என்ன சொல்றாங்க இந்த பொண்ணு
யாரு இந்த பொண்னோட லவ்வர்,
என்னது லவ்வரா? யாருனு தெரியலையே.
யாரும்மா அந்த பையன்.
இவர்தாங்க என்று தமிழில் சொல்லி கை காமித்தால் நவ்யா.....................................
மச்சி நவிக்கு தமிழ் தெரியும் போலடா, ஐ ஜாலி,,,
அட கூறுகெட்ட குப்பா, இப்ப எதுக்குடா குஷி ஆகுர, இவ உன்னைய லவ்வர்னு சொல்றாடா, என்னடா நடக்குது இங்க, எக்ஸ்க்யூஸ் மீ அக்கா, இவ யாருனே எனக்கு தெரியாது, இவன் தான் பஸ் ஸ்டாண்டல மீட் பண்ணதா சொன்னான், இவங்கிட்டயே கேளுங்க,
அது எப்படி அவன்கிட்ட கேட்கிறது, இந்த பொண்ணு உங்களை தானே சொல்லுது,
என்னது என்னையா, என்னங்க சொல்றீங்க நீங்க நான் இந்த பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே,
உங்க போன் நம்பரை கரைக்க்டா சொல்றா, உங்க ஊரு சொல்றா, இவளுக்கு எப்படி தெரியும்,
டேய்ய்ய் ஸ்ரீ எல்லாம் உன்னாலதாண்டா.
ஸ்ரீ சும்மா இருடா, நானே லவ் பெயிலியர்ல இருக்கேன், என்னைய சொல்லாம உன்னைய சொல்லிட்டாளேனு பீல் பண்ணிட்டு இருக்கேன்,
படுபாவி நானே ஷாக்காகி இருக்கேன், நீ ஏண்டா நேரங்கெட்ட நேரத்துல ஒருதலை ராகம் பாடுறே. அக்கா நிஜமா சொல்றேன் இவ யாருனே எனக்கு தெரியாது, இவன்கிட்ட கேளுங்களேன் இவந்தான் இவளை கூட்டிட்டு வந்தான்,
அவர் உங்க ப்ரண்டாச்சே, அவர் எப்படி உண்மை சொல்லுவார்,
மேடம் சத்தியமா எனக்கு தெரியாது மேடம், அந்த பொண்ணு நாடகம் ஆடுது, நான் ஒரு பஞ்சப்பரதேசி எங்கிட்ட எதுவுமில்லேனு சொல்லுங்க அந்தப்பொண்ணிகிட்ட, பணத்துக்காகத்தான் இப்படி பண்றானு நினைக்கிறேன்,
மச்சான் நான் நீ ஒரு கோடிஸ்வரன் வீட்டு பையன்ன்னு பிட்டு போட்டேன் அதனாலையா இருக்குமோ..........
பாவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ
சாரி மச்சான், சும்மா ஒரு பில்ட் அப்புக்கு அப்படி சொல்லி இருந்தேன், சாரிடா
சாரி கேட்டு என்னடா பண்றது, நாளைக்கு என் பேரே நாறிடுமே
(தொடரும்)
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment