த காட்சியிலே இருக்காங்க, ஒருத்தர் ஸ்ரீ, இனொருத்தரும் ஸ்ரீ தான், முதல் ஸ்ரீதர வெங்கட்டரமணன், இன்னொருத்தன் ஸ்ரீனிவாசலு

சோ இரண்டு பேருமே ஷார்டா ஸ்ரீ, இதுல ஸ்ரீதர வெங்கட்டரமணன் எனும் ஸ்ரீ சினிமால ஹீரோவா ஆக்டு கொடுக்க காத்திட்டு இருக்கும் ஒரு துணை நடிகன், ஸ்ரீனிவாசலு என்பவன் எல்லா தமிழ் சினிவாவிலும் இருப்பது போல ஒரு காமெடிக்கான கேரக்டர், அவனுக்கு அம்மா/அப்பா/பாட்டி/தாத்தா இருக்காங்களா இல்லையா, அவன் சாப்பிட்டானா சாப்பிடலையா அவன் லட்சியம் என்ன அவனோட எதையுமே ஆஸ் யூஸ்வல் தமிழ் சினிமா போல நான் சொல்லவும் போறதில்ல, நீங்க கேட்கவும் கூடாது)


ஸ்ரீ : ஸ்ரீ ஸ்ரீ நான் உன்னை காலைல இருந்து தேடிட்டு இருக்கேன் எங்கேடா போன, உனக்கு ஒரு விசயம் தெரியுமா

(நம்ம ஸ்ரீ நான் எப்படி வருவேன் எதுக்கு வருவேன் ஏன் வரணும்னு பேசற ஹீரோ கிடையாது என்பதால் இப்படி பட்ட பஞ்ச் இல்லாமலே பேச்சி ஆரம்பிக்கிறார்)

ஸ்ரீ : என்னடா மேட்டர், இப்படி தலைதெறிக்க ஓடிவரனா எதுனாச்சிம் செம்ம முக்கியமான மேட்டராதான் இருக்கும், கமலுக்கு டூப் போடுற சான்ஸ் கிடைச்சிடுச்சா என்ன

ஸ்ரீ : அதில்லடா, இன்னிக்கு நைட் நம்ம கோடம்பாக்கம் ஏரியாவிலே இருக்கே ராஜ் ஹோட்டல, அங்க நடக்குற ஹாப்பி நியு இயர் பங்கசனுக்கு நம்ம கமலு வராருப்பா, அதுக்கு இரண்டு டிக்கெட் வாங்கிட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

(சந்தோஷத்தில் இருவருமே கொஞ்ச நேரம் ரோட்டில் ஒரு ஆட்டத்தை போட்டுவிட்டு, ராத்திரி பங்கசனுக்கு நல்ல கலர்புல் ட்ரெஸ் எடுக்க ஸ்டூடியோ போகிறார்கள்)

காட்சி : 2

(இப்ப 3 பேர், நம்ம ஸ்ரீக்கள் தவிர ஒரு கூர்க்காவும் இருக்காங்க)

ஸ்ரீ : என்ன கூர்க்கா சாப், கியா ஹாலே, கானா காயியே

ஸ்ரீ : நீ ஏண்டா வராத இந்தியை கஷ்டப்பட்டு வர வைக்கிறே, நம்ம ஊருதான்பா இவன்,
நம்ம அண்ணாநகரு சின்னசாமி இருக்கான்ல, அவனோட மாமாவோட பெரியப்பா மகந்தான் இவன்,

ஸ்ரீ : அட, அப்பட்டியா, இவன் நிஜ கூர்கா இல்லையா

ஸ்ரீ : ஸ்டூடியோ மேனேஜரு நம்க்கு வேண்ட்டப்பட்டவரு, அவர்தான் சொன்னாரு முதலாளி நல்ல கூர்காவையா போடனும்ன்னு, என்ன இருந்தாலும் கூர்கா அதர் ஸ்டேட்டு, அதர் கண்ட்ரி

ஸ்ரீ : இன்னாப்பா கெட்ட வார்தைல திட்டற

ஸ்ரீ : அட இங்க்லீசுப்பா, ஹீரோவா ஆகனும்னா இங்க்லிஸு பேசனும் இல்லே, அதான் இப்ப இருந்தே பழகறேன்

ஸ்ரீ : சர்தான், பா,

ஸ்ரீ : சின்னசாமி, உள்ளார நம்ம ப்ரொடக்சன் மேனேஜர் இருக்காரா

கூர்கா: ஏன்பா சின்னசாமினு கூப்பிட்டு என் வேலைக்கு குழி வைக்கிறே, குருசிங் போல் ஹை

ஸ்ரீ : அட, ரொம்பதான் பயப்படாத, சுத்தி எவனும் இல்ல, எங்கே புரடகசனுகாரன்

கூர்கா: உள்ளதான் இருக்காரு, கூட வனிதாவும், டிஸ்கஸ் பண்ண கூட்டியாந்தானாம்,
மனசுல டைரகடருனு நினைப்பு, முதலாளி பணம் இப்படியா போகுது

ஸ்ரீ : அட சினிமானா அப்படி இப்படித்தான் இருக்கும், அதெல்லாம் ரோட்டுல இருக்கிற பள்ளமா நினைச்சி வண்டியை ஒதுக்கி
ஒதுக்கி ஓட்டனும், அத வுட்டு பள்ளம் இருக்கே பள்ளம் இருக்கேனு விசனப்பட்டா எதிர் வண்டில மோத வேண்டியதுதான்,
யாருக்கு தெரியும் நம்ம புரடக்சன் மேனேசர் கூட டைரக்டு பண்ணலாம் யார் கண்டா? ஏன் நீ கூட இப்ப கூர்க்கானு ஏமாத்திகினு சுத்தறியே
இதையே ஒரு மேட்டரா வச்சி நீ கூட அண்ணாநகரு கூர்க்கா, கூர்க்காகாரன்னு எதுனாச்சிம் சினிமா எடுக்கலாம், யார் கண்டா நடந்தாலும் நடக்கும்?

ஸ்ரீ : சீக்கிரம், வாப்பா உள்ளே, அவரு வரதுகுள்ளே உள்ளே இருந்து நல்லதா நாலு செட்டு ட்ரெஸை எடுப்போம், இல்லாங்காட்டி இந்த மாதிரி
ட்ரெஸ்ல போனோம் சாயந்திரம் பங்கச்னுக்கு உள்ளே விடமாட்டானுங்கோ.

(இரண்டு ஸ்ரீயும் ஸ்டூடியோ உள்ளே போய் நல்லதா நாலு ட்ரெஸ் எடுத்துகிட்டு, ட்ரெஸ்சிங் ரூம் போறாங்க, ட்ரெஸ்சிங் ரூம் கதைவை மூடும்போது அங்கே கட் பண்றோம் சீனை,)

காட்சி - 3

(இப்ப நிறைய ஜனஙள், அப்புறம் நம்ம இரண்டு ஸ்ரீ மற்றும் முக்கியமா கமல்ஹாசன்)

அங்கே மூடும் போது பண்ண கட், இங்கே ஓப்பன் பண்ணும் போது கதவு திறக்குது, க்தவிலே இருந்து வருவது நம்ம காதல் மன்னன் கமல்)






(தொடரும்)


--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

25 May 2009

ரோம் - தி வாரியர் - 7

வகுப்புகள் எப்ப்போதும் போல் நடந்து கொண்டே இருந்தன

தாஸின் புதல்வர்கள் நால்வருக்கும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம், குறிப்பாக அம்பு எறிதல், துப்பாக்கி சுடுதல் மாதிரியான வகுப்புகளும் அவர்களுக்கு உண்டு, ஹார்ஸ் ரைடிங் போன்ற கலைகளும் கற்றுதரப்பட்டது,

ரோமொயோ, பிரண்டன், லக்ஸ் மற்றும் சரத் நால்வரும் பிரின்சி விஸ்வாவுக்கு செல்ல பிள்ளைகளாயினர், படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு, பேச்சி போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பல்துறை வித்தகர்களாக அவர்கள் மாறி கொண்டிருந்தனர்,

தாஸும் தாஸின் மனைவிகளான கௌஷிகா, கனிகா மற்றும் சுபா என அயோநீர் பங்களா முழுவது குழந்தைகள் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை தாங்காமல் சோகத்துடனே இருந்தார்கள்.

பிறகு எல்லாரும் ஏக மனதாக அவர்களை மீண்டும் அழைத்து வர முடிவு செய்தனர், ஆனால் தாஸ் அதற்கு உடன்பட வில்லை, அவர்கள் பள்ளி படிப்பை முடிக்கும் முன் இங்கே வருவதை அவர் சுத்தமாக விரும்பவில்லை,

தாஸ் மாணவர்களை பற்றி அறிய பிரின்சி. விஸ்வாவிடம் தொடர்பு கொண்டார், அவர்களது பட்டப்படிப்பு விரைவில் முடியப்போகிறத்ன்றும், நால்வரும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்,

தாஸுக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை, பிறகு விஸ்வா தாஸிடம் ஒரு கோரிக்கை வைத்தார், இண்டர்நேசனல் காம்பட்டீசனுக்கு தங்களது மூத்தமகனான ரோமியோவையும், மூன்றாவது மகன் லக்சையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.

வெளிநாடு என்றதும் முதலில் பதறிய தாஸ், பிரின்சி.விஸ்வாவும் செல்வதால் அரை மனதோடு ஒத்துக்கொண்டார்.

போட்டிக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் ரோமியோ மற்றும் லக்ஸை தன்னுடன் அழைத்து கொண்டு விஸ்வா கிளம்பினார்


(தொடரும்)
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

21 May 2009

மீண்டும் வந்தியதேவன் - 2

சரஸ்வதி மகாலில் சந்தித்த உருவம் நினைத்தாமாத்திரத்தில் எதிரில் தோன்றுவதாக தோன்றியது


அப்போது


அந்த உருவம் மெல்ல மெல்ல அவனை நெருங்கியது போல உணர்ந்தான், அது அவனுக்கு கட்டளையிடுவது போல தோன்றியது, அவன் மெதுவாக மூர்சையாகினான்,

திடுக்கிட்டு விழித்துபார்த்தான், ரயில் சேலத்தை நெருங்கி இருந்தது, ஏழு மணி நேர பயணம் ஏழு நொடிகளில் கடந்தது போல உணர்ந்தான்,
ரயில் சேலம் சந்திப்பில் நின்றுகொண்டிருந்தது காலை ஐந்தரை மணியென அங்கிருந்த மணிக்கூண்டு பெரிதாக பரைசாற்றியது. , சப்வேவில் இறங்கி நுழைவாயிலை அடைந்தான்,
எதிர்புறம் இருந்த கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்து இழுத்தான், அது நுரையீரல் வரை சென்று அவனை சுகப்படுத்தியது, அனறு சரஸ்வதிமகாலில் நடந்தது மெதுவாக மனதில் நிழலாடியது, சிலிர்த்தான். சீக்கிரம் நண்பனின் வீட்டுக்கு சென்று என்ன நடந்தது என்று விவரிக்க வேண்டும் என்று தனக்குதானே சொல்லிக்கொண்டு அவனது நண்பனுக்கு கால் செய்ய தொடங்கினான்.

எதிர் முனையில் ரிங் சென்றுகொண்டே இருந்தது, தூங்கி இருப்பானோ. இருக்கலாம், நண்பன் கொஞ்சம் சோம்பேறி என்பதை அவன் அறிவான், இதை எதிர்பார்த்ததுதான் என்பது போல் மெல்லிதாக புன்னைகத்து கொண்டான்,

மீண்டும் முயற்சித்தான்.... பலனில்லை....

கடையில் தூக்ககலக்கத்தோடே இருந்த வாலிபனிடம், ” பாஸ், இங்கே லாட்ஜ் எங்கே இருக்கு.

அவன், “ பக்கத்துல ஒன்னு இருக்கு சார், இப்படிக்கா நேரா போயி வலது பக்கம் திரும்புனிங்கனா ஒரு ரோடு வரும் அந்த ரோட்டுல கடைசிக்கா போனா ஒரு ஒரு லாட்ஜ் இருக்கு சார்.

லாட்ஜ் எப்படி நல்ல டீசண்டான லாட்ஜ்தானே.

அட, ரொம்ப நல்ல லாட்ஜ் சார், உங்களை பார்த்தாவே ராசா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருக்கீங்கனு அந்த லாட்ஜை சொன்னேன், இல்லாங்க்காட்டி, இங்க இருந்து மூனு தெரு தள்ளி ஒரு லாட்ஜ் இருக்கு, அதை சொல்லி இருப்பேன், படு கலீஜ் சார்,

கடைகாரன் பேசியது முதலில் சொன்ன லாட்ஜின் மார்கெட்டிங் எக்ஸிக்கூட்டிவாக இருப்பானோ என்று குரு மனதில் நினைத்தான், சுமார் மூன்று நான்கு மணி நேரம் சிரம பரிகாரம் செய்ய எந்த லாட்ஜா இருந்தாலும் சரியே என்று நினைத்தான், முதலில் சொன்ன லாட்ஜை நோக்கி நடக்க ஆரம்பித்தான்,
அந்த சாலையின் இருபுறமும் கடைகள் இருந்தன, ஆனால் கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்தன, அந்த சாலையின் வலது பக்கம் திரும்பி சென்று கொண்டே இருந்தான், அவன் மனதில் யாரோ பின் தொடருவது போல இருந்தது, ஆள் நடமாட்டமே இல்லாடமல் சாலை வெறிச்சென்று ஓடியது, பின் யார் வருகிறார்கள் என்று பார்க்க மெதுவாக திரும்பினான்,

யாரும் பின்னாள் இல்லை, மனப்பிரம்மையாக இருக்கலாம் என்று தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் நடக்கலானான்,

பாதி தூரம் சென்றது மீண்டும் யாரோ தொடருவது போல காலடிச்சத்தம் கேட்டது.
உடல மெலிதாக சிலிர்த்து நடுங்கியது, இம்முறை சட்டென திரும்பினான்,

(தொடரும்)

(தொடரும்)