15 May 2009

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 3

அவ என்னென்னமோ பேசினாடா என் கையை பிடிச்சிகிட்டு. சுமார் 1.30 ஹவர்ஸ் பேசி இருப்பா.

1.30 மணிநேரமா என்ன பேசினா?

என்ன பேசினானு எனக்கு என்ன தெரியும்? எனக்கு தான் கன்னடம் தெரியாதே.

டேய் ஸ்ரீ என்னடா சொல்ற அப்ப அவ தமிழ் கிடையாதா. சுத்தம் எதாவது பிரச்சனைனா பிரிச்சி எடுத்துடுவானுங்களே.

மச்சி கன்னடம் தெரியாட்டா என்னடா எனக்கு தெரிஞ்சா ஓட்ட இங்க்லீஸ்ல அவகிட்ட பேச, அவளும் அவளுக்கு தெரிஞ்ச இங்க்லீஸ்ல எங்கிட்ட பேசினா, மேட்டர் என்னடானா அவளுக்கு ஒரு வேலை வேணும்.

படுபாவி. நானே நல்ல வேலை கிடைக்காமதான், காலைல சிஸ்டம் அட்மினாகவும், நைட் லாட்ஜ்ல சூப்பரவைசாராகவும் இருக்கேன், நான் எப்படிடா

மச்சி உன்னால முடியும் மச்சி, டிரை பண்ணுடா

சரி, அவ என்ன படிச்சிருக்கா, டிப்ளோமாவா

இல்ல.

பின்னே ஆர்ட்ஸ் க்ரூப் ஸ்டூடண்டா

இல்ல

அதுவும் இல்லனா சைன்ஸ் க்ரூப் இல்ல பிஸினெஸ் மேனேஜ்மெண்ட் எதுடா சொல்லி தொல

எதுவும் இல்ல, அவ 8த் பெயில்.

இதுக்கு என்னை என்ன வேலை பார்க்க சொல்ற கண்ணா

மச்சி நீ இருக்கிற லாட்ஜ்லயே ஒரு வேலை கொடுத்துடல்லாம்டா

லாட்ஜ்ல,, அதுவும் சிவாஜி நகர்ல இருக்கிர லாட்ஜ்ல, நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னை போறேன்

டேய் என்னடா இப்படி சொல்றே, பாவம்டா அந்த பொண்ணு

டேய் அவளுக்கு நான் பாவம் பார்த்தேன் நான் பாவமாயிடுவேன். லாட்ஜ்ல எப்படிடா ஒரு பொண்ணுக்கு வேலை வாங்கி தர முடியும். ஒரு பொண்ணு ப்ராஸ்ட்டியூஸன் தான் அங்க பண்ண முடியும்.

அப்ப அதுவே இருக்கட்டும்டா.

அடிச்செருப்பால நாயே. இது மட்டும் நம்ம ஆளுங்களுக்கு தெரிஞ்சது உன்னையும் என்னையும் 3 வாரத்த்க்கு உடாம சோறு தண்ணியில்லாம திட்டுவாங்க மெயில்ல.ப்ராஸ்ட்டீயூசன்னா பாலியல் தொழில்டா.

ஓ ஐம் சாரி. அப்போ என்ன பண்ணலாம்

முதல்ல அவ யாரு என்னனு சொல்லு

அவ ஒரு அநாதையாம் அப்பா அம்மா இல்லை.

அப்பா அம்மா இல்லாட்டிதாண்டா அநாதை.

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ். அவள் இதுக்கு முன்னாடி இருந்த காப்பகத்துல சரியான வசதிகள் இல்லையாம், அதானால இவளை வேறொரு காப்பகத்துக்கு போக சொல்லிட்டாங்களாம். அங்க போக பிடிக்காமதான் வேலை எதாவது கிடைக்குமானு பார்த்துகிட்டு இருக்கா

ஆமாம் அவனவன் எம்சிஏ, பி.ஈனு படிச்சிகிட்டு லோ லோனு அலையிறான் அவளுக்கு என்ன வேலை கிடைக்கும், நீ அவ கிட்ட அந்த காப்பகத்துக்கே போக சொல்லு, வேலை கிடைச்சா சொல்றோம் அப்போ கூப்பிடுறோம்னு சொல்லு, என்ன புரியுதா,

சரிடா, ஆனா அவகிட்ட இப்ப காசில்லேடா, எப்படி போவா, வா நாமளே போய் பத்திரமா சேத்திடுவோம்.

எனக்கு உன் மேல டவுட்டாவே இருக்கு, நீ ஏன் இப்படி பண்றேனு தெரியலை பொதுநலம், பொது தொண்டுனு ஓட்டினே பின்னி புடுவேன். ஸ்கூல் வாசல்ல்ல இருந்த அந்த பாட்டிகடைல 250ரூ அக்கவுண்ட் வச்சி ஏமாட்தினவன் நீ, மறைக்காம உண்மையை சொல்லு, யார் இவ?


(தொடரும்)

No comments: