அதான் தெரியுமே, பேரை சொல்ல வேண்டியதுதானே) ஓ அப்படியா சாரி நான் 2006 பாஸ் அவுட் ஸ்டூடண்ட், எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் டிபார்ட்மெண்ட். நீங்க பார்க்க சுதா மாதிரியே இருந்தீங்க, தட்ஸ்வாட்? சாரி பார் தி இன்கன்வினியண்ட்? பை த பை யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்.?
அதிருக்கட்டும், எப்போ முடிச்சீங்க, 2006லயா? இந்த காலேஜ்லயா,?
ஆமாங்க இங்கதான், 85% க்ளாஸ் பர்ஸ்ட் யூ நோ?
வெரி குட்.
சரி உங்க பேர் சொல்லவே இல்லையே.
ஆர்ட்ஸ் & சய்ன்ஸ் காலேஜ்ல இஞ்சினியர் முடிச்சவங்ககிட்டலாம் பேர் சொல்றதில்ல
என்ன சொல்றீங்க நீங்க......
இது பாபா ஆர்ட்ஸ் & சய்ன்ஸ் காலேஜ். அதுவும் இல்லாம 2007ல தான் ஓப்பனிங்கே ஆச்சி..........
(சே ஓவர் பிட்டு உடம்புக்கு ஆகாதுங்கிறது சரியா போச்சே... எப்படி சமாளிக்கிறது, ம்ம்ம் ஐடியா)
ஓ ஓ இது பாபா காலேஜ்ஜா, நான் படிச்சது பில்லா காலேஜ், சின்ன கன்ப்யூசன் ஆய்டுச்சி.
ஹி ஹி ஹி ஹி
ரொம்ப வழியுது, துடைச்சிக்கோங்க, பை எனக்கு க்ளாஸ்க்கு டைம் ஆச்சி.
ஹலோ, இவ்ளோ நேரம் பேசியும் பேரை சொல்லாம போறீங்களே.
இல்ல பேர் சொல்லிட்டு போனா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும், சரி சரி அதுக்கு ஏன் கீழ பார்க்றீங்க. ஓகே பை.. (சே பேரை கூட சொல்ல மாட்டேனுட்டாளே, எல்லா பிட்டும் இப்படி அப்பீட்டா போச்சே ஓகே நெக்ஸ்ட் நெக்ஸ்ட்)
ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ....
அதுக்குள்ள நெக்ஸ்ட் ஸ்டார்ட்டா ஆய்டுச்சா (திரும்பி பார்த்தா அவளே நிக்க்குறா)
(நான் பவ்யமா) சொல்லுங்க மேடம் (எதுக்கு ரிஸ்க்குனுதான் இந்த பவ்யம்)
க்ளாஸ் முடிஞ்சதும் என்னை அடையாறுல ட்ராப் பண்ன முடியுமா...
ஓ பேஷா, நான் இப்ப அங்கதான் போறேன். வாங்க போகலாம்.
இப்ப இல்ல க்ளாஸ் முடிஞ்ச உடனே.
ஓ... எப்போ முடியும்..
ஒரு மணிக்கெல்லாம் டாண்னு வந்துடுவேன்.
(அடிப்பாவி இப்பதானே 9மணியாகுது, வேணான் கிளம்பு சொந்த செலவுல சூன்யம் வச்சிக்காதே அப்பீட் ஆகிடுடானு என் மனசாட்சி சொன்னாலும்)
ஓகே. இருக்கேன், டோண்ட் வொர்ரி, போய்டு வாங்க, பை த பை உங்க பேர்ர்ர்ர்ர்ர்ர்?
வந்து சொல்றேன்ன்ன்ன்.....
(கஷ்ட காலம், அய்யய்யோ வண்டில பெட்ரோல் இருக்கானு தெரியலையே, கைல இருக்கிற 100ரூபாய் பெட்ரோலுக்கே சரியா போய்டுமே, இவ வேற போகும் போது எங்கயாச்சும் நிறுத்தி காபி சாப்பிடலாம், ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்னு சொன்னா என்ன பண்றது. படிச்ச பொண்ணா தெரியுது, பெரிய இடத்து பொண்ணூ மாதிரியும் தெரியுது, கண்டிப்பா பெட்ட்ரோலுக்கும் சேர்ர்து அவளே பே பண்னிடுவாளா????
பார்ப்போம்....... இன்னும் ஜ்ஸ்ட் போர் ஹவ்ர்ஸ் தானே...
அதுவரைக்கும் அந்த மரத்..................
(கொர் கொர் கொர் கொர் கொர்)
(To Be Continued)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்த ஆரம்பம் இனிதே அமையட்டும். வாழ்த்துகள். word verification ஐ எடுத்திடுங்க, அது தேவையில்லை.
Post a Comment