15 May 2009

திருவிளையாடல் - 1

(திருவிளையாடல் பேரை வச்சுட்டேனு யாரும் திட்டாதீங்க, ஸ்ரீயைதான் திருவாக்கி விளையாடிட்டேன், தப்பு,தவறு,குத்தம் குறை எதுவும் இருந்தா எல்லாரும் என்னைய உங்க வீடு புள்ளையா நினைச்சி மன்னிசிடுங்க, மன்னிப்பு கேட்டு நான் மனுசனாகிட்டேன், மன்னிச்சி நீ சாமி ஆயிடுங்க)

இனி...

(வெள்ளி மாலை 6 மணி)

மச்சி ஸ்ரீ, எங்க இருக்க, கிளம்பிட்டியா நீ...

இன்னும் இல்லை தணிகை, ஏன் என்ன விஷயம்..

இன்னிக்கு எங்க வீட்டில நாடி ஜோசியம் பார்க்க போறோம், நீயும் வாயேன், நீ வேற குவைத்

போகப்போற, அதுவுமில்லாம மதம் வேண்டாம் குலம் வேண்டாம் I want only குணம் பணம் வேண்டாம் நிறம் வேண்டாம் I want just want only மனம் மலாய் மலரோ துபாய் குயிலோ சென்னை கோவை நெல்லை நிலவோ...னு மாதிரி ஸ்டேட்டஸ் மெஸேஜா வேற மாத்திகிட்டே இருக்க, அது பத்தியும் கேட்டுக்குவோம்டா, வாடா.

ஏண்டா எது எதுக்குதான் நாடி பார்க்க்ணும்னு விவஸ்த்தையே இல்லையா, விட்டா கனவிலே நமீதா வரனும்னுலாம் நாடி பார்ப்பீங்க போல இர்க்கே, நான் வரலை, எனக்கு அதிலே நம்பிக்கையும் இல்ல,

டேய் என்னடா இப்படி சொல்லிட்டே, நான் தேனாம்பேட்டைலதாண்டா இருக்கேன், நெர்குன்றம்

போகனும்டா, இப்பவே லேட் ஆய்டுச்சி,

அதைச்சொல்லு லிப்ட் வேணும்னு கேளேன் அதுக்கு எதுக்கு இந்த நாடி பில்ட் அப்லாம்,

அங்கயே இரு நான் ஒரு 10மினிட்ஸ்ல வரேன்.

மச்சி யூ ஆர் மை பெஸ்ட் ப்ரண்ட் மச்சி.

(10நிமிடம் கழித்து)

வா மச்சி, வந்து குந்திக்கோ, என்னை நம்பி வண்டில வரனும்னு ஆசைப்பட்டுட்ட உன் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள்.

ஏண்டா பயமுறுத்துற, கிளம்பு நேரம் ஆச்சி, அங்கே எல்லாரும் நாடி பார்த்துட்டு இருப்பாங்க, நீயும் வா உனக்கும் பார்க்க சொல்லலாம்.

பார்க்கலாம்..........

(8.30 நெற்குன்றம் நாடி பார்க்குமிடத்தில்)

எல்லாருக்கும் பார்த்தாச்சா, மச்சான் நீ பாருடா இப்போ,

டேய் எனக்க்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லெடா, கம்முனு இருடா தணிகை

நீ சும்மா இரு, ஐயா இவரு பேரு ஸ்ரீ சுருக்கமா ஓம் ஸ்ரீனு கூப்பிடுவாங்க, இவருக்குதான் நாடி பார்க்கனும், இன்னும் கொஞ்ச நாள்ல குவைத் போயிடுவாரு அதுக்குள்ள அவரு மனசில இருக்குறது நடக்கனும்மாம்,

தம்பி உட்காருங்க தம்பி, தம்பி கையை நீட்டுங்க

நாடினு சொன்னீங்க, ரேகை பார்க்கிறார்,

உங்களுக்கு ரேகையே போதும்னு நினைச்சேன், வேணும்னா சொல்லுங்க பார்ப்போம் 2500 தான்,

வாயு நாடி, பித்த நாடினு சொல்லி 7 நாடிதான் மனிதனுக்கு படிச்ச ஞாபகம், நீங்க2500னு சொல்றீங்களே.
தம்பி தமாசா பேசுதே, நான் பீஸூ சொன்னேன் தம்பி,

2500 பீஸா, அப்ப ரேகைக்கு எவ்ளோ.

அது ப்ரீ....

ப்ரீயா ஏன் அது மட்டும் ப்ரீ,

உங்க ப்ரண்ட் 4 பேர்க்கு பார்த்தாங்க 4 பேர் பார்த்தா ஒரு கைரேகை ஜோசியம் ப்ரீப்பா.

என்னது 4 பேரா 2500 * 4 =(அடடா பாஸ்கரன் இருந்தா இப்படி அப்படினு எதாவது சூத்திரம் வச்சி கண்டுபிடிச்சிடுவாரு, நான் எங்க்கே போவேன் அந்த பார்முலாக்கு, அட செல்போன் கால்குலேட்ட்டர்ல பார்க்கலாமே அய்ய்யோ...) 10000 யா, மச்சி ரொம்ப அதிகமாச்சேடா,

மச்சி அதனாலதாண்டா உன்னை கூட்டி வந்தேன், ப்ரீயா பாரு, அப்புறம் எங்கிட்ட தனியா பில் கட்டிடு,

நண்பன் மாதிரியே பேசினியேடா, நல்லா இரு,

தம்பி கையை காட்டுங்க, ம்ம்ம் நல்ல தீர்க்காயுசு, அட தம்பி கடல் கடந்து போவீங்க,

பின்ன குவைத்க்கு கடல் கடந்து போகாம, நடந்தா போவாங்க,

இருங்க தம்பி, ம்ம்ம் அதிர்ஸ்ட்ட தேவதை மின்னல் மாதிரி வரப்போறா. அதுவும் நாளைக்கே வரப்போறா.

நாளைக்கா எப்படி,

எப்படினு என்னை கேட்டா உங்க கை சொல்லுது தம்பி,

இடியட் கை, நான் கேட்கும் போது எதுவே சொல்லமாட்டேங்குதே.

தம்பி விளையாடாதீங்க தம்பி உங்க தேவதை நாளைக்கு மின்னலா வரப்போறா, நீங்களே அடுத்த நாள் என்னை பார்க்க வருவீங்க.

யாரு நானு, உங்களை? பார்க்க வருவேன்? நாளைக்கு முழுதும் நான் ரூம் விட்டே போக மாட்டேன்,
எப்படி நீங்க சொன்னது பலிக்குதுனு பார்க்கலாம்.

தம்பி கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிகிட்டும் கொடுக்கும் தம்பி,

நல்ல வேளை எங்க ரூம் காங்ரீட் ரூப், எதுவும் ஆகாது,

கிண்டல் பண்றீங்க, நாளைக்கு மட்டும் என்ன ந்டக்குது பாருங்க அந்த தேவதைக்காக நீங்க அலையோ அலைனு அலையப்போறீங்க, இது மட்டும் நடக்காட்டி என் பேரை மாத்திக்கிறேன் நான்,

உங்க மாத்தாத பேரை இப்ப சொல்லுங்களேன்,

நாடி சோதிட சக்கிரவர்த்தி " ஸ்ரீ ஸ்ரீ *ஸ்ரீ மூர்த்தி*"


தொடரும்

No comments: