ரஜினி எப்படி தமிழக முதல்வராகலாம்னு (பாவம் அந்த ஆளு கட்சி கூட இன்னும் ஆரம்பிக்கலை, அதுக்குள்ளே முதல்வராக கூடாதுன்னு கூச்சல் வேற). கேட்டுகிட்டு இருக்காங்க நிறைய பேர்
ஏன்னு கேட்டா பக்கத்து ஊராம் நம்ம ஊர் இல்லையாம், அப்படினு சில கறுப்பு சொக்காய்காரர்கள் கூச்சலிடுகிறார்கள், இன்னிக்கு எம்.ஜி.ராமச்சந்திரர் தமிழின தலைவராம், அன்னிக்கு மலையாளினு சொன்னவர்ல்கள் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்,
சே குவாராவை எத்தனை பேருக்கு தெரியும், அவர் என்ன தமிழக கிராமத்திலே பிறந்தவரா, எங்கோ இருக்கும் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்தவர் அவரை பனியன்ல படம் போட்டுகிட்டு அலையறார்கள் சிலர், அவர் அவர் பிறந்த அர்ஜெண்டிலாவிலா அமைச்சரா இருந்தார், கியூபாவிலேதானே அமைச்சரா இருந்தார்,
அவரோட நண்பர் பிடல் காஸ்ட்ரோ மட்டும் என்ன கீயூபாகாரரா, இல்லையே, ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவராச்சே, அவர் அப்பா ஸ்பெயின் போர் தளபதி, பின்பு கியூபாவில் குடியேறி பண்ணையாரானவர்,அவர் மகன்தானே பிடல் காஸ்ட்ரோ.
அன்னிக்கு ஒருத்தர் சொன்னார் தமிழகத்துக்கு தமிழந்தான் ஆட்சிக்கு வரணுமாம், அதுக்கு ஒரு விளக்கென்ன விள்ளக்கம் வேற உங்க பையனுக்கு நீங்கதானே அப்பாவ இருக்கனும்னு ஒரு பதில்,
தமிழனால் மட்டுமே கேவலமான வார்த்தைகள் உபயோகிக்க முடியும்னு நினைக்கிறேன்.
அதுல ஒரு ஆறுதல் நாம பேசறதோட சரி, வெளிநாட்டுக்காரனுங்க அதுக்கும் அடுத்தபடி போயிடறாங்க
14 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment