15 May 2009

திருவிளையாடல் - 6

எப்படிடா பாலோ பண்றது, யாராவது பார்த்துட்டு எதாவது ஆகி போலிஸ் கீலிஸ்னு மாட்டி, எப்.ஐ.ஆர் போட்டு என் பாஸ்போர்ட் அதாலே பிரச்சனை ஆச்சினா நான் எப்படி குவைத் போவேன், எப்படி ஸ்டேட்ஸ் போவேன்.

அது உன் சாமர்த்தியம், உன் நோவுக்கு நீ தான் மருந்து சாப்பிடனும்,

அப்போ நாளைக்கு பாலோ பண்ணனுமா என்ன

கண்டிப்பா பண்ணு

(அடுத்த நாள் காலை பஸ் நிறுத்தத்தில்)

வீரா தயவு செய்ஞ்சு நீ என் கூட வராத ப்ளீஸ்.

ஏண்டா உனக்கு ஒரு சப்போர்ட்டுக்குடா

ஏற்கனவே நான் பார்த்த ஒரு ஜோசியத்தில உனக்கு எதிரி உன் பக்கத்திலேதான் இருப்பான்னு சொன்னாங்க,

ஓ அந்த அளவிற்க்கு ஆச்சா, இருடா இரு, உனக்கு நான் வெப்பேன் பாரு ஒரு நாள் ஆப்பு.

சரி பேக்கு மாதிரி பேசாம போவீயா (அப்பாடி ராகு பெயர்ச்சி ஆயிடுச்சி, இனி குரு பார்வை கை கூடனும்)

(அடடா உண்மையாவே குரு பார்வை படும் போல இருக்கே)

ஹேய் கமல், கமல் இங்கே... இங்கே பாரு.

ஹாய் ஸ்ரீ, எப்படி இருக்கே, எங்கே கிளம்பிட்டே

நான் தி.நகர் வரை போறேன், நீ?

நான் கோடம்பாக்கம் டா,

அங்கே உனக்கென்ன வேலை.

வேலைக்கு போறேண்டா...

டேய்ய், நீ இன்னும் மாறலைடா, இன்னும் அப்படியே சிரிக்காமலேயே ஜோக் அடிக்கிற

பாவி, இப்பத்தாண்டா நான் ஜாயின் பண்ணி ஒரு வாரம் ஆச்சி, கண்ணு வைக்காத.

அடப்பாவி கடைசி வ்ரை வேலைக்கே போகக்கூடாதுனு லட்சியத்தோட இருந்தியே டா, ஏண்டா திடிர்னு இப்படி?

பின்னே என்ன பண்ணடா விலைவாசி ஏறிப்போச்சி, இன்னும் எங்கப்பா அதே 10000 மாச மாசம் அனுப்பினா கட்டுபடியாகுமா, அதான் வேலைக்கு போய் செலவு பண்ணலாம்னு வேலைக்கு,

(என்னது 10000ரூ மாச மாசமா, அய்யோ அப்பா நீ ஏன்பா அந்த் மாதிரி இல்லாம போனே)

அடக்கொடுமையே இப்படியா உங்கப்பா உனக்கு கொடுமை பண்றாரு, சரி விடு, நாம இந்த சோகத்தை மறக்க தி.நகர் போறோம்.

அதுக்கு ஏண்டா அவ்ளோ தூரம் போகனும், வடபழனியிலேயே இறங்கிடுவோம்.

ஓ, நீ ரெடியாத்தான் இருக்கியா,

(அடடா இவனை துணைக்கு இழுத்திட்டு போனோம்னா, அப்பிடியே காபி டே, பிஸ்ஸா ஹட்னு போயிடலாமே)

எனக்கு ஒரு சின்ன வேலை தி.நகர்ல அங்கே அத பார்த்துட்டு அப்படியே அங்கேயே எல்லாம்.. ஓகே வா.

சரி வா போவோம்.

(தி.நகர் பேருந்து நிலையத்தில்)

கமலு, மச்சான் ஒரு 500ரூ தாயேன்.

எதுக்கு

எங்கிட்ட 1000ரூ நோட்டா இருக்கு, என் ப்ரண்ட்கிட்ட கொடுக்கனும், நான் கொடுத்திட்டு வந்துடறேன்,

இங்கேயே வெயிட் பண்ணிட்டு இருடா.

இந்தாடா 500ரூ, பாதியாச்சிம் கொடுத்திடுடா,

பாதினா கிழிச்சா கொடுக்கனும்.

டேய்ய், 250ரூ ஆச்சும் திருப்பி தாடா,

பார்க்கலாம், பார்க்கலாம், இங்கேயே இரு வறேன்ன்.

டேய் என்னடா ப்ரண்ட் பார்க போறேன்னு சொல்லிட்டு, அந்த ஆரஞ்சு சுடிதார் பின்னாடி போற,

(விடமாட்டான் போல இருக்கே)
உனக்கு 250 வேணுமா வேணாமா,

ஐயய்யோ, நீ பின்னாடியே போடா, நான் எதுவும் கேட்கலை.

அந்த பயம் இருக்கட்டும்..

(எங்கே போனா, அடடா மிஸ் ஆயிட்டாளே, மை காட் அதோ அங்கே,)

ஹலோ ஹலோ மேடம், ஹலோ ஆரஞ்சி

கிலோ 35ரூ பா,

என்னது 35ரூ யா, அட நான் அந்த பொண்ணை கூப்பிட்டேங்க,

ஹலோ ஆரஞ்சி சுடிதார், எஸ்க்யூஸ் மீ ஒரு நிமிஷம்

யார் நீங்க எனக்கு பயமா இருக்கு.

என்னது பயமா, என்னை பார்த்தா பயமா வருது, என்னை ஞாபகம் இல்லையா அன்னிக்கி கண்டக்டர், செக்கிங்க், டிக்கெட் ஞாபகம் வரலை?

இல்லையே, நான் உங்களை பார்த்ததே இல்லை,

(அடடா இவள் இல்லையோ, ஒரு வேளை பொய் சொல்றாளோ, சே வீராவையே கூப்பிட்டு வந்திருக்கலாம்)

சரி அதை விடுங்க உங்க பேர் என்னானு சொல்லுங்களேன்

அத ஏன் கேட்கிறீங்க, நான் சொல்ல மாட்டேன்,

அடடா அடம் புடிக்காதீங்க, பேர் தானே சொல்லிடுங்களேன், சொல்ல கஷ்டமா இருந்தா எழுதி காட்டுங்க, இல்லாட்டி ஐடி இருக்கா,

என் பேர், என் பேர்

உங்க பேர் என் பேரா, என்ன பேருங்க,

இல்ல என் பேர் ப்ரியா.

ஓ சாரி நான் வேற பேரா இருக்கும்னு நினைச்சேன்

வேற பேரா என்ன வேற பேர், என் முழுப்பேர் சொல்லட்டா

இல்ல வேணாம், நான் தேடி வந்தது வேற பொண்ணு

என் முழுப்பேர் மோகன ப்ரியா


(தொடரும்)

No comments: