15 May 2009

திருவிளையாடல் - 2

கிண்டல் பண்றீங்க, நாளைக்கு மட்டும் என்ன ந்டக்குது பாருங்க அந்த தேவதைக்காக நீங்க அலையோ அலைனு அலையப்போறீங்க, இது மட்டும் நடக்காட்டி என் பேரை மாத்திக்கிறேன் நான்,

உங்க மாத்தாத பேரை இப்ப சொல்லுங்களேன்,

நாடி சோதிட சக்கிரவர்த்தி " ஸ்ரீ ஸ்ரீ *ஸ்ரீ மூர்த்தி*"

ஓகே மிஸ்டர் மூர்த்தி குட் பை, தேங்க் யூ பார் யுவர் இன்பார்மேஷன்,

டேய் தமிழ்ல பேசுடா இங்க தமிழை நாங்கதான் கண்டுபிடிச்சோம்கிற நினைப்புல நிறைய பேர் சுத்துறாங்க, கண்டனக்குரல் கொடுத்திட போறாங்க பார்த்து,

அய்யா நான் வறேன் அய்யா, நான் செல்கிறேன் அய்யா.

தம்பி இன்னொரு விஷயம் பொண்ணு கண்டிப்பா உங்க ஊராத்தான் இருக்கும், நல்ல படியா போங்க, லட்சுமி உங்களை தேடி வரப்போறா.

(சனிக்கிழமை அதிகாலை 8 மணிக்கு)

டேய் ஓம் ஸ்ரீ, ஏந்திரிடா என்னடா 8 மணியாகியும் எழுந்திரிக்காம் இருக்க,

சனிக்கிழமைதானேடா, வாரத்துல 5 நால் வேலை செஞ்சுட்டு டயர்டா தூங்கிட்டு இருக்கேன், டிஸ்டர்ப் பண்னாதே குரு.

தோடா டயர்டாமாம். நீ என்னை செக்கிழுத்தியா இல்ல கல் உடைச்சியா டயர்டானியா, புது ப்ராஜக்ட் வரலைனு சொல்லிகிட்டு பொன்னுங்க கூட கடலை போடுவ, இல்லாட்டி பசங்க கூட அரட்டை, அதுவுமில்லாட்டி இருக்கவே இருக்கு ப்ளாக், அங்கே போயி கத எழுதறேன் கட்டுரை எழுதறேன்னு உட்காருவ, இதுக்கே நீ டயர்டா,

சரி இப்ப உனக்கு என்ன வேணும் பாக்கெட்ல 10ரூ எடுத்துகிட்டு போயி டீ சாப்பிட்டு தம் அடிச்சிட்டுவா, தேவையில்லாம துக்கத்தை கெடுக்காதே.

மச்சி அதைவிடுடா, உன்னைத்தேடி லட்சுமி வரப்போறா.

வாட்ட்ட். என்னடா சொல்றே? யார் அந்த பொண்ணு/? என்னை எப்படி அவளுக்கு தெரியும்.

என்னது பொண்ணா? டேய் எப்ப பார்த்தாலும் பொண்ணு நினைப்பாவே இருக்காதடா, நான் சொல வந்தது

உன் வேலை விஷயமா, இனிமேல் நீ சாட் பண்னும் போது எம்.என்.சி, எம்.என்.சி னு பொண்ணுங்க கிட்ட பிட்டு போட வேண்டாம், ஸ்டேட்ஸ் போறேன் ஸ்டேட்ஸ் போறேன்னு பிட்டு போடலாம்,

என்னடா உளர்றே. ஸ்டேட்ஸ் எப்படி போக முடியும் நான், நான் என்ன சாப்ட்வேர் எஞ்சினியரா?

எங்க அண்ணனோட ப்ரண்ட் கம்பெனில ஆட்டோ கேட் டிராப்ட்ஸ்மேன் தேவையாம், உன்னை ரெபர்
பண்றேன்னு எங்க அண்ணன் சொல்லி இருக்கார், உன்னை உடனே ரெசுமே பார்வேர்ட் பண்ணனுமாம், உடனே கிளம்பு ப்ரௌசிங் சென்னடருக்கு.

அட பாவி இவ்வளவு லேட்டா சொல்றியேடா, கிளம்பு கிளம்பு எங்கே என் சர்ட், எங்கே என் பேண்ட்,
சீ, இடர்வுயூக்கா போகப்போற, ரெசுமே பார்வேர்ட் பண்ணத்தானே போற இப்படியே இந்த் அழுக்கு லுங்கியோடவே வா.

(ப்ரௌசிங் செண்டர் காலை 8.30 மணி)

சீக்கிரம் அனுப்புடா நமக்குத்தான் காலைல அவங்களுக்கு ராத்திரி இது,

இருடா, சிஸ்டம் படு ஸ்லோ டா, மெதுவாத்தான் வரும்,

அப்பாடி ஓப்பன் ஆய்டுச்சி, சீக்கிரம் ரெசுமே அட்டாச் பண்னி அனுப்பு,

ம்ம்ம்ம்ம், யெஸ், அனுப்பியாச்சி, ஒரு 5 மினிட்ஸ் வெயிட் பண்ணு கிளம்புவோம். நான் மெயில் செக் பண்ணிட்டு வறேன்.

ஏ மச்சி, யாருடா மோகன குமாரி, ஹாய்னு ஒரு மெயில் போட்டிருக்கு..

ம்ம்ம். தெரியலையே, நோக்ரி, மான்ஸ்டர்ல இருந்து வந்த மெயிலா இருக்கும்.



ஹாய்
ஐம் மோகனா, மோகன குமாரி,
ஹௌ ஆர் யூ...



மச்சி உன்னோட ஜோசிய பலன் லைட்டா பலிக்குது போல இருக்கே,

போடா லூசு, அதையெல்லாம நம்புவாங்க, அதுவுமில்லாம மின்னல் மாதிரி நேரா இல்ல வருவானு சொன்னான். இவ ஈ மெயில் இல்ல வந்திருக்கா.


கரைக்ட் தான் ஈமெயிலுக்கு தமிழில் என்ன??


*தொடரும்*

No comments: