30 October 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 1

சொட்டு சொட்டாக சொட்டிக்கொண்டிருந்தது மழைத்துளி, மழையில் நனைந்து அனுபவிக்காத விரக்தியில் மேகம் போல் கருத்து போனது அர்ஜூனின் முகம். அதற்கு காரணமான 15000 மதிப்புள்ள அழைப்பேசியில் யாருடனோ கிசு கிசுத்து கொண்டிருந்தான்.

(இப்படி சிறுகதை பாணியிலே தொடர்ந்தா எனக்கு அழுகிய முட்டை வீச்சு நிச்சயம் என்ற பயத்தில், அதே உரைநடை டைப்புக்கு மாறிக்கிறேன்)

ஹலோ, நான்தான் பேசறேன்....

*****

நான் என்ன பண்ண மழை வரும்னு எனக்கு எப்படி தெரியும்

*****

ஏய்ய்ய், புரிஞ்சிக்கோயேன் ப்ளீஸ்...

****

ஆபிஸ் வாசலிலேயே நிக்கறேன்...

****

வண்டி மழையிலே நனைஞ்சி ப்ராப்ளம்னு மெஸ்ஜேஜ் அனுப்பினேன் நீ பார்க்கலையா

****

சரி, சரி... நீ சாமியாடாத, எப்படியாச்சும் பஸ்ல வந்து சேர்ரேன் போதுமா

****

நீ எங்கே இருக்க, அதே இடத்துலதானே

****

சரி.. நான் அங்கயே வரேன், 20 நிமிசத்துல அங்கே இருப்பேன் ஓகேவா...
(கடவுளே)...

------------------------------------

(DMS பேரூந்து நிறுத்தம், சென்னை..)

பாஸ், மெரினாக்கு எந்த பஸ் இங்க இருந்து

13B வருங்க. அப்புறம் 11H கூட போகும், இரண்டும் வெவ்வேறு ரூட்டுங்க,

ஓகே பாஸ், தாங்க் யூ...

11H வருது பாருங்க...

அட, ரொம்ப நன்றிங்க, வரேங்க...

(டபார்னு பேருந்தின் படிக்கட்டின் முதல் படியில் வலது காலை வைத்து, பேருந்தின் இரண்டாம் படியில் இடது காலை வைத்து பேருந்தினுள் நுழைந்தான் அர்ஜூன் எனெற்ல்லாம் எழுதிட்டு இருக்க முடியாது )

சார் மெரினா ஒன்னு கொடுங்க சார்

சில்லரை கொடுங்க சார் எல்லாருமே 50-100னு நீட்டினிங்கனா எங்கே போவேன் சில்லரைக்கு சொல்லுங்க

(சில்லரை சதீசை கூட்டிவந்து அடமானம் வச்சியிருக்கனும்) சார் டிக்கெட் எவ்ளோ சார்,

7ரூ

ஓ சாரி, இந்தாங்க 10ரூ..

சார் ஒரு 2ரூ இருந்தா கொடுங்க, மிச்சம் 5 ரூபாய கொடுத்திடறேன்.

ஓ சாரி பாஸ், எங்கிட்ட வேற சேஞ் இல்லை சார்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.

ஓகே, நோ ப்ராப்ளம்
(சே இந்த செல்போன் வேற... இப்ப எஸ் எம் எஸ் வேற டைப் பண்ணனுமா இந்த கூட்டத்துல... wait. ill rch 20mins.k )

எஸ்க்யூஸ் மீ... சேப்பாக்கம் ஒன்னு...

எக்கிட்ட ஏன் கொடுக்கிறிங்க, ஓ ஓகே, ஐ வில் ஹெல்ப் யூ டோண்ட் வர்ரி.
பாஸ்.. சேப்பாக்கம் ஒன்னு...

7ரூ. டிக்கெட் சார், சேஞ் 2ரூ இருந்தா கொடுங்க 5ரூ தந்துடறேன்.

மேடம்... 2ருப்பிஸ் இருக்கா, ஹி வாண்ட் எக்ஸாக்ட் ருப்பிஸ்.

இல்லை, மெதுவா சேப்பாக்கம் பக்கத்துல வந்ததும் கொடுத்தா போதும்.

பாஸ் சேப்பாக்கம் வந்ததும் கொடுத்திருங்க.
(ஓ காட் ஒரு 5 மினிட்ஸ் விடறதில்லை, உடனே போன் பண்ணிடறது சே)
ஹலோ... என்னா சொல்லு....

*****

வந்துட்டேன், பக்கத்துல வந்துட்டேன்,

****

இன்னும் 5 நிமிசத்துல அங்கே இருப்பேன்
(சேப்பாக்கம் ஸ்டாப் வந்ததை அறியாமல் போனில் பிசியாக அர்ஜூன்.

இந்தாங்க சார் பேலன்ஸ் 6ரூ. உங்களோடதும், அந்த மேடமோடதும்

ஓகே ஓகே வந்தாச்சி வை கூட்டம் வேற அதிகம், தேங்க் யூ பாஸ்...
( தேடினாலும் கிடைக்காத சர்ப் எக்ஸெல் கறையை போல காணாமல் போயிருந்தாள் அவள் )

பாஸ், சேப்பாக்கம் தாண்டியாச்சா, அட அதை தாண்டி வண்டி தலைமை செயலகமை நெருங்கிட்டு இருக்கு.

அய்யயோ, ஹோல் டன் ஹோல் டன்.........

(தொடரும்ம்ம்ம்)

No comments: