எனக்கு உன் மேல டவுட்டாவே இருக்கு, நீ ஏன் இப்படி பண்றேனு தெரியலை பொதுநலம், பொது தொண்டுனு ஓட்டினே பின்னி புடுவேன். ஸ்கூல் வாசல்ல்ல இருந்த அந்த பாட்டிகடைல 250ரூ அக்கவுண்ட் வச்சி ஏமாட்தினவன் நீ, மறைக்காம உண்மையை சொல்லு, யார் இவ?
மச்சி உனக்கே தெரியும், என்னோட ஸ்கூல் லைப்ல ஆரம்பிச்சி, காலேஜ் லைப், கம்ப்யூட்டர் க்ளாஸ், ஏன் வேலைக்கு சேர்ந்த இடத்துலனு ஒரு இடத்துல கூட ஒரு பிக்ரும் இல்லைனு உனக்கு தெரியாதாடா. அப்பும் எப்படிடா இப்படி கேக்கலாம்.
சரி நான் ஊருல இல்லாத 6 மாசதுல எதாவது உஷார் பண்னிட்டு அவ்ந்திட்டயோனு கேட்டுட்டேண்டா
6மாசத்துல ஒரு பொண்ணு பின்னாடி நான் வேணும்னா ஓடலாம். ஒரு பொண்ணு எங்கூட வருமா டா,
சரி சரி விடு. என் இனமடா நீ செல்வமே. உனக்கு நான் ஆறுதல் எனக்கு நீ.
மச்சி நீ----------------- சாதியாடா, நீ----------- சாதினுள்ள உன் சர்டிபிகேட்ல பார்த்தேன்.
அட அற்பபதரே நான் சொன்னது பிகர் மடக்க தெரியாத பசங்க நாமனு சொல்ற மீனிங்களில் சொன்னேண்டா, ப்டுபாவி கொஞ்சம் இருந்தா *இளன், ரமேசு, கமல்ராஜன்*கிட்ட திட்டு வாங்கவிட்டு இருப்பியேடா,
சரி இப்ப என்ன பண்ணலாம்.
அந்த பொண்ண நான் சொல்ற ஒரு இடத்தில சேர்த்து விடலாம். அது அபலை பெண்களுக்கு உதவி செய்றதுக்காகவே இருக்கு. வெளிநாட்டில கூட அதுக்கு ப்ராஞ்ச் இருக்கு, தாய்லாந்து, மலேசியாவிலெல்லாம் இருக்கு.
என்னது கோபால் பல் பொடியா...
பிரச்சனையை கொண்டுவந்ததுல்லாம கிண்டல் வேறையா, அது ஒரு பெண்கள் சங்கம்டா,அதுக்கு பேர் கூட என்னமோ தாமசமோ என்னமோதானே.
தாமசமா என்னடா பேர் இது.
ஆங் நியாபகம் வந்துட்டது,
*த.த.ம.ச* - *த*ங்க *த*மிழ் *ம*கள் *ச*ங்கம்
(தொடரும்)
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment