அப்போது தூரத்தில் 4-5 பேர் சூர்யா சூர்யா என சத்தம்போட்டு கொண்டு வருவது கேட்டது)
நீலாம்பரி அவர்களை பார்த்து கை அசைத்தாள்,
ரோ : யார் அவங்க
நீலா : என் அண்ணன்கள்
ரோ : சூர்யானு கூப்பிடுறாங்க
நீலா : அது என் பேர்தான், வீட்டில் சூர்யாதான்
ரோ : சூர்யா பேர் நல்லா இருக்கு
நீலா : தேங்க்ஸ்
ரோ : ஓகே நாங்க கிளம்புறோம், எங்களைய தேட போறாங்க.
நீலா : வாங்களேன் என்னோட அண்ணன்களை இண்ட்ரோ கொடுக்கிறேன்,
ரோ : சாரி அதுக்கு டைம் இல்லை, நாங்க கிளம்புறோம் வாடா லக்ஸ் டைம் ஆச்சி
நீலா அவர்களை பார்த்துகொண்ட்டே இருந்தாள், அவர்கள் அவளை திரும்பி கூட பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர்
லக்ஸ் : அவள்கிட்ட போன் நம்பர் வாங்கி இருக்கலாம் நீ
ரோமியோ : எதுக்கு
லக்ஸ் : சும்மா பேசத்தான்,
ரோமியோ : வாங்கனும்னு தோணலை, அப்படி தோணிச்சினா வாங்கி இருப்பேன்
லக்ஸ் : ஏன் தோணலை
ரோ : தோணலை, சரி வா டிரைவர் வந்துட்டார், கிளம்பலாம்
மீண்டும் கார் சாலையில் தன் பயணத்தை நால்வரோடு தொடங்கியது.
கார் விஸ்வா ஹாஸ்டலின் உள்ளே நுழைந்தது, அங்கே.........
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment