14 May 2009

ரோம் - தி வாரியர் - 4

தாஸ் தன் 4 வாரிசுகளுக்கும் பேர் சூட்டும் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்தார்,
கௌஷிகாவிற்கு பிறந்த முதல் குழந்தைக்கு ரோமியோ என பேர் சூட்டினார், கனிகாவிற்கு பிறந்த குழந்தைக்கு பிரண்டன் என வைத்தனர், சுபாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது அதில் மூத்தவனுக்கு லக்ஸ் எனவும் இளைய்வன் கடைகுட்டிக்கு சரத் எனவும் பேர் சூட்டி மகிழ்ந்தனர்.
பிள்ளைகள் நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்(அதெப்படி ஒவ்வொரு நாளும் ஒரு மேனி இருக்கும்னு அசட்டுத்தனமா கேட்க்கப்படாது புரிஞ்சுதா)
அவர்கள் வால்தனம் நாலுக்கு நால் அதிகரித்தது, தாஸால் அவர்களை அடக்க முடியவில்லை, அதனால் குழந்தைகள் நால்வரையும் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்க நினைத்தார், குழந்தைகள் தன்னுடன் இருந்தால் தன்னைப்போல் ஆகிவிடுவார்களோ என்று பயப்பட்டார், மேலும் அவரின் பிள்ளைகள் பணக்காரரின் பிள்ளைகள் என்று ஆணவத்துடன் வளர்வதை அவர் விரும்பவில்லை,
பிள்ளைகள் படிக்க நல்ல ஹாஸ்டல் தேடினார், லடைசியில் கிடைத்தது விஸ்வா மெட்ரிகுலேசன் பள்ளி, அதன் பிரின்ஸிபால் விஸ்வாவை போனில் தொடர்பு கொண்டார்
பிள்ளைகள் படிக்க நல்ல ஹாஸ்டல் தேடினார், லடைசியில் கிடைத்தது விஸ்வா மெட்ரிகுலேசன் பள்ளி, அதன் பிரின்ஸிபால் விஸ்வாவை போனில் தொடர்பு கொண்டார்
பிரின்ஸ் விஸ்வா மிகப்பெரிய செல்வந்தர், அவர் டாக்டர் வசியின் நண்பரும் ஆவார், ஆனால் ஒரு காலத்தில் இருவருக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கிறது, அதையெல்லாம் மறந்துவிட்டு நல்ல நண்பர்களாகவே இப்போது இருக்கிறார்கள்,
தாஸ், டாக்டர் வசியின் மூலம் விஸ்வாவை பற்றி அறிந்தார், அவரே தன் புதல்வர்களை கண்டிப்புடன் வளர்க்க சரியானவர் என நினைத்தார்.
மீண்டும் நல்லதொரு நாளில் தன் புதல்வர்களை விஸ்வா நடத்தும் ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்தார்,

No comments: