போடா லூசு, அதையெல்லாம நம்புவாங்க, அதுவுமில்லாம மின்னல் மாதிரி நேரா இல்ல வருவானு
சொன்னான். இவ ஈ மெயில் இல்ல வந்திருக்கா.
கரைக்ட் தான் ஈமெயிலுக்கு தமிழில் என்ன??
மின்னஞ்சல், அது எதுக்கு உனக்கு இப்போ,
மின்ன(ஞ்ச)ல் லயே மின்னல் இருக்கே மசசி, அப்புறம் என்னடா, ஜோசியம்னா அப்படித்தான் சூசகமா சொல்லுவாங்க, அப்படியேவா சொல்ல முடியும், நீ வேணும்னா பாரு, இவந்தான் அவ, இவ இல்லாட்டி நீ அவ்வளவுதான், பார்த்துக்கோ,
டேய் டேய் என்னோட ஆர்குட்ல பார்த்துட்டு எதாவது பசங்க இந்த மாதிரி பொன்னுங்க பேர்ல அனுப்பி
இருப்பாங்க, இதுக்கெல்லாம் ரிப்ளை டைம் வேஸ்டபண்ண நான் ரெடியா இல்லே, கிளம்பலாம் வா.
இருடா அட்லீஸ் ஹாய் ஆச்சிம் அனுப்புடா,
அது அப்படியே இருக்கட்டும், நீ கிளம்பு, நான் சைன் அவுட்ட் பண்றேன். ம்ம்ம் பண்ணிட்டேன், வா போலாம்.
ஓகே. நல்லா இருந்த சரிதான். வா போகலாம்.
(சனிக்கிழமை மாலை 6 மணி)
ஹலோ நான் ஸ்ரீ பேசுறேன், நீங்க, ஆமாங்க ஓம் ஸ்ரீ தான் பேசுறேன்.
அண்ணா நான் அனந்தன் பேசுறேன், முடிவிலான்,
சொல்லு அனந்தன், அண்ணாலாம் எதுக்கு ஸ்ரீனே சொல்லுப்பா,
சரிடா ஸ்ரீ,
அடப்பாவி, இதுக்கு அண்ணாவோட நிறுத்தி இருக்கலாம், சரி என்ன விஷயம் சொல்லு.
என் ப்ரண்ட் ஒருத்தனோட ரெசும் அனுப்பி இருக்கேன், அதான் சொல்ல கூப்பிட்டேன், நீங்க உங்க
கம்பெனிக்கு அனுப்பிடுங்களேன்.
நான் திங்கள்கிழமை போகும் போது பார்க்கிறேன்
இல்லைனா நீங்க இப்பவே போய் பார்த்தா நல்லா இருக்கும், எதாவது சேஞ்ச் பண்ணணும்னா நான் உடனே இப்பவே மாத்திட சொல்லி அனுப்பி வைப்பேன், சரி நான் ஒரு 7 மணி பக்கமா கால் பண்ணி சொல்றேன், ஓகேவா, பை
ஓகே பை
டேய் குரு, வாடா ப்ரௌசிங் செண்டர் போலாம்.
நான் சினிமா போகிறேன், நான் வரலை நீயே போ,
ஓகே, பை
(6.30மணி ப்ரௌசிங் செண்டரில்)
(மெயில் எதுவும் புதுசா வரலையே, தப்பா அட்ரஸ் எதுவும் அனுப்பிட்டானா, இந்த மோகனா மெயில் தானே கடைசியா வந்திருக்கு. ./..................................../ இந்த மெயிலுக்கு ஒரு ரிப்ளை போடலாமா, ஒரு வேளை அந்த ஜோசியர் சொன்னது உண்ண்மையா இருக்குமோ. வேணாம் ஸ்ரீ, கண்ட்ரோல் கண்ட்ரோல், ரிப்ளை தானே அனுப்பித்தான் வைப்போமே, )
ஹாய்,
நான் நல்லா இருக்கேன், நீங்க யாருனு தெரிஞ்சிக்கலாமா?
( வேணாம் அனுப்பாதே, அனுப்பாதே டிஸ்கார்ட் பண்ணு, உன்னால பாதிக்கப்பட்டவன் எவனோதான் உன்னை டீஸ் பண்ண அனுப்பி இருக்கான், வேண்டாம் வேண்டாம் அனுப்பாதே, அனுப்பாதே, அனுப்ப்ப்ப்......)
*(Mail Has Sent Successfully)* **
*தொடரும்*
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment