சாரி மச்சான், சும்மா ஒரு பில்ட் அப்புக்கு அப்படி சொல்லி இருந்தேன், சாரிடா
சாரி கேட்டு என்னடா பண்றது, நாளைக்கு என் பேரே நாற்ப்போகப்போகுதே,,,
எதுக்கு இப்ப தேவையில்லாத பேச்சு நான் போலிஸ்க்கு போன் போடுறேன்.
(உடனே நம்ம நவ்யா) மேடம் போலிஸ்கெல்லாம் போன் போடாதீங்க அவங்க அவரை அடிப்பாங்க, ப்ளீஸ் பண்ணாதீங்க.
அவர்ர்ர்ரா எவர்ர்ர்ரு, யம்மா தாயே இவ்ளோ நல்லவளா இருக்கியே அப்படியே நான் யாருன்னு தெரியலைனு சொல்லி ரொம்ப நல்லவளா ஆகக்கூடாதா
யாரும் எதும் பேசக்கூடாது, நான் 100க்கு போன் பண்ரேன்,
மேடம் அவர்க்கு பண்னாதீங்க அவர் எங்க அப்பாவோட ப்ரண்டு, வேணும்னா அப்துல்லாக்கு பண்ணுங்க
மேடம் தேவையில்லாம என்னை கொலை கேசுல மாட்டிக்குவேனோனு பயமா இருக்கு நீங்களே பண்ணிடுங்க, பண்ணாட 100 நம்பர்க்கு பண்றாங்கடா,
100ஆ, அது
ஸ்டாப், நீ என்ன கேட்க்கப்போறேனு எனக்கு தெரியும் 100 பேர்க்கு பண்ணலை 1 பேருக்குதான், சே ஒருத்தற்க்கு தான் போதுமா, அவசர போலிஸ் 100க்கு இப்ப விளங்குதா,
அவசர போலிஸ் 100ஆ, அது தமிழ் நாட்டு போலிஸ் தானே, அவங்க லிமிட் ஹோசூரோட முடியுதே, இங்க எல்லாம் வரமாட்டாங்களே,
அக்கா நீங்க பண்றீங்களா இல்லை நானே பண்ணட்டுமா
தேவையில்லை, அவங்களுக்கு முன்னாடியே தகவல் போயாச்சி, அதோ இன்ஸ்பெக்ட்டர், இன்ஸ்பெக்டர் இவ தான் நீங்க தேடின பொண்ணு,
மச்சி முடி நீளமா வளர்த்துட்டு, மீசையை முழுசா எடுக்காதேனு சொன்னா கேட்கிறியா, பாரு அவங்க டவுட் படுறாங்க,
ஷட் அப். நான் இந்த பொண்ணைத்தான் சொன்னேன்,
மேடம் என்ன சொல்றீங்க நீங்க......
எஸ், இவ ஒரு சீட்டிங் கேர்ள், பெங்களூர்க்கு வர தமிழ் பசங்ககிட்ட பேசி வங்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்கிரது இவளோட ஸ்டைல், இவளை பத்தி நியுஸ் காலைலதான் எங்க சங்கத்துக்கு வந்துச்சி, அவ போட்டோவும் வந்துச்சி, அதை வச்சி தான் கண்டுபிட்டிச்சேன், இன்ஸ்பெகடர் அவளை அரெஸ்ட் பண்ணூங்க,
அப்பாடி ஒரு வழியா எல்லாம் முடிஞ்சி போச்சு,
இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு, உன்னை மறுபடி சேலத்துக்கே பேக் பண்றேன்,
இனிமேலயாச்சும் பார்த்து நடந்துக்கோங்க பசங்களா,
சரிங்க்கா, அப்போ நாங்க வரோம்கா, வாடா போலலம்
அக்கா உங்க பேரு சொல்லலியே......
*முற்றும்*
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment