டாக்டர் ஈஸ்வர் சிகிச்சைக்கு நாள் குறித்தார், நல்லதொரு நாளில் சிகிச்சையை டாக்டர் ஆரம்பித்ததர்
என்னத்தான் டாக்டர் ஸ்பெஷல் சாதாவாக இருந்தாலும் சோதா இல்லை, அவரது சிகிச்சை பலனளித்தது, தாஸை அழைத்தார் டாக்டர் கௌஷிகாவிற்கு குழந்தை முதலில் பிறக்கும் என்றார். அந்த அடுத்து கனிகா பிறகு சுபாக்கு பிறக்கும் என்றார்.
இதை கேட்டு தாஸ் மிகவும் சந்தோஷப்பட்டார். 3 மனைவியரையும் நல்லதொரு நர்சிங் ஹோமில் சேர்த்தார்.
3வருக்கும் பிரசவக்கும் பிரசவ நாள் நெருங்கியது
3வருக்கும் பிரசவக்கும் பிரசவ நாள் நெருங்கியது
முதல் குழந்தை நவமியில் பிறந்தது (மற்ற குழந்தைகள் எந்த திதில பொறந்தா என்ன நமக்கு முதல் குழந்தைதான் கதையின் நாயகன் அவனை பத்தி மட்டுமே கதையிலே பில்ட் அப் தருவோமே)
தாஸ் சோதிடரை அழைத்து அவனின் ஜாதகத்தை கணிக்க சொல்லி கேட்டான் , சோதிடர் முதல் குழந்தையின் ஜாதகத்தை கணிக்க ஆரம்பித்தார், சிறுது நேரத்திற்க்கு பின் முதல் குழந்தையின் ஜாதகத்தை கணித்து முடித்தார் (இத சொல்ல ஏண்டா 4வரி ஆச்சினு கேட்காதீங்க என்ன இருந்தாலும் இது மெகா தொடர் ஆக்கும்)
முதல் குழந்தை கண்ணி துறையில் பெரிய இவனாக வருவான் என சொன்னார், கடல் தாண்டி அவன் விடும் பட்டம் பறக்கும் என ஆருடம் கூறினார், இப்படியே 2ம் குழந்தையின் ஜாதகத்தையும் கணித்தார், 3ம் குழந்தையின் ஜாதகத்தையும் கணித்தார், நான்காம் குழந்தையின் ஜாதகத்தையும் கணித்தார், அப்புறம்.... அப்புறம் என்ன காசு வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டார்,
தாஸ் தன் 4 வாரிசுகளுக்கும் பேர் சூட்டும் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்தார்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment