பிரதர், நான் இறங்க வேண்டிய இடம் வந்துட்டது நான் இறங்கிடறேன், அங்கே பாருங்க உங்களுக்கு ஏத்த பொண்னு அங்க மஞ்ச கலர் ட்ரெஸ்ல இருக்கு,அதுவா, நல்லாத்தான் இருக்கு, ஆனா கல்யாணம் ஆகி இருக்கும் போல இருக்கே.நான் அங்கீள்னு கூப்பிடது தப்பே இல்லை, நீங்க ஏன் மஞ்ச சேலை கட்டின பொண்ண பார்த்தீங்க, அந்த சுடியை சொன்னேன்.எங்கே...................................................................
மஞ்சகலர் சாரிக்கு பக்கத்திலிருந்த, அந்த வெள்ளை சல்வார் மற்றூம் சிவப்பிலால் ஆன துப்பட்டா பெண் கொஞ்சம் நல்லாவே இருந்தாள்,
தங்காய் நன்றி, கிளம்பும் போது நல்ல பிகரை காட்டிகொடுத்து போனதுக்கு,
அண்ணாத்தே ஓவரா ஜில்லாகதே, பக்கத்துல மீசைக்காரர் இருக்காரு, அப்பாவா இருக்கும், எதுக்கும்ம் கொஞ்சம் பார்த்து நிதானமா டீல்ல இறங்கு, வர்ட்டா
என்ன கொடுமை இது, டாடட்டா
அப்படி இப்படி நகர்ந்து நகர்ந்து முன்னேறிவிட்டேன்,( இத படிப்பில காட்ட்டிருந்தா எப்பவோ முன்னேறி இருப்பனு ஏதோ அசரீரி மாதிரி கேட்டது, விவேக் சொல்ற மாதிரி அப்பன் சாபம்தான் வெப்பன் மாதிரி தாக்குது போல)
அப்பாடி, உப்பலீயப்பா கால்ல மெட்டி இல்லை, ஹா ஹா, ஐய்ய்யா கழுத்துலயும் தாலி இல்லை,
அப்போ அநாவசியாமாக என் பாக்கெட்டில் இருந்து எட்டி குதித்து என் எதிரில் நின்றது என்னை போலவே ஒருவன்,
வெள்ளை உடை தரித்திருந்தான், மற்றபடி என்னை போலவே இருந்தது அது, என்னை போல இருந்ததால் அது என அழைக்க எனக்கு பிடிக்கவில்லை. அவர் என்றே இனி சொல்கிறேன்
அவர் சொன்னார், “ ஏண்டா கஸ்மாலம் (மரியாதை கொடுத்தாலும் மரியாதை கிடைக்கமாட்டேங்குதே), இப்படியே ஒவ்வொரு பெண்ணா சுத்திட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்லை,
நான் சொன்னேன், “ அட மானம் ரோசம் வெட்கம் சூடு சுரணைலாம் பார்த்தா ஒரு பிகரை உசார் பண்ண முடியுமா இல்லை, பீச், பார்க், சினிமானுதான் சுத்தமுடியுமா, என்னை போல இருக்கியேனு கொஞ்சம் மரியாதை கொடுத்தா எங்கிட்டயே எகிர்ர,
என்னை போல இருந்தது என் மனசாட்சி என்பதை சொல்ல வேண்டும் என்று அவசியமில்லைதானே, அது எதுக்காக வந்துச்சோ அது செவ்வென நடந்தேறியது
(தொடரும்)
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment