09 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 5

டேய் திவா... அவ...

எவ....

அவடா, அங்கே பார், யெல்லோ சுடிதார்...

அட இத்தனை நாள் என் கண்ணுல சிக்கலையே இவ...

டேய் நீ ஆபிஸ் போ, நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். அந்த ஆளு கேட்டா எதாச்சும் சொல்லி சமாளி,

அடப்பாவிங்களா, எல்லாரும் ஒரே மாதிரியாத்தான்யா இருக்கிங்க.

***************
( அதே நேரத்துல அங்கே )

சரி இப்போ சொல்லு யார் அவன்..

நேத்து பஸ்ல எங்கிட்ட இருந்து 3ரூ சுட்டுட்டான் டி.
(ப்ரம் த பிகினிங் நடந்த மேட்டரை சொல்லி தொலைக்கிறாள் மீரா)

ஒரு மூன்று ரூபாய்க்கா இதெல்லாம்,

நான் என்ன பண்ண இப்படி பைக்ல எல்லாம் பாலோ பண்ணிட்டு வருவான்னு எனக்கு எப்படி தெரியும்.

ஒழுங்கா இருந்துக்கோ உன்னை வேற பொண்ணு பார்க்க வராங்க, இந்த நேரத்துல வீண் சிக்கலில்லே மாட்டிக்காத.

எனக்கு பயமா இருக்கு, திடிர்னு வந்து நின்னு ஒரு கப் காபி சாப்பிட போலாமானு கேட்டு வந்து நிப்பானோன்னு பயமா இருக்கு.

டோன் வர்ரி அப்படிலாம் கேட்க மாட்டேன்ன்.. இப்பதான் பழரசம் சாப்பிட்டு வந்திருக்கேன்,
ஹாய்...... என் பேர் அர்ஜூன், உங்க பேர்

ஏய் நீ எப்படி இங்கே...

அததான் விதினு சொல்றாங்க.

மிஸ்டர், ஈவ் டீசிங்ல உள்ள போகனுமா...

என்னங்க எவ்ளோ கண்ணியமா வந்து பேசிட்டு இருக்கேன், எதோ ரோட் சைட் ரோமியோஸ் கணக்கா ரியாக்ட் பண்றிங்களே.

உங்களுக்கு என்ன வேணும்...

எனக்கில்லை உங்களுக்குத்தான் வேணும்.. சேஞ்ச்

வ்வாட்...

(ம்ஹூம் ஆவ்வூன்னா இதை யூஸ் பண்ணிடுவிங்களே) 3ரூ மிச்சம்ங்க.

ஒன்னும் அவசியமில்லை அத நாங்க பிச்சைகாரனுக்கு போட்டதா நினைச்சிக்கிறோம்.

ஹலோ அதை நீங்க ஏன் சொல்றிங்க, உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை நான் மஞ்சுளாகிட்ட
பேசிக்கிறேன்.

ஹலோ, என் பேர் மஞ்சுளா இல்லை.

அப்புறம் வேற என்ன?

அத சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனா கூப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இருக்கே, ஏய், வா, நீ, போனு கூப்பிட முடியாதே,

ஷட் அப்.

இந்தாங்க 100ரூ மிச்சம் 97ரூ கொடுங்க,

என்ன விளையாடுறிங்களா, நாங்க என்ன சில்லரை வியாபாரமா பண்ணிட்டு இருக்கோம்.

அப்போ மிச்சம் 97ரூ நாளைக்கு... வேண்டாம் சாயந்திரம் பஸ் ஸ்டாப்ல மீட் பண்ணிட்டு அப்படியே ஒரு காபி சாப்பிட்டு சேஞ்ச் மாத்திட்டு அந்த 3ரூபாய கொடுத்திடறேன், ஓகேவா.

மிஸ்டர் தொந்தரவு பண்ணாதீங்க, முடிஞ்சா இப்பவே கொடுங்க, இல்லே ஆளை விடுங்க.

அதெப்படிங்க முடியும், நான் ஒரு கடன்காரன் என்ற இமேஜோட எப்படி என்னால வாழ முடியும்.
இந்த 100ரூபாய பிடிங்க, மிச்சத்தை எப்போ முடியுமோ அப்போ திருப்பி தாங்க, அதுவரை
அதுவரை நாம ப்ரண்ட்சா இருப்போம்,
மறுபடியும் சொல்லிக்கிறேன்... ஹாய் ஐம் அர்ஜூன்.. உங்க பேர்..........

இன்னும் வைக்கலை....

ஹலோ நானும் பார்த்துட்டு இருக்கேன் அப்ப இருந்து மஞ்சுளாவை பேச விடாம நீங்களே பேசிட்டு இருக்கிங்க,

என் பேர் மஞ்சுளா இல்லை.

இல்லைனு சொல்றிங்களே தவிர இருக்கிறதை சொல்ல மாட்டேன்றிங்களே.

ஓகே... தாங்க, நாளைக்கு இதே நேரத்துல மிச்சத்தை வாங்கிக்கோங்க.

இன்னிக்கு சாயந்திரம்ம்ம் முடியாதா?

நோ வே...

சரி.. உங்க போன் நம்பரை கொடுங்க.

அதெல்லாம் தர முடியாது.

என்னங்க உங்களை நம்பி 97ரூ தந்து இருக்கேன், என்னை நம்பி ஒரு 10நம்பர் தரமாட்டிங்களா...

10 நம்பர்தானே. 1.....2...3........4.....5....6

ஸ்டாப், ஜோக்கா, தெரியாமத்தான் கேட்கிறேன் ஜோக்கா.. உங்களை பேச வேண்டாம்னு சொன்னேன், இது எனக்கும் மஞ்சுளாக்கும்...

ஐயோ என் பேர் மீரா....

(மறுபடி மீராவ்வ்வ்வா) தேங்க்ஸ்.... இது எனக்கும் மீராவுக்கும் இருக்கிற டீலிங், புரிஞ்சுதா.....
மீரா உங்க போன் நம்பர்...

எங்கிட்ட போன்லாம் இல்லை.. உங்க நம்பர்தாங்க......

குட்..இதும் நல்ல ஐடியாதான் இல்லே....உங்க பேர் சொல்லலையே...

எனக்கு பேர் வைக்கலை....

ஓகே பேர் வைக்கலை, இந்தாங்க நீங்களும் எதுக்கும் போன் நம்பர் வச்சிக்கோங்க, நாளைக்கு எதுக்கும் யூஸ் ஆகலாம்....

இடியட்...

தாங்க்ஸ்... ஓகே மீரா... நான் கிளம்பறேன், நாளைக்குத்தான் போன் பண்ணனும்னு இல்லை, சாயந்திரம் கூட பண்ணலாம், முடிஞ்சா லஞ்ச் ஹவ்ர்ஸ்ல கூட கூப்பிடலாம்.
ஓகே பேர் வைக்கலை நாளைக்கு சந்திக்கலாம். பை..

சே ஒரே ரப்சர். ஏண்டி அவன்கிட்ட நம்பர் வாங்கினே. அநாவசியமா உன் நம்பரை அவனுக்கு கொடுத்து வம்பிலே மாட்டிக்காத. மூஞ்சை பார்த்தாலே பொறுக்கி ராஸ்கல்லுனு அப்பட்டமா தெரியுயுது.

போடி அப்படிலாம் தெரியலை, துறு துறுனு இருக்கான், அப்பாவித்தனமான முகம்...

அடிப்பாவி... எனக்கென்ன... நீயாச்சு அவனாச்சு...

---------------------------------

என்னடா அந்த பொண்னை உனக்கு முன்னாடியே தெரியுமா.

அதிருக்கட்டும்டா..... திவா, லஞ்ச்க்கு நீயே பே பண்ணிடுடா...

ஏற்கனவே நீ எனக்கு ஒரு 250ரூ பாக்கி...

கொடுத்திட்டா போச்சி... அப்படியே சாயந்திரம் போகறச்ச பெட்ரோல் போடனும், ஒரு 50ரூ கொடுத்துடு
சம்பளம் வந்ததும் முழுசா கொடுத்துடறேன்.


(தொடரும்ம்ம்)

06 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 4

அது வெறும் லைசென்ஸ் கேசு, இது ட்ரங் & ட்ரைவ்.. இதுக்கு மாமூலா 1000தான் ரேட்.

சார் அவ்ளோ இல்லை சார். ஒரு 100ரூபா.......

யோவ் இவனுங்க வேலைக்காக மாட்டாங்க, நீ சார்ஜ் சீட் போடுய்யா, கோர்ட்ல போயி காலைல இருந்து சாயந்திரம் வரை நின்னு 5000ரூ பைன் கட்டினாதான் இவனுங்களுக்கு புரியும்

சார் அம்ப்புட்டு இருந்தா கொடுத்திட மாட்டேனா சார், சார் கொஞ்சம் கருணை காட்டுங்க சார்..

உனை பார்த்தாலும் பாவமாதான் இருக்கு, சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்..............................................................................................................................


என் நாக்குல சனி, ஒழுங்கா ஜூஸ் சாப்பிட்டேனா போனேன்னானு இருந்திருக்கனும்,
யார் உன்னை பார்த்தா எனக்கென்ன.. அந்த கண்றாவி என் கண்ணுல விழுந்து.......
இப்ப 500ரூ அநாமத்தா போச்சே.....

சும்மா பொலம்பிட்டு இருக்காத, ஆப்டர் ஆல் ஒரு 500ரூபாய். ரூமுக்கு நீ கொடுத்த அட்வான்சா நினைச்சிக்கோ, வந்ததுல இருந்து அட்வான்சுனு ஒன்னு கொடுக்கனும்னு உனக்கு தோணலையோ....

அதுக்காக, இப்படியா உனக்கும் இல்லாம எனக்கும் இல்லாம.......

ஷட் அப்.... நீ கிளம்பு... சாயந்திரம் வந்து உன் முகத்துல எரியறேன் பிச்சை காசு.....

அது இல்லடா....

ப்ளீஸ்.. நீ கிளம்பு........

(அலுவலகத்தில்)

என்ன அர்ஜூன் இன்னிக்கும் லேட்டா... போ போ.. அட்டெண்ட்ன்ஸ் சைன் பண்ண நீ ஆர்.கே ரூமுக்குதான் போகனும் இன்னிக்கு.

அப்படி ஒரு அவசியமே இல்லை. அங்கே போய் சைன் போடுறதுக்கு அப்படியே கிளம்பிடுவேன்.

அர்ஜூன் உன்னை ஆர்.கே கூப்பிடுறார்ர்.

என்னவாம் அந்த கிழத்துக்கு

தெரியலைப்பா... ஆனா எதோ சீரியஸ் மேட்டர்தான்.

சே, காலைலயே அந்தாளோட ரோதனையா போச்சி


(ஆர்.கே அறையில்)

சார்ர். கூப்பிட்டிங்களாம்...

உட்காருங்க மிஸ்டர் அர்ஜூன். நேத்து ஈவ்னிங் நடந்த ஒரு சின்ன மீட்டிங்க்ல நீங்க வரலை,
அதான் இப்ப உங்களை கூப்பிட்டு இருக்கேன்.

சாரி சார், நேத்து என்னோட மாமாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி, அவரை ஹாஸ்பிடலில்ல்ல்

ப்லீஸ் மிஸ்டர் அர்ஜூன், உங்க விளக்கம் எனக்கு அவசியமில்லை. நேத்து நடந்த மீட்டிங் பத்தி பேச மட்டும்தான் உங்களை கூப்பிட்டேன்.

எஸ் சார்ர்..

உங்களுக்கே தெரியும் நாட்டுல பொருளாதார சரிவினாலே நிறைய ஆட்குறைப்பு செஞ்சிட்டு இருக்காங்க அப்படினு,

எஸ் சார்ர்.

நம்ம கம்பெனில ஆட் குறைப்பு செய்ய போவதில்லை, ஆனா

சொல்லுங்க சார்...

ஆனா சம்பள குறைப்பு பண்ண போறோம், எஸ் மிஸ்டர் அர்ஜூன் எல்லாருடைய சம்பளத்தில இருந்து 30% டிக்ரிமெண்ட் பண்ண போறோம். இந்த 30% டிக்ரிமெண்ட் கம்பெனி பழைய படி நல்ல நிலைமைக்கு வந்ததும், திருப்பி தவணை முறையிலே தருவோம், இது தான் நேத்து மீட்டிங்ல நடந்த விசயம். உங்களுக்கு இதுல விருப்பம் இல்லைனா........... அது உங்க விருப்பம்.
யூ மே கோ நவ்...

தேங்க்யூ சார்ர்.

------------------------------

என்னடா முழுசா ஆப்பு வைக்காம 30% ஆப்பு வச்சிட்டாங்களா...

இது என்னடா விளையாட்டுத்தனமா இருக்கு....... நான் ரிசைன் பண்ண போறேன்.

அர்ஜூன் கொஞ்சம் கோபப்படாம ரிலாக்சா யோசி. இப்ப இருக்க சூழ்நிலையிலே வேலையை விடுறதுங்கிறது பெரிய முட்டாள்தனம். எந்த கம்பெனியும் இன்னும் ஒரு வருசத்துக்கு வேலைக்கு ஆட்களை சேர்த்திக்க போறதில்லை. நீயும் அந்த கடன் இந்த கடன்னு வாங்கி வைச்சிருக்க இந்த நேரத்துல அநாவசியமா அடுத்த வேலை கிடைக்காம ரிசைன்னு பைத்தியக்காரத்தனமா எதும் முடிவு பண்ணி வைக்காத, மத்தபடி உன் இஸ்டம்.

ஓகே நான் முழு மூச்சா தேட போறேன், இன்னும் இரண்டே மாசத்துல ரிசைன் பண்றேன்,

கூல் மேன் கூல், சரி ரொம்ப சூடா இருக்க, வா போய் ஒரு தம் போட்டு வரலாம்...

நான் வரலை...

அட வாடா, விப்ரோ ஆபிஸ் பிகர்செல்லாம் பார்த்தா மறுபடி நீ நார்மலாகிடுவே, கமான்.

-----------------------------

(பழ சரக்கு(!?) கடையில்
----------------------------------

வாவ்.. ராம்ஜி உன் கடையிலேதான்யா மாதுளம் மாமதுரமா இருக்கு.
என்னடா இன்னுமா உம்ம்னு இருக்கே......
எப்பவும் ப்யூச்சர நினைச்சாவே ரப்சர்தான்........

எனக்கு 30% போனது கூட வருத்தமில்லை. அந்த விடியா மூஞ்சி ஒரு மாதிரி இளக்காரமா பேசினதுதான் கோபமே...

கோபம் உடல்நலத்துக்கு தீங்கு.. இந்தா தம்...
இன்னிக்கு என்ன ஆச்சு... இன்னும் விப்ரோ ஆபிஸ் அழகிகளையே காணோம்..
வாவ்............. டேய் உன் பீலிங்க்செல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு அங்கே பாருடா....

சைட் அடிக்கிறதுதான் வாழ்க்கையா.....

டேய் நீ என்னடா இப்படிலாம் பேச ஆரம்பிச்சிட்டே... கலைஞரே 80 வயசிலே மானாட மயிலாடவை முன் வரிசையிலே உட்கார்ந்து கலைக்கண்ணோட பார்க்கும் போது, வீ ஆர் யூத்
மச்சி...

டேய் திவா... அவ...

எவ....

அவடா, அங்கே பார், யெல்லோ சுடிதார்...


(தொடரும்ம்ம்)

04 November 2009

ஜன்னலோரத்து தேவதைகள் - 3

உன்னை மொறைச்சி பார்த்துட்டே போகுதுல்லே....

ஆமாம்டா.. யார் அவ,

என்னைக்கேட்டா...

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.....

சரிடா நான் கிளம்பறேன்

இருடா என்ன அவசரம், கொஞ்சம் அந்த பஸ்ஸை பாலோ பண்ணிட்டு போகலாம்.

டைம் ஆகிடும் டா...

இரு நான் ஓட்டறேன் நீ பின்னால உட்காரு.....

(இன்னிக்கு லீவு போட வைச்சிடுவான் போல இருக்கே)இருடா நல்லா உட்கார்ந்துக்கிறேன், ம்ம்ம். கிளம்பு

மச்சி, எங்கிட்ட சேஞ்ச் இல்லை, நீ பில் செட்டில் பண்ணிட்டு வாடா.

(ஓசில கிடைக்கிதுனு நின்னது எவ்வளவு பெரிய தப்பு, காலைலயே 50ரூக்கு ஆப்பு வைச்சிடானே)கொடுத்தாச்சி கிளம்பு....

(அந்த பஸ்ஸை துரத்தி பயணத்தை ஆரம்பித்தாயிற்று)

என்னடா 2-3 பஸ் ஒரே கலர்ல இருக்கு, நாம எந்த நம்பரைடா பார்த்தோம்.

23சி.

எஸ்ஸ்ஸ்... பிடிச்சிட்டேன்..........

மெதுவா போடா, காலைல பீக் ஹவர் ட்ராபிக்ல இப்படியா வேகமா போவாங்க.

அந்த ஆரஞ்ச் கலர்தானே.........

யாரை பாலோ பண்றோம்னு கூட தெரியாமலயே பாலோவிங்கா... ஆரஞ்ச் இல்லே யெல்லோ...

ம்ம். பரவாயில்லே... ஆரஞ்சும் நல்லாதான் இருக்கு.

ஏய், அங்க பாரு அந்த பொண்ணு உன்னை பார்த்து மறுபடி முறைக்கிறா. பக்கத்துல போ..

ஹலோ..... உங்க பேர் என்ன்ன்னா...

யார் டி அவன், என்னத்துக்கு உன் பேர் கேட்டு பாலோ பண்றான்

உஷ்... கம்முனு வா.. அவனை பார்க்காதே

ஏய்.. உன்னைத்தான்... உன் பேர் என்ன.. ஏய் யெல்லோ....

என்னதாண்டி பிரச்சனை. யார் அவன், தெரிஞ்சவனா, தெரியாதவனா... டீஸ் பண்றானா டெய்லி,எதாச்சிம் சொல்லித்தொலையேன்...

இறங்கினதும் சொல்றேன், இப்போதிக்கு அவன் பக்கம் பார்க்காம வா.

மணி என்னடா ரெஸ்பான்சே இல்லை. அடுத்த ஸ்டாப்ல போயி இறங்கி நான் பஸ்ல போயிடட்டுமா,

ஓ..வெரி குட் ஐடியா (அப்பாடி நான் எஸ்கேப் ஆகிடலாம்),

அடுத்த ஸ்டாப் என்ன நந்தனம்தானே..... (விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

மெதுவாடா... வண்டியை கொண்டு போய் சாத்திடாதே....

---------

போச்சி போச்சி... சிக்னல் விழுப்போகுது ஸ்லோ ஸ்லோ ஸ்லோ......போச்சி ரெட் விழுந்துடுச்சே..........
(க்ரீஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்)

எப்படி நிறுத்தினேன் பார்த்தியா.......

அடப்பாவி... பார்டரை தாண்டி நிறுத்தி தொலைச்சிட்டியேடா.. போச்சி போச்சி.. சிட்டிசன் அங்கிள் வராரே...

என்னய்யா வண்டி ஓட்டறிங்க... இபப்டித்தான் வேகமா ஓட்டிட்டு வருவீங்களா. வண்டியை ஓரங்கட்டுங்க.

சார், சார்.. வண்டி என்னோடது சார்.. அவசரமா ஹாஸ்பிடலுக்கு போயிட்டு இருந்தோம் சார்,எங்க அண்ணனுக்கு ஆக்சிடன் ஆகி அப்போலால அட்மிட் பண்ணியிருக்காங்க சார், அதான்

வண்டில எல்லா பேப்பர்ஸும் இருக்கா,

இருக்கு சார். ஆர்.சி.. இன்சூரன்ஸ், இந்தாங்க என்னோட லைசென்ஸ்....

நீ வண்டி ஓட்டிட்டு வரலையே இவன் தானே ஓட்டினான், உன்னோட லைசென்ஸ் எங்கே...

சார்ர்ர்.

என்ன.. லைசென்ஸ் இல்லையா.. கண்ணுலாம் சிவந்திருக்கு. ட்ரங் & ட்ரைவிங்கா,ஊது...

சார்.. இல்ல சார். வர அவசரத்துல லைசென்ஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன் அதான்.

யோவ் ஊதுய்யானா என்னமோ பொலம்பிட்டு இருக்க..

உப்ப்... உப்ப்ப்

கன்பார்ம்டு... யோவ் செல்லப்பா.. இங்க வாய்யா.. குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வரானுங்க, இவனுங்களை வந்து கவனிச்சிக்கோ...

சார் சார் யாராச்சும் காலைலயே தண்ணியடிப்பாங்களா சார், அது நேத்து அடிச்சி மிச்சத்தோட வீச்சம் சார்.

தம்பி பேசிகிட்டே இருந்தா எப்படி........ வண்டியை ஓரங்கட்டு...

போச்சி போச்சி.. உங்கூட ஜூஸ் சாப்பிடலாம்னு வந்ததுக்கு அப்போ 50ரூக்கு வச்ச ஆப்ப்பு. இப்ப இவிங்க எவ்ளோ கேட்கப்போறாங்களோ...

ம்ம். வண்டி யாருது...

சார் என்னோட வண்டிதான் சார், எங்கிட்ட லைசென்ஸ் இருக்கு சார், நான் குடிக்கிறது இல்ல சார்.

உஸ்ஸ்ஸ். வண்டி உனக்கு வேணுமா வேண்டாமா..

வேணும் சார்...

சரி ஒரு 1000ரூ கொடுத்துட்டு வண்டியை எடுத்துட்டு போ...

1000வா, சார் ரொம்ப அதிகம் சார். எப்பவும் 50-100ரூ வாங்கிறதுதானே சார் வழக்கம்.

அது வெறும் லைசென்ஸ் கேசு, இது ட்ரங் & ட்ரைவ்.. இதுக்கு மாமூலா 1000தான் ரேட்.

சார் அவ்ளோ இல்லை சார். ஒரு 100ரூபா.......

யோவ் இவனுங்க வேலைக்காக மாட்டாங்க, நீ சார்ஜ் சீட் போடுய்யா, கோர்ட்ல போயி காலைல இருந்து சாயந்திரம் வரை நின்னு 5000ரூ பைன் கட்டினாதான் இவனுங்களுக்கு புரியும்.

(தொடரும்ம்ம்)

ஜன்னலோரத்து தேவதைகள் - 2

ஓகே ஓகே வந்தாச்சி வை கூட்டம் வேற அதிகம், தேங்க் யூ பாஸ்...
( தேடினாலும் கிடைக்காத சர்ப் எக்ஸெல் கறையை போல காணாமல் போயிருந்தாள் அவள் )

பாஸ், சேப்பாக்கம் தாண்டியாச்சா, அட அதை தாண்டி வண்டி தலைமை செயலகமை நெருங்கிட்டு இருக்கு.

அய்யயோ, ஹோல் டன் ஹோல் டன்.........

கண்டக்டரிடம் சில வசவுகளையும், இறங்குகையில் சிலரின் பாதங்களை மிதித்த காரணத்தினால்
சில பயணிகளிடம் பெற்ற திட்டுக்களையும் கதைக்கு அவசியமில்லை என்பதால், பேருந்தில் இருந்து இறங்கியது நாம் அடுத்த காட்சியை எப்பவும் போல கண்ணகி சிலையிலே ஆரம்பிப்போம்)

ஒழுங்கா சொன்ன நேரத்துல வர முடியாதா உன்னால

இல்லே மீரா மழை, வண்டி மக்கர், போதாதுக்கு பஸ்காரன் வேற பிரச்சனை

ஏன் ஆட்டோல வர வேண்டியது தானே...

சட்.. ஆமால்லே ஆட்டோல வந்திருக்கலாம் இல்லே,

உனக்கு என்னை பார்க்க வர விருப்பம் இல்லை, அதான் இப்படி நொண்டி சாக்கு சொல்றே.

சே, ஏன் இப்படிலாம் பேசற, நீ இவ்ளோ தூரம் கூப்பிட்டும் வராம போவேனா.

இல்லே அர்ஜூன் நான் கல்யாணம் பண்ணிக்க போறதை உன்னால ஜீரணிக்க முடியலை, அதனால என்னை இப்படி ரொம்ப நேரம் நிக்க வைச்சி என்னை பழி வாங்குறே, சாடிசம்.. சே..

ஏய்..ஏன் அநாவசியமா கோபப்படுற. நான் நீ கூப்பிட்ட அதிர்ச்சியிலே என்னால யோசிக்க கூட முடியலை. ப்ளீஸ் லீவ் இட்..

ஓகே... என்ன சாப்பிடுற..

எனக்கு எதும் வேண்டாம், உனக்கு.. நம்ம கடைசி மீட்டிங்.. உனக்கு நான் உன் கல்யாணத்துக்கு ட்ரீட் கொடுக்க விரும்புறேன். எங்க போகலாம் சொல்லு..

ப்ளீஸ் அர்ஜூன், நான் எங்கேயும் வர விரும்பலை, கடைசியா உன் கூட ஒரு 5 மினிட்ஸ் பேசனும்னு நினைச்சேன். அவ்ளோதான்

ஜஸ்ட் ஐஸ்க்ரீம்?

என் மேலே கோபம் இல்லையே?

-

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

சிரிப்பு இல்லே. புன்னகை. கோபம் இல்லைனு காட்டறேன்.

பொய் சொல்லாதடா, சாரி... பொய் சொல்லாத. என் மேல உனக்கு கோபமே இல்லையா.

நிறைய இருந்துச்சி... இப்போ இல்லே..

நீ என்னை புரிஞ்சிப்பனு நினைகிறேன்..

இல்லேனா வந்த்ருக்க மாட்டேன்.

ஐ டோண்ட் ஹாவ் எனி சாய்ஸ்டா... கடைசியா ஒரே டா,

நான் அதை பத்தியே பேச விரும்பலை, உனக்கு என்ன ஐஸ்க்ரீம், அதே சாக்கோ ஸ்டிக்கா?

ம்ம்.. உனக்கு எப்போ?

அதோ அந்த பிகர் மட்டும் ஓகே சொன்னா இப்பவே ஓடிபோயி கல்யாணம் பண்ணிப்பேன்.

நான் விட்டு போனது வருத்தமா இல்லையா?

சந்தோசமா இருக்கு? இதுவே முன்னே மாதிரி இருந்தா அந்த பொண்னை சைட் அடிச்சி இருக்க முடியுமா...

இது என்னோட இன்விட்டேசன்.... முதல் இன்விடேசன் உனக்குத்தான்.. நான் கிளம்பட்டுமா

கல்யாணம் முடிஞ்சதும் ஸ்டேட்ஸ் போயிடுவியா...

யா, இரண்டே நாள்தான், அப்புறம் மூன்றாவது நாள் சூர்யோதயம் அங்கேதான்.

ஆல் த பெஸ்ட்... உனக்கு எப்பவும் நல்லதே நடக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

தேங்க்ஸ்... நான் கிளம்பறேன்,

நான் ஆட்டோ கூப்ப்.......

நான் என் வண்டிலதான் வந்தேன். பை... சீ யூ

மறுபடியுமா

ஓஹ்.. சாரி.. பை... குட் பை..

----------------------------------------

என்னடா அர்ஜூன் ஏன் இவ்ளோ லேட்டு...
உப்ப்.. என்ன கண்றாவிடா இது செம்ம தண்ணியா,

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கோபமா கேட்கிறாடா.

என்னடா சொல்ற, யாரு உங்கிடட் கோபமா கேட்டா

வருத்தமா இல்லையானு கேட்கிறாடா?

டேய் என்னடா சொல்ற என்ன பிரச்சனை?

சாய்ஸ் இல்லையாம். அமிஞ்சிக்கரையா அமெரிக்காவ என்ற சாய்ஸ்ல அமெரிக்கா....

என்னடா சொல்ற. நீ என்ன அமெரிக்கா போகப்ப் போறியா.

உவ்வ்வ்வ்

நிம்மதியா தூங்க விடமாட்டிங்களாடா

-------------------------------------

அடுத்த நாள் காலை
------------------------------

அர்ஜூன், என்ன ஆச்சு

நத்திங்...

ஏய் என்ன நொத்திங், திடிர்னு தண்ணியடிச்சிட்டு வந்தே, அமெரிக்கான்றே, யாரோ கோபமா கேட்டாங்கன்றே,

மிஸ்டர் மணி..

எஸ்... இட்ஸ் மீ...

உனக்கு எங்கூட தங்க விருப்பமில்லைனா, உன் ரூமை மாத்திகிட்டு போ. அநாவசியமா என்னை தொல்லை பண்ணாதே.

அட, என்னமோ வருத்தத்திலே இருக்கியேனு கேட்டேன்பா, உனக்கு இஸ்டமில்லாட்டி எதும் சொல்ல வேண்டாம், சரி நான் கிளம்பறேன்..

வெயிட் என்னை, மௌண்ட் ரோட்டில விட்டுடு.

உன் வண்டி என்னாச்ச்சி... சரி சரி ட்ராப் பண்ணிடறேன்.

*************

அண்ணா சாலையில்.
------------------------------

இங்கயே நிறுத்துடா... வாடா ஒரு தம் அடிச்சிட்டு போவ.

இல்லே எனக்கு நேரமாகிடுச்சி...

அட, வாடா... உன்னை வேற திட்டிட்டேன். ஐம் சாரி, நேத்து கொஞ்சம் அதிகமா போயிடுச்சி.
எப்படி வந்தேன்னே தெரியலை. பாஸ் மாதுளம் ஜூஸ் ஒன் பை டு..

பைக் என்னாச்சி...

அது ஆபிஸ்லயே இருக்கு, டோண்ட் வர்ரி,
(சார் ஜூஸ் இந்தாங்க)
நேத்து உன் மேலையே வாமிட் பண்ணிட்டேன் இல்லே

ஏம்பா அதை பேச உனக்கு வேற நேரம் கிடைக்கலையா, நான் முதல்ல ஜூஸ் சாப்பிட்டுடறேனே.

ஹ ஹ, ஓகே ஓகே குடி, ஈவ்னிங் பேசிக்கலாம்.

மச்சி அங்கே பாரு...

எங்கே...

அந்த பஸ்ல.. ஜன்னலோரத்துல

ஆமாம், அந்த யெல்லோ சுடிதார்....

உன்னை மொறைச்சி பார்த்துட்டே போகுதுல்லே....

ஆமாம்டா.. யார் அவ,

என்னைக்கேட்டா...

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.....


(தொடரும்ம்ம்)