31 December 2009

சிறு(தொடர்)கதை - 2

இரண்டாம் அத்தியாயம்


எனது மாத சேமிப்பு 50-100ல் ஒரு 10 ரூபாயை இழந்த நாள் அது. பாக்டரியில் வேலை நேரம் 8.30 முதல் 5 மணி வரை. ஆனால் 5 மணியில் கிளம்புவது என்பது சிரமமான ஒன்று. கண்காணிப்பாளரின் அனுமதி கிடைத்தால் சாத்தியப்படும். அதிகபட்சம் மாதம் இரு நாட்கள் 5 மணிக்கே பாக்டரியில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கலாம். மற்ற்படி 7 முதல் 8 வரை கூட பணி இருக்க நேரிடும்.
இரண்டு டீ, நான்கு உப்புபெறாத உப்பு பிஸ்கெட் கிடைப்பது மட்டுமே ஓவர்ர் டைம் பரிசு.

அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக 10ஐ நெருங்கிவிட்டது. எனது அலாரம் அடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரமாகிவிட்டிருந்தது. எத்தனை லிட்டர் தண்ணியாலும் அந்த அலாரத்தை நிறுத்த முடியாமல் தோற்று போனது. டெஸ்பேட்ச் நாட்களில் 9 மணி தொடுமென்றாலும், அன்று அதிகபடியான டெஸ்பேட்சின் காரணமாக நேரம் அதிகரித்துவிட்டது. கடைசி பேருந்து 10.30 என்பது அலாரத்தின் அலறல் என் காதில் மேலும் அதிகமாக கேட்க வைத்தது. ஒரு வழியாக பணி மேற்பார்வையாளர் பிச்சை போடும் முகபாவத்தோடு கிளம்ப அனுமதி தந்தார். எல்லாம் முடித்துக்கொண்டு அறை வரும்போதே எஸ் எஸ் ம்யூசிக் சானலின் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் முடிந்து போய் ஒரு மணி நேரம் மேல் ஆனதை அடுத்த அறை 45 வயசு பிரம்மச்சாரி முருகேசனின் குறைட்டையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

பசி, பயணம், வேளை பளு என்று எல்லாம் சேர்ந்து என்னை ஈவு இரக்கமில்லாமல் அடித்து போட்டது. அசதியில் அடுத்த நிமிடமே உறங்கி போனேன். தூக்கம் ஒரு நல்ல பொழுது போக்கு. கண்களை திறந்து கொண்ட கனவுகளையே கண்டிருக்கிறேன், தூக்கத்தில் கனவுகளை கண்டதில்லை அல்லது நியாபகம் வந்ததில்லை. என்றும் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும் பசி அலாரத்தை முந்திக்கொண்டது அதிகாலை கனவு ஒன்று. கீழ் அறை ராஜூக்கு கனவில் அடிக்கடி நடிகைகள்தான் வருவார்களாம். எதோ நிஜமாகவே வந்துவிட்டதை போன்ற குதுகலிப்பான். ஏனோ எனக்கு கனவுகள் வருவதில்லை. வந்த அந்த கனவும் நடிகைகள் வரவில்லை. வந்தது ஒரு நடக்கடலில் ஒரு மரக்கலம் ஒற்றை துடுப்புடன்.

எதோ ஒரு கவிஞருக்கு போக வேண்டிய கனவு வழி தவறி எனக்கு வந்துவிட்டது போலும். அதிகாலை கனவு பலிக்குமாம். ஒரு வேளை கடல் தாண்டி பயணிப்பேனோ வழியில் எதும் கப்பலோ, விமானமோ நொருங்கி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பேனோ என்றெல்லாம் விபரீத கற்பனைகளாளும் காலை அலாரத்தை நிறுத்த முடியவில்லை. வழக்கமான சிற்றுண்டிக்கு பிறகு பேருந்து நிறுத்தம் வந்ததும்தான் நினைவுக்கு வந்தது பஸ் பாஸ் மறந்து போனதை. ம்ம் இன்று ஒரு அநாவசிய நட்டம்.

பாஸ் இருக்கும் நாட்களில் கண்டக்டரை தேடி கூட்டத்தில் நகர அவசியமில்லை, அவர் வந்து சோதிக்கும் போது நீட்டினால் போதும். பேருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. சென்னை எல்லா மாதமும் சித்திரைதான். எப்போது பெண்கள் வரிசையில் ஏறும் வழியிலேயே நடத்துனரின் இருக்கை இருக்கும். அதனால் பெண்கள் பகுதியில் கொடுத்து கண்காணிப்பதே ஷேமம்.

எதோ ஒரு பெண்மணியிடம் காசை தந்து பயணச்சீட்டுக்காக காத்திருக்கையிலே பின்னாளில் இருந்து ஒரு குரல். குரல் திசையை நோக்கி நான். அந்த குரல் என்னை கவரவில்லை. அவளும் என்னை கவரவில்லை. 4.50 ஒன்னு என்றாள். கையில் கைபை. கூட்டத்தில் ஒரு கையில் பாலன்ஸ் செய்து கொண்டு ஒரு கையால் ஒரு 5ரூபாய் நீட்டிக்கொண்டிருந்தாள். வாங்கி கொண்டு ஒரிரு நொடிகள் அவளை நோக்கினேன். சாத்தானின் பார்வை. உடையை சரி செய்து கொண்டால். எதையோ மிதித்தது போல் இருந்தது. அறை எண் 18 தாமு அதைதான் கடவுள் தரிசனம் என்பான். 36 வயது பிரம்மச்சாரி. இரண்டு தங்கைகள். கடைசி தங்கைக்கு சமீபத்தில்தான் திருமணமாகியது.

பேருந்து பயணத்தில் தினமும் காணும் முதியவர்களுக்கு இடம் தராத பெண்கள், கை குழந்தைகாரிகளுக்கு உதவாத இளம்பெண்கள், ஓயாத செல்பேசும் காரிகைகள், கூட்டத்தில் பிதுங்கும் நங்கைகள், மேற்கம்பியை பிடிக்க கையை உயர்த்தும் போது யாராவது கண்களால் கற்பழிக்கிறார்களா என நோட்ட்மிடும் குமரிகள் என பல்வேறு மறந்து போகும் முகங்களில் அவளும் ஒருவளாக இருந்தாள்.

அந்த ஒருவள் ஒரு நாள் எனது அத்தியாயங்களில் ஒன்றிபோகாவிட்டாலும், ஒன்றாகி போனாள். ஒன்று என்பதும் சரியில்லை எதோ சிலவரிகளாகி போனாள்

தொடர்ந்து அவள் இரண்டு வாரங்கள் என் பார்வையில் பட்டுக்கொண்டிருந்தாள். கோபபார்வை மறைந்து போனது. மெல்லிய புன்னகை படந்திருக்கும். அந்த இரண்டு வாரங்களில் எனது அலாரம் கொஞ்சம் பழுதடைந்தது போலும். நேரங்கள் தடம்புரண்டன. நான் இறங்கும் முந்தைய நிறுத்ததில் இறங்கி கொண்டிருந்தாள். மறுபடி குருவைதான் கேட்டேன்.

அநாவசியமா காதல் கீதல்னு இறங்காதே, என்று சுறுக்கமாக நிறுத்திக்கொண்டான். எனக்கு குருவை பிடிக்காமல் போனது. செந்தில் தான் என்னனென்னவோ சொன்னான். அவனை பிடித்துப்போனது. காதலுக்கும் காமத்துக்கு உள்ள வித்தியாசத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.

மீண்டும் பசி.


(தொடரும்ம்ம்)

சிறு(தொடர்)கதை - 1

முதல் அத்தியாயம்

மார்கழி பனியை மெல்ல மெல்ல தின்ற சூரியன் தன் பசியால் சிவந்த கண்களை வெண்மையாக்கி கொண்டிருந்தது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

கண்ணாடியில் தெரிந்த பிம்பத்திடம் எத்தனையோ முறை கேட்டும் விடை அது தந்ததில்லை. தரப்போவதுமில்லை. யாரிடமும் கேட்கவும் தோன்றியதில்லை.

கேட்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை. எல்லாருடைய நகைத்தலுக்கும் பாடுபொருளானேன். விடைதான் கிடைத்ததில்லை. உடைந்து போன செல்போன், நேரத்தை கண்டுபிடி என்று கண்ணாமூச்சி ஆடியது.

பசிக்கிறது. நேரம் 8ஐ நெருங்கிவிட்டது. ஆதிகாலத்தின் முதல் கடிகாரம் வயிறாகத்தான் இருக்க வேண்டும். புதியதாக வாங்கிய நோக்கியா போன் மின்னியது. காதில் மாட்டிக்கொண்ட ஹெட்போன் வெளிப்புற சத்தங்களை உறிஞ்சிக்கொண்டு இசையை துப்பியது.

செவிக்கு உணவில்லாத போது........... வள்ளுவர் பொய் சொல்லி இருப்பாரோ.

சென்னை வாகன நெரிசல்களில் உருமிக்கொண்டு ஊர்ந்து செல்லும் வாகனங்களை போல பசி ஏற்றம் இறக்கமாக நீள்கிறது.

சென்னையில் ஒன்று பெரிய உணவுவிடுதிகள் அல்லது கச்சடா உணவுவிடுதிகள். இரண்டு மட்டும்தான். நடுத்தர வர்கத்திர்ர்ர். நான்கு இட்லி - அதை இட்லி என செல்ல முடியாது கொஞ்சம் உப்பிய கையடக்க தோசை - இது பெரிய ஹோட்களில் விலை 22ரூ. குறைந்த பட்சம் 8 இட்லி தேவைபடும் என் பசியில் பாதி குறைய. 10ரூபாய்க்கே நாலும் கிடைக்கிறது கச்சடா ஹோட்டல்களில். மணி அங்கேதான் சாப்பிடுறான். எனக்கு அது ஒவ்வுவதே இல்லை.

நீ ஏன் இப்படி இருக்க... குருவின் கேள்விக்கு இன்றுவரை என்னிடமே பதில் இல்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி...

சென்னையில் வீடு கிடைப்பது குதிரை கொம்பு. அதும் நமது விரும்பும் பட்ஜெட்ல அமைனும்னா சும்மாவா. சென்னை வந்ததும் நண்பனின் நண்பனோட நண்பனின் அறையிலேதான் வாசம். ஒரு வாரம் தங்கிக்கனு தாராள மனதுடன் சொல்லிவிட்டார் ந.ந.ந. ஆனா ஒரு வாரத்திலே எப்படி பிடிக்க வீட்டை.

அடுத்த நாளே ஒரு வீட்டை பார்த்தாச்சி. 2200 வாடகை. 15000 அட்வான்ஸ். வாங்கிற 4500 சம்பளத்துக்கு எப்படி சாத்தியப்படும். அதுக்கு அடுத்த நாளும் டிட்டோ. குருதான் ஒரு யோசனை சொன்னான். உன் நண்பர்கள் யாராச்சும் சென்னையிலே இருந்தா ஷேர் பண்ணிக்கோ என்று. குரு ந.ந.நவின் நண்பர். இந்த மூன்று நாட்களில் எனக்கும் நல்ல நண்பராகிருந்தார்.

குரு, இப்போ சென்னையில இருக்க ஒரே நண்பன் நீ மட்டும்தான். பத்மாசுரனுக்கு வரம் தந்த சிவனாக குரு. இங்கே ஏற்கனவே 5 பேர் இருக்கோமே. நான் எதும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நான்காவது ந. சாப்பிடலாமா - இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

8தானே இப்போ, ஒரு 9.30 சாப்பிடலாம். கொஞ்ச நேரம் கேரம் விளையாடிட்டு வரோம். சமையல்காம்மா செஞ்சி வச்ச சப்பாத்தி குர்மா வாசனை படந்தது, 7.30 என் அலாரம் அடித்தாகிவிட்டது.
அவர்களை விட்டு சாப்பிடவும், பசிக்கிறதென்று சொல்லவும் சங்கோஜமாகவே இருந்தது. வீட்டுக்கு பேசனும்னு பொய் சொல்லி வெளியேறி விட்டேன். கையிலே 200க்கும் குறைவுதான், அதில்தான் இந்த வாரத்தையே ஓட்டியாகனும். பசிக்கு இந்த சிந்தனையே கொஞ்சமும் இல்லை.

2 பரோட்டா.....

சாப்பிடவா, பார்சலா

சொன்னேன். சுட சுட வந்தது. சாப்பிட்டேன். ம்ம் 9.30 வரை கண்டிபாக தாக்கு பிடிக்கலாம்.

இன்னும் செல்போன் வாங்கலையா, குருதான், அவனை தவிர யாருக்கும் என்னிடம் பேசினதில்லை. எதிரில் வரும் போது புன்சிரிப்பு, அதிகபட்சம் பாஸ் அந்த கதவை சாத்திடுங்களேன்,

இல்லை குரு, அதான் வீட்டுக்கு பேச.... சின்ன வயசிலே இருந்தே சின்ன சின்ன பொய்க்கும் நடுங்கும் கால்கள்.

என்னோட நம்பரை கொடுத்துருங்க, எதாச்சும் அவசரம்னா கூப்பிட உதவியா இருக்குமில்லே.

ரொம்ப தேங்ஸ் குரு... நான் நினைந்திருந்த சென்னை மெல்ல மெல்ல மூழ்கி கொண்டிருந்தது.

எல்லாரும் ஆட்டத்தில் மும்முரமானார்கள், பாதி பசி என்னோடு தனியாவர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது. பசி மயக்கம். அரை தூக்கத்தில் அண்ணே உங்க ஐடி கார்டு என்ற சத்தம் கேட்டுதான் விழித்தேன். ஹோட்டலிலேயே விட்டுட்டு போயிட்டிங்க. சாப்பிட்ட இடத்தில் தவறவிட்டிருக்கிறேன். அவர்கள் என்னையும் அந்த பையனையும் மாறி மாறி பார்த்தார்கள். பையன் வந்த வேலை முடிந்தது என ஓடிப்போனான். அவர்கள் எதும் கேட்கவில்லை. கேட்டால் என்ன பதில் சொல்லுவது. அவமானமாக இருந்தது.

குரு மெல்ல ஆரம்பித்தான் நீ வேணும்னா சாப்பிட்டு படுத்துக்க. இல்லே எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம். பசியில் குரல் கம்மி போனது.

எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சாப்பிடவந்தார்கள். எனக்காகவே என்பது புரிந்தது, சந்தோசத்தையும் கொஞ்சம் கூச்சத்தையும் தந்தது. குருவோடு சேர்ந்து செந்தில், சுரேஷ், மாரிமுத்து, பாலாஜி எல்லாரும் நண்பர்களாகி போனார்கள் அன்றே. பாஸ்.

குருதான் தனியாக வந்து கேட்டான் ஏன் இப்படி இருக்க? பசிச்சா இங்கயே சாப்பிட வேண்டியதுதானே.
அநாவசியமா ஏன் ஹோட்டல் போற இங்கயே இருக்கும் போது. எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஒரு மணி நேரம் கூட பசியை தாங்க முடியாமல் ஏன் எனக்கு மட்டும் இப்படி.

பழைய நிகழ்ச்சி அசைப்போட்ட படியே வந்து சேர்ந்தாயிற்று ஹோட்டலுக்கு.
என்ன வேணும் என்று சர்வர் கேட்கவே இல்லை, கடந்த 7-8 மாதமாகவே காலையிலே 4 இட்லி ஒரு வடைதான். சரியாக 25ரூ. குரு மற்றும் அவரது நண்பர்கள் எல்லாம் திசைக்கொரு பக்கம் பிரிந்து போன பின் என் முக்கிய பிரச்சனையே சாப்பிட்டில்தான். காலை 25ரூ, மாலை 40ரூ, இரவு 35ரூ, சரியாக ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு 100ரூபாய். இந்த வரிசையை மாற்ற விரும்ப வில்லை. இத்தனை வருட சென்னை அனுபவத்தில் பசியை அடக்க முடியவில்லை, கொஞ்சமாக குறைத்து இருக்கிறேன். தினமும் ஒரே வகை சாப்பாடு. அலுத்துபோனாலும் மாற்ற முடியவில்லை. மதியம் ஆனந்தாவில் முழுசாப்பாடு. இரவு சேட்டு கடையிலே ஏழு சப்பாத்தி. வாங்கும் 6500 சாப்பாட்டில் 3000ரூ சாப்பாட்டிற்கே போய்விடுகிறது.

அறையிலயே சமைக்கலாமில்லே, குரு ஒரு பழைய அறையின் தட்டு, முட்டு பாத்திரங்களை தர தயாராகத்தான் இருந்தான். இடம்தான் இல்லை. 10x10 அறை. இந்த அறைக்கு 1200ரூபாயாம். பஸ் பாஸ் வாங்க ரூ 600 போக. மாசம் 1700 மீந்தும். அதும் வீட்டுக்கு அனுப்பிவிட மிஞ்சுவது 50ஓ 100ஓ.
100ரூ மிச்சமாகும் நாட்களில் மாதம் ஒரு படம். அதுவும் இரண்டாம்தர தியேட்டர்களில் மட்டும், அங்குதான் முதல் வகுப்பு 30ரூ. மிச்சம் 20 முதல் 70வரை. அதில் தான் குளியல் சோப், துவைக்கும் சோப் இன்ன பிற சில்லரை தேவைகள். மிச்சமாகும் 50ரூ நாட்களில் சினிமா பக்கத்து அறை நபர்களின் டீவியில் வரும் சத்தம் மட்டும். சில நாட்களில் கமல். ரஜினி, அஜித், விஜய் குரல்கள் குழப்பும். நால்வரும் சேர்ந்து எதோ சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்றே நினைப்பேன்.

உனக்கு எப்போ கல்யாணம்? எதேச்சையாக சந்திக்கும் பழைய தெரிந்த முகங்கள் துக்கம் விசாரிக்கும். பார்த்துகிட்டு இருக்காங்க என்பேன். வேறு எதும் சொல்லும் எண்ணமில்லை. நானிருக்கும் நிலைமையில் திருமணம் செய்து கொடுக்க சுற்றத்தில் யாருக்கும் விருப்பமும் இல்லை. ஏண்டா 30 தாண்டியாச்சே இன்னும் எத்தனை நாள் தனியாக இருப்ப, எதாச்சிம் பொண்ணை லவ் பண்ணியாச்சும் கல்யாணம் பண்ணிக்கலாமில்லே, கேட்பது என் மேலதிகாரி. அதில் கொஞ்சம் இழக்காரம் கலந்திருக்கும்.

ஆரம்ப நாட்களில் செந்தில் சொல்லி இருக்கிறான். சென்னையிலே கடல் காற்றும் காதலும்தான் சுலபமாக கிடைக்கும். வெள்ளந்தியாக எப்படி காதல் பண்றதுனு கேட்டுத்தொலைத்தேன். அன்று சனிக்கிழமை இரவு. முதல்ல நல்ல ட்ரெஸ் பண்ணனும். என் முக வாட்டத்தை பார்த்த குரு அதெல்லாம் அவசியமில்லை என்று ஆரம்பித்தான். டைம் இஸ் மணி. டைம் இஸ் கோல்ட் என்றான்.
பெண்களை கவர பணம் இல்லை தங்கம் வேண்டும். இல்லாட்டி அதே மதிப்புடைய காலம்தான் வேண்டும் என்று குரு கொஞ்சம் குழறியபடி சொன்னது, விவேகானந்தரிடம் ஞானபதேசம் பெற்ற சீடனை போல குதுகலிக்கை வைத்தது.

பேருந்தில் பார்த்த பெண்களில் அழகாய் தோன்றியவளைதான் காதல் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். உபதேசம் நடந்த இரண்டு வாரமாகியும் என்னால் பேருந்தில் எந்த பெண்ணின் மேலும் காதல் வரவில்லை. அடுத்த சனி இரவு. செந்தில் சொன்னான். அழகான பெண்கள் ஏன் பேருந்துல போகப்போறாங்க என்றான். பாதி புரிந்தது. ஏன் பெண்களை இப்படி நினைக்கிறிங்க என்று கேட்டதுதான் தாமதம். யாரும் உபதேசம் செய்யாமலே எனக்கு புரிந்தது. சனி இரவு பிரம்மச்சாரிகளிடம் பெண்களை பற்றியோ, காதலை பற்றியோ பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன். ஞாயிறு விடுமுறையாக போனது நல்லதாய் போயிற்று. தூங்கும் போது மணி நாலாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு தோல்வி இருக்கிறது.

தோல்வி பயம் என்னை பேருந்தினுள் எந்த பெண்ணும் என் கண்ணுக்கு தெரியாமல் செய்துவிட்டது.

என்ன செய்ய கண்ணுக்கு தெரியாமலும் சில நுண்ணுயிரிகள் இருக்கத்தானே செய்கிறது.

(தொடரும்ம்)

07 December 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 6

சே ஒரே ரப்சர். ஏண்டி அவன்கிட்ட நம்பர் வாங்கினே. அநாவசியமா உன் நம்பரை அவனுக்கு கொடுத்து வம்பிலே மாட்டிக்காத. மூஞ்சை பார்த்தாலே பொறுக்கி ராஸ்கல்லுனு அப்பட்டமா தெரியுயுது.

போடி அப்படிலாம் தெரியலை, துறு துறுனு இருக்கான், அப்பாவித்தனமான முகம்...

அடிப்பாவி... எனக்கென்ன... நீயாச்சு அவனாச்சு...

------------------------------

அர்ஜூன் இன்னிக்கு பைக்ல வரலையா

பைக் சர்வீஸ் கொடுத்தேன், இன்னும் வர்லை, நானும் இன்னிக்கு உன்னோட பஸ்லதான்...

சரி வா போகலாம்.. டேய் ஒரு 100ரூ கொடுடா நாளைக்கு தந்துடறேன்.

எங்கிட்ட எங்கேடா அவ்ளோ காசு...

அடப்பாவி, 3ரூபாய் கடனுக்கு 100ரூ திருப்பி தந்தவந்தானேடா நீ. நான் எத்தனை 100 எத்தனை தடவை உனக்கு அழுதுறுக்கேன், ஒரு கைமாத்தா கேட்டா சலிச்சிக்கிறே.

அத ஏண்டா நியாபகபடுத்துறே, ஒரு மாசமாகி போச்சி இன்னும் அந்த பொண்ணு கால் பண்ணவே இல்லை.

ம்ம் இதுக்குத்தாண்டா ஓவரா ஆடக்கூடாதுங்கிறது.

இப்ப நான் என்ன உன் கூட வரக்கூடாது அவ்ளோதானே, கிளம்பு நான் என் ப்ரண்ட் சுதாகரோட பைக்ல போயிக்கிறேன்.

இதுக்கொன்னும் குறைச்சலில்லைடா, எக்கேடு கெட்டு போ. நான் தனியாவே போயிக்கிறேன்.

(சுதாகருக்கு கால் பண்ணி இருக்கானானு கன்பார்ம் பண்ணிக்கனும்.)
ஹலோ சுதா, நான் அர்ஜூன், எங்கேடா இருக்க ஆபிஸ்லயேதானே இருக்க

எஸ் டா, நீ

உங்க ஆபிஸ் கீழே இருக்கேன், ரொம்ப நாளேச்சே உன்னை பார்த்துட்டு போலாம்னுதான்.

டேய் 2 பில்டிங் தள்ளி என் ஆபிஸ் இத்தனை நாளா பார்க்கத்தோனாதவன் இன்னிக்கு பார்க்கத்தோனுதா. சுத்தி வளைக்காம மேட்டரை சொல்லு.

டேய், என்னடா நீ உன்னை ரொம்ப நாளேச்சே பார்க்கனும்னு நினைச்சேனடா, அப்படியே உன் கூட நைட் டின்னர முடிச்சிட்டு உங்கூடயே வண்டில போய் ரூமுக்கு போனும்னு நினைச்சேனேடா, இப்படி நட்பை கொச்சை படுத்துறியேடா.

இதான் உன் ப்ளானா, சரி சரி வந்து தொலை....... இங்கே எனக்கு கொஞ்சம் நல்ல பேர் இருக்கு, கெடுத்திடாத. இங்க இருக்க பொண்ணுங்களை ஏறெடுத்து பாக்காம என்னோட அறைக்கு வா.

இதோ வந்துட்ட்ட்ட்ட்டே............ வந்துட்டேன் டா, மச்சி கிளம்பலாமா..

அடப்பாவி இவ்ளோ வேகமா இருக்கே, இரு கொஞ்சம் சின்ன வேலை முடிச்சிடறேன், உடனே கிளம்பலாம் பொறு.

ம்ம் உனக்கு தனி ரூமு, தனி போன் கனெக்சனு... அய்யோ.......

ஏய் தொடாத, ஆபிஸ் போன் ஆபிஸ் யூஸ்க்கு மட்டும்தான்,
ராசி... அந்த பைல் முடிச்சிட்டியாமா, அத கொஞ்சம் கொண்டுவாம்ம்மா.

யார்டா ராசி. உனக்கு பி.ஏ வேறையா,

உஷ், பி.எலாம் இல்லை என் ஜூனியர், எதும் பேசாம அமைதியா இரு, என் பேரை கெடுத்துடாத.

ம்கூம், இதுக்கொன்னும் குறைச்சலில்லை.

எஸ்க்யூஸ் மீ சார்.

ம்ம் வா.. ராசி... பினிஷ்டா?

ம்ம் முடிச்சாச்சி சார், நான் நல்லா ஒருதடவைக்கு இரண்டு தடவ செக் பண்ணிட்டேன், நீங்க கண்ண மூடிட்டு கையெழுத்து போடலாம்.

ஹாய் ராசி, நான் அர்ஜூன் நியாபகம் இருக்கா, உங்க ப்ரண்ட் மீராவோட ப்ரண்ட்.

டேய் என்னடா இது.

ம்ம் இல்லடா இவங்கள எனக்கு முன்னாடியே தெரியும், என்னோட ப்ரண்ட்தான், இல்லையா ராசி.

இல்லை... ம்ம் ஆமாம்

ஆமாம் ஆனா பேர் ராசினு இன்னிகுத்தான் தெரியும். அப்புறம் ஹௌ ஆர் யூ ராசி.
உங்க ப்ரண்ட் இப்படி ஏமாத்திட்டாங்களே.

என்ன ஏமாத்திட்டாங்க, என்ன ப்ரச்சனை.

சார் நான் சொல்றேன் சார். நம்ம ஆபிஸ் மீரா இவர்கிட்ட ஒரு நாள் பஸ்ல போறச்ச ஒரு 100ரூ தர வேண்டியதா போகிடுச்சி. அத அடுத்த நாள் தரேன்னு சொல்லி இருந்தா இவர்கிட்ட,

ம்ம் இவன் தந்தானா.....

ஏன் டா இப்படி ஆச்சர்யமா நம்பிக்கையில்லாமா இழுக்கிறே, நான் தான் கொடுத்தேன், என் போன் நம்பரும் தந்தேன் அடுத்த நாள் தர சொல்லி, ஏமாத்திட்டா...

சார், ஏமாத்திட்டானு சொல்லாதீங்க, அன்னிக்கே அவ அவங்க அப்பா அர்ஜெண்டா கூப்பிட்டாருனு ஊருக்கு போயிட்டா, அதனாலதான் தர முடியாம போயிடுச்சி..

ஓகே ராசி நீ போம்மா, நான் பார்த்துக்கறேன்.

ம்ம் இந்த பொண்ண பார்க்கத்தான் என்னை பார்க்க வந்ததா சொன்னியா நீ.

ஏய் சத்தியமா இல்லை, எனக்கே இந்த பொண்ணு இந்த ஆபிஸ்னு தெரியாது. மீரா?

மீரா போன மாசமே ரிசைன் பண்ணிட்டா, அவ அப்பன் அவளுக்கு நிச்சயம் பண்ணிட்டான் அவன் மாமன் பையனோட, அன்னிக்கு போன் பண்ணினப்ப பாவம் ஒரே அழுகை, அவளுக்கு விருப்பமே இல்லையாம்...

ஓஹ் அவ போன் நம்பர் கிடைக்குமா.

எதுக்கு ? அருவா வெட்டு வாங்கவா.... உனக்கு 100ரூ தானே வேணும், நானே தந்துடறேன்.

இல்லடா அந்த பொண்ணை நான் சின்சியரா...........

சின்சியரா.......... டேய் வேண்டாம், பொண்ணுக்கு நிச்சயம் நடந்தாச்சி, அதும் மதுரைக்காரைங்க, சும்மா பார்த்தாலே அருவா எடுத்துகிட்டு அலப்பரை பண்றவைங்க, கம்ம்னு இருந்துக்கோ.

டேய்.. கொடுடா... நான் பேசிக்கிறேன். எப்படியோ, நீ தந்தேன்னு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.

அடி செருப்பால, அதை வேற சொல்லுவியா நீ, கொன்னே பூடுவேன், இதான் அவ நம்பர் 98*** *****.
அநாவசியமா என்னை வம்புல மாட்டாம இருந்தா அது போதும்

தேங்க்ஸ்டா மச்சி. சரி இந்த ராசி?

இவளும் அவளும் தோஸ்த், சாதா தோஸ்த் இல்லே, இவகிட்ட பேசறச்ச அவ நம்பரை தந்தேன்னு சொல்லிவச்சிடாதே, அப்புறம் மானமே போயிடும்.

இவ எந்த ஊரு மச்சி?

அது எதுக்கு உனக்கு.. எதோ சின்சியர்னு சொன்னியேனு மீரா நம்பர் தந்தேன்.

இருக்கட்டும்டா, ஒரு வேளை மீராவை என்னால சந்திக்கவே முடியாம போயிடுச்சின்னா

போயிடுச்சின்னா???

நான் என்ன தேவதாஸ் மாதிரியாடா சுத்த முடியும்,

என்ன சொல்ல வர நீ???

இல்லே ராசியோட போன் நம்பரையும் கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்.........