(இந்த கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் முழுக்க முழுக்க கற்பனையே, யார் மனதையாவது புண்படுத்தும் நோக்கம் இல்லை)
(இக்கதையில் மொத்தம் 3 பேர் மட்டுமே. க்ரிக்கெட் வீரராக செந்தில், அவரது நண்பராக ஜெய் ம்ற்றும் கல்லூரி மாணவியாக ப்ரியா)
மச்சி மச்சி எழுந்திருடா டைம் ஆச்சி,
டேய் எனக்கு சனிக்கிழமை லீவுதாண்டா தூங்கவிடுடா...
மேட்ச்க்கு லேட் ஆய்டுச்சிடா, வண்டில டிராப் பண்ணிட்டு போடா, மணி 7.30 ஆய்டுச்சி, 8 மணிக்கு மேட்ச்.
சோ வாட். பஸ்ல போ...
கிட்ஸ் எடுத்துட்டு போனும்டா, வந்து தொலையேண்டா. வந்தா ஆப்பிள் ஜூஸ் வாங்கி தறேண்டா.
------------------
சிக்கன் ப்ரியாணி
------------------
ஓகே, ஒரு கிங்ஸ் பாக்கெட்.
மச்சான் இப்பதாண்டா நீ என் நண்பேன். கிளம்புடா...
(என் நண்பன் தந்த தம்மு, கேட்டா த்ருவார்ன் ரம்மு நட்பை கூட வோட்கா போல எண்ணுவேன்ன்ன்)
கஷ்டகாலம், சீக்கிரம் வாடா பூந்தமல்லி ரோட்டில் இருக்கிற பாபா காலேஜ்க்கு போகனும்.
பூந்தமல்லியா, தூரம் அதிகமாச்சே, அப்போ ஆப்பிள் ஜூசும் வேணும்,
(மேட்ச் முடிச்சிட்டு வந்து உன்னை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கிறேன்) ஓகே டன் வந்து தொல
(எல்லாம் முடிஞ்சு காலேஜுகுள்ள எண்டர் ஆனா)
மச்சான் என்னடா க்ரிக்கெட் மேட்ச்னு சொன்னே இங்க என்னடானா எல்லாரும் மேட்ச் மேட்சா உட்கார்ந்துகிட்டு இருக்காங்க.
இன்னிக்கு காலேஜ் எக்ஸ்சாம் டா அதான் க்ரூப் ஸ்டடிங்க்ல இருக்காங்க. மேட்ச் காலேஜ் பின்னாடி க்ரவுண்ட்ல, ஓகே வா,
மச்சி அப்ப நான் கிளம்பறேன்.
பார்த்து போடா, பிட்டு போடறேன் கடலை போடறேன்னு எந்த பொண்ணு பின்னாடியும் சுத்தாதே.
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மச்சி, நீ போய் ஒழுங்கா விளையாடுடா.
உன் இஷ்டம். எவனாவது இல்ல எவளாவது அடிக்க வந்தா வண்டியை விட்டுட்டு ஓடிடாதே... பை
அழகா இருக்கேன்னு பொறாமை படாதிங்கடா. பை
(திரும்பி வரும் போது ஜெய்க்கு ஒரு பொண்ணு தனியா படிச்சிகிட்டு இருக்கிறதை பார்க்கிறான்)
அடடா அடடா. யப்பா உப்பிலியப்பா, உன் கண்ணை தொறந்துட்டயப்பா, எனக்கு நல்வாழ்வை காமிச்சிட்டயேப்பா.
இப்பவே போறேன் பர்ஸ்ட் மீட்டிங், நெக்ஸ்ட் டேட்டிங்கு ( அட அட கவித கவித)
ஹாய், ஹெவ் ஆர் யூ
ஃபைன். நீங்க? உங்களை இதுக்கு முன்னாடி பார்தமாதிரியே இல்லையே?
என்னங்க சுதா என்னை மறந்துட்டிங்களா? நான் உங்க காலேஜ் உங்களுக்கு சீனியர். நான் 2006 கம்ப்ளீட் பேட்ஜ். இப்ப ஞாபகம் வருதா.
சாரி, நான் சுதா இல்லை.
(அதான் தெரியுமே, பேரை சொல்ல வேண்டியதுதானே) ஓ அப்படியா சாரி நான் 2007 பாஸ் அவுட் ஸ்டூடண்ட், எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் டிபார்ட்மெண்ட். நீங்க பார்க்க சுதா மாதிரியே இருந்தீங்க, தட்ஸ்வாட்? சாரி பார் தி இன்கன்வினியண்ட்? பை த பை யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்.?
(மாலையில் அறையில்)
மச்சான் மேட்ச் ஜெயிச்சிட்டோம், இன்னிக்கு நைட் உனக்கு ப்ரியாணி, ஓகேவா
வேண்டாம் டா.
ஏண்டா, என்ன ஆச்சி, காலைல எதாவது பொண்ணுகிட்ட பிட்டு போட்டு கிக்கு எதாச்சும் வாங்கினயா.
அதெல்லாம் இல்ல, நீ ஏண்டா அந்த காலேஜ் 2007லதான் ஓப்பன் பண்ணாங்கனு சொல்லலை,
அதை விடு, அது ஒரு ஆர்ட்ஸ் & சய்ன்ஸ் காலேஜ்னாச்சும் சொல்லி இருக்கலாம் இல்லே.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கதை நல்லா இருக்கு அண்ணா
Post a Comment