14 May 2009

கத போல தோணும் - 3

திடுக்க்க்க்க்க்க்க்க்க்க்

(பயப்படாதிங்க எழுந்திருச்சேன்)
அடடா டைம் 12 தானே ஆகுது, இந்த பொண்ணு வ்ர இன்னும் ஒரு மணி நேரமாகுமே, எப்படியாசும், டைம் ஓட்டனுமே,
என்னது வயித்துல ஒரே வலியா இருக்கே..............
அச்சச்சோ பசி. பசிக்குதே. இப்ப என்ன பண்றது. போய் ஒரு தம் போடலாமா. அடடா 3.50ரூபா தானே இருக்கு. கிங்ஸ் 4ரூ ஆச்சே.
கடன் சொல்லி அடிச்சிடலாமா. ஓகே துணிந்த பின் மனமே டோன் பீ வித் துயரம். கோ கெட் இட்)

ஏங்க ஒரு கிங்ஸ் கொடுங்க.

கிங்ஸ் இல்லங்க,

அப்போ வில்ஸ் தாங்க

அதுவும் இல்லீங்க.

அதுவும் இல்லீயா அப்போ பில்டர்?

சிசர் பில்டர்தான் இருக்குங்க

சிசர் பில்டர்ரா (அய்யய்யோ அது ரொம்ப நாறுமே. அந்த பொண்ணுக்கு பிடிக்காம போயி உன் கூட வ்ரமாட்டேனு சொன்னா நான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணதுக்கு அர்த்தமே இல்லாம போய்டுமே.)
வேணாம் ஒரு டீ மட்டும் கொடுங்க.

பால் இல்ல சார்.

சுடுதண்ணியாச்சும் இருக்க்க்க்க்க்கா

சீமெண்ணெய் வாங்க போய் இருக்காங்க, கொஞ்ச நேரம் பொறுத்தா வந்துடும்.

முடியலை. வேற கடை எதுனாச்சும் இருக்கா பக்கத்திலே?

பக்கத்துல ஒரு கசாப்பு கடை இருக்குங்க.

கசாப்பு கடை... பக்கத்துல... நல்லா இருங்க. (போய் மறுபடி தூங்க வேண்டியதுதான்)

ஹலோ மிஸ்டர். ஹலோ..... ஹேய் கட்டம் போட்ட சட்டை உன்னைத்தான்.

(இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே) ஓ ஹாய். ஒரு மணிக்கு தானே வருவேனு சொன்னே. அதுக்குல்ல வந்துட்ட. (அப்பாடி ஒர் வ்ழியா க்ளோசா பேச ஆரம்பிச்சிட்டேன்)

லாஸ்ட் ப்ரீயட் கட் அடிச்சிட்டு, ஜன்னல எகிறி குதிச்சி வந்துட்டேன்.

எகிறி குதிச்சா(மேலும் கீழும் பார்த்தபடி) இந்த ட்ரெஸ்ல யா. பசங்க முன்னாடியேவா.

என் க்ளாஸ்ல பொண்ணுங்க மட்டும்தான். நோ பாய்ஸ்

(அப்பாடி)

அப்படி இருந்தா என்ன????

(ம்கூம். கடவுளே உப்பிலியப்பா, கண்ணு தொறந்தியே கொஞ்சம் நல்லா தொறக்கக்கூடாதா? )

(ரவுடி பொண்ணா இருக்கும் போல இருக்கே, கொஞ்சம் கேர்புல்லா இர்க்கனும்)
சரி சரி போலாமா

ம்ம். அதுக்கு முன்னாடி சாப்பிடனும். ஒரு நல்லா ஓட்டல்லா பார்த்து நிறுத்துங்க.

(ஊஊஉஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ)

(ஹோட்ட்டலில்)

ம்ம் என்ன சாப்பிடுறே, இட்லி, தோசை?


fool. மதியானதிலே இட்லி, தோசையா? வ்வே எவ சாப்பிடுவா. ஒரு சிக்கன் ப்ரியாணி + சிக்கன் 65 + ஒரு கோக் ஹால்ப் லிட்டர்

யாருக்கு பார்சல் வாங்குறீங்க.

பார்சல் இல்ல இப்ப இங்க சாப்பிட

(ராட்சசி) அவ்ளோதானே, வேற எதாவது வேணுமா

போதும், நான் டைட்ல இருக்கேன்.

இப்படி சாப்பிட்டா டைட்தான் ஆகும். யம்மா அது டயட்.

டங் சிலிப் ஆய்டுச்சி. நீ சாப்பிடலயா.

இல்ல இப்பத்தான் காலேஜ் பக்கத்து ஓட்டல்ல சாப்பிட்டேன். பசிக்கலை
(அதுக்கு வேற யாரு பில் கட்டுறது). நீ சாப்பிட்டிலிட்டு இரு நான் உடனே வந்துடுறேன். (வனையாச்சும் பிடிக்கனுமே உடனடியா)

உடனே நம்ம சால்ஸ்க்கு ஒரு காலை போடனும். 9...8.... 4...1...0....5....5...2...0....2.

நீங்கள் டயல் செய்த சந்தாதாரர் வேரொரு லயனில் பிசியாக இருக்கிரார்.
லயனிலேயே காத்திருக்கவும். அல்லது தொடர்பௌ துண்டித்து மீண்டும் முயற்ச்சி செய்யவும்ம்ம்ம்

(கோவிந்தா கோவிந்தா......)

தொடரும்ம்ம்

No comments: