15 May 2009

திருவிளையாடல் - 4

( வேணாம் அனுப்பாதே, அனுப்பாதே டிஸ்கார்ட் பண்ணு, உன்னால பாதிக்கப்பட்டவன் எவனோதான் உன்னை டீஸ் பண்ண அனுப்பி இருக்கான், வேண்டாம் வேண்டாம் அனுப்பாதே, அனுப்பாதே, அனுப்ப்ப்ப்......)

*(Mail Has Sent Successfully)* **


(சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஒரு திங்கள் கிழமையில்)

டேய் ஸ்ரீ இன்னிக்கு ஆபிஸ் போலயா நீ,

இன்னிக்கு லீவு போட்டேன், தி.நகர் போனும் ப்ரண்ட் பார்க்க, அவன் அடுத்த வாரம் GULF போறான், அதான் சின்ன ட்ரீட் வாங்க போறேன்,

அவனா கொடுத்தாதாண்டா ட்ரீட் நீயா வாங்கினா அது ட்ரீட் இல்லை, கொள்ளை,

எதுவா இருந்தா என்ன எனக்கு தேவை ட்ரீட் அவ்வளாவுதான், வீரா இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவான், அவனும் நானும்தான் அவனோட தண்டர் பேர்ட்ல பந்தாவா போறோம்,

போ, போ ஏதோ நல்லா இருந்தா சரி.


தட் தட் தட்.....

யாரோ கதைவை உடைக்கிறாங்க, வீரா வந்துட்டான்ன்ன்.

ஹாய் வீரூ, கமான் லெட்ஸ் மூவ்.....

என்ன மூவ், பைக் ரிப்பேர் பஸ்லதான் போகனும், உங்கிட்ட பைக் இருக்கா.

பைக்க்க்க் ரிப்பேரா.... அடப்பாவி அதுல போயி பந்தா காட்டலாம்னு நினைச்சேனே, எங்கிட்ட ஏதுடா பைக்கு, அதான் சென்னை வரதுக்கு முன்னாடியே வித்து காசாக்கிட்டேனே...

அப்போ 27C புடிச்சி கிளம்பனும், கிளம்பு போலாம்.

(பஸ் ஸ்டாப் போயாச்சி, பஸ்சும் கிடைச்சாச்சி, டிக்கெட்டும் எடுத்தாச்சி)

டேய் ஸ்ரீ அங்கே பார் ஒரு பொண்ணு என்னையே லுக் விடுறா, இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோ என்னோட அழகபத்தி

அது ஒன்னுமில்லடா மனுசாள் நடமாடுற இடத்தில்...

டேய்ய்ய்ய்ய்

சரி விடு வேறு உதாரணம் சொல்றேன்.

ஒன்னும் சொல்ல வேணாம், கம்முனு வாடா.

டேய் அந்த பொண்ணையா சொன்னே...

ஆமா

அந்த சாண்டல் கலர் சுடியா

ஆமாம்,

அந்த ரெட் துப்பட்டாவோட

ஆமாம்,

அழகா மூக்குத்தி இருக்கே அவளா

ஆமாம்பா ஆமாம், ஏண்டா இப்ப என்ன பிரச்சனை அதுல உனக்கு.

மச்சி அவள நான் டெய்லி ஆபிஸ் போகும்போது பஸ்ல பார்ப்பேன், பேசனும்னு ரொம்ப நாள் நினைச்சேன், ஆபிஸ் டைம் ஆய்டும்னு பேசாம போயிடுவேன், இன்னிக்கு பேசிட வேண்டியதுதான்.

டேய் பஸ்ல ஏறின இன்பிட்வீன் கேப்ல என்னடா புது கதை விடுறே, வேணும்னா பாரு அந்த பொண்ணு தி.நகர்தான் போவா.

சே 27C தி.நகர் போகும்னு இத்தனை நாளா தெரியாம போச்சே,

என்ன நக்கலா, ஏன் வ்டபழனில இறங்கலாம், கோடம்பாக்கம்ல இறங்கலாம், ஏன் பாண்டி பசார்ல கூட இறங்கலாம், ஆனா தி.நகர்லதான் இறங்குவா வேணும்னா பாரு.

சரி பார்க்க்லாம், டேய் அவளுக்கு சீட் கிடைச்சிடுச்சி

என்னடா மெடிக்கல் சீட் கிடைச்ச மாதிரி சொல்ற, நமக்கும் இடஒதுக்கீடு கிடைக்கும்டா,

டேய் ஆமாம்டா அவ பின்னாடி சீட் இப்போ ப்ரீயாயிடுச்சி வா வா....

இங்கே இருந்தே பேசட்டுமா, இல்லே பஸ் ஸ்டேண்ட் போயிட்டு பேசட்டுமா,

அது உன் சவுகர்யம்டா, எல்லாரும் மொத்தனும்னா பஸ் சரியானது, அந்த பொண்ணு கழட்டி அடிக்கனும்னா அவ எங்க போறாளோ அப்படியே பாலோ பண்ணி போய் அடிவாங்கலாம்,

என்னடா இப்படி சொல்றே, பின்னே வேற வழியே இல்லையா,

ஒரு ஐடியா தரேன், கொஞ்சம் ரிஸ்க் கம்மி, ஆனாலும் ரிஸ்க்தான்,

என்ன?

ஒரு துண்டு சீட்டில் உன் போன் நம்பர் பேரோட முன்னாடி தூக்கி போடு, கால் பண்ணா உன் அதிர்ஷ்ட்டம்,

பண்ணாட்டி

அவ அதிர்ஷ்ட்டம்.

ஐயோ துண்டு சீட்டு இப்பனு பார்த்து எதுவிம் இல்லியே எங்கிட்ட, ஒரு பத்து ரூபாய் இருக்கு இது ஓகேவா, ரூபாய் நோட்டுல எழுதுறது சட்டப்படி தப்பாச்சே, உன் பாக்கெட்ல இருக்கா,

டேய் டேய் பாக்கெட்ல கைவைகாதே,

ஆங், கிடைச்சாச்சி, இதோ துண்டு சீட்டு

டேய் அது...

கம்முனு கிடடா, முதல்ல என் நம்பர், அப்புறம் என் மெயில் ஐடி போட்டுடறேன், அவ சீட்டில் போட்டாச்சி, வா வா எழுந்திருச்சிடலாம், எதாவது பிரச்சனை வந்தா ஓட வசதியா இருக்கும்.

ஒன்னும் பிரச்சனைவராது, இங்கேயே இரு நான் இந்த ஸ்டாப்ல இறங்கிறேன், தி.நகர்லயே வெயிட்
பண்ணு 10 நிமிஷத்துல வறேன்,

எங்கடா போற, எதுவும் பிரச்சனையாயிடாதே,

அட நில்லு மச்சி ஸ்ரீ.. ஒரு பிரச்சனையும் ஆகாது, உனக்கு ரொம்ப நாளா ஒரு பாடம் சொல்லி தரனும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதான் அந்த விஷயமாதான் போறேன். நீ பஸ் ஸ்டேண்ட்ல வெயிட் பண்ணு வந்துட்டேன்,

ஓகே, டேக் யுவர் ஓன் டைம்ம்.

(ம்ம்கூம் இதுக்கொன்னும் குறைச்சலில்லை) பை...

(பஸ் தி.நகர் பஸ் ஸ்டேண்டில் நுழைகிறது)

(செக்கிங் இன்ஸ்பெக்டர்) டிக்கெட், டிக்கெட் சார் டிக்கெட் காட்டுங்க,

டிக்கெட்ட்ட், ஓ சாரி அது என் ப்ரண்ட்கிட்ட இருக்கு, அவர் இன்னும் ஒரு 5 மினிட்ஸ்ல வருவார்,

வெயிட் ப்ளீஸ்

யோவ் என்ன விளையாடுறியா, டிக்கெட் கேட்டா ப்ரண்டுங்கிறே, 5 நிமிஷம்ங்கிரே, டிக்கெட் எடு இல்லாட்டி பைன் கட்டு 500ரூ

ஹலோ மரியாதையா பேசுங்க சார், ஒரு நிமிஷம் இருங்க நான் கால் பண்ணி கூப்பிடுறேன்,

ஹலோ வீரா டிக்கெட் எங்கடா, இங்க செக்கிங்ல மாட்டிகிட்டேன், வந்து சீக்கிரம் கொடு இல்லாட்டி 500ரூ பைன் னாம்,

ஹா ஹா ஹா

ஏண்டா சிரிக்கிறே

ஹாஹாஹாஹா

ஏண்டா மறுபடியும் சிரிக்கிறே,

இல்ல உனக்கு பாடம் கத்துதரனும் நினைச்சேன் கத்துக்கொடுத்துட்டேன்,

என்ன சொல்றே, ஒன்னும் புரியலையே

நீ ஒரு துண்டு சீட்டு எடுத்தியே அதான் பஸ் டிக்கெட்டு, அந்த பொண்ணு அங்கே இருந்தா போயி கேளு இல்லாட்டி, 500ரூ தண்டம் அழுவு

கிராதகா

சாரி மச்சி எதுவும் கேட்கலை, டாடா

எங்கே அந்த பொண்ணு.....................


*தொடரும்*

No comments: