15 May 2009

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 2

மச்சி, ஒரு சின்ன பிரச்சனைடா....

என்ன பிரச்சனை நம்ம ஊரு ஞாபகத்துல டிக்கெட் எடுக்காம வித் அவுட்ல வந்தியா.

அதெல்லாம் இல்லடா.

பின்ன என்ன பிரச்சனை

ஒரு பொண்ணு....!

பொண்ண்ன்ன்ன்ன்ன்னா.............................................

என்னடா இப்படி அலர்ற, சீக்கிரம் பஸ்ஸ்டேண்ட் பக்கத்துல இருக்கிற சர்ச்க்கு வாடா.

நீ வாசல்லயே நில்லு. வந்துட்டேன்.

(ஓவர் டூ சர்ச் பார்க் கான்வெண்ட் வாசல், சாரி சர்ச் வாசல் மட்டும்)

நீ 7.30க்கு கால் பண்ணும் போதே நினைச்சேன், 7.30 வந்துடுச்சினு, ஆனா இவ்ளோ சீக்க்ரத்தில உண்மையாவே எதிர் பார்கலை டா, என்ன பொண்ணு என்ன பிரச்சனை.....

மச்சி அங்க பாரு அந்த பெஞ்ச் உட்காந்திருக்குல்ல அந்த பொண்ணுதான்.

நீ என்ன பண்ண, இல்ல அவ என்ன பண்ணா, தெளிவா சொல்லுடா.

அந்த பொண்ணு பேரு நவ்யா. அதுக்கு ஒரு வேலை வேணும்.

வேலையா? என்ன வேலை என்ன படிச்சிருக்கு? அதை விடு. இனக்கு எப்படி தெரியும் இந்த பொண்ணை?

உண்மையை சொல்லு ஊரை விட்டு ஓடி வந்துட்டீங்களா?

அந்த பொண்ணை இந்த பஸ்ஸேட்ண்ட்ல காலைல தான் பார்த்தேன்.

அப்புறம் எப்படி? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு.

சொல்றேன். நான் வந்து இறங்கினதும், இந்த பொண்ண பார்த்தேனா, அவளும் பார்த்தா. அவ பார்த்தானு
நானும் பார்த்தேனா.

நிறுத்து, எப்போ பார்கிறதை நிறுத்தினே? எப்போ பேசினே?

சொல்றேன். அவளுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோனு நான் எதுவும் பேசலை. சரி எதுக்கும் உதவியா இருக்கட்டுமேனு உன் நம்பரை ஒரு சீட்டில எழுதி அவ பக்கத்துல தூக்கி போட்டேன். எடுக்கிறாளா இல்லையானு பார்த்தேன்.

அடப்பாவி என் நம்பர் ஏண்டா யூஸ் பண்ணே

எனக்குதான் நம்பர் இல்லையேடா, இருந்தா நான் ஏன் உன்னோடது யூஸ் பண்றேன்.

நம்பர் மட்டும்தானே கொடுத்த என் பேரை எதுவும் யூஸ் பண்ணலையே.

இல்லடா. ஆனா என் பேர் மட்டும் எழுதிட்டேன்.

சூப்பரப்பு....

முழுசா சொல்ல விடுடா. அவ அந்த சீட்டை எடுக்கவே இல்லை. உடனே நான் அங்கிருந்து கிளம்பிட்டேன். ஆனா மனசு கேட்காம மறுபடி அங்கே போனேன். ஆனா அவ அங்க்கெ இல்ல.

மச்சி நீ என்ன லாசாரா, ஜெயகாந்தனா டா. இப்படி எக்ஸ்ப்ளைன் பண்றே. மணி ஸ்டைல்ல டப்பு டிப்ப்னு சொல்லி தொலைடா

சொல்றேண்டா, ஊடால பேசி என்னை கன்ப்யூஸ் பண்ணாதே. அங்க ஒரு பூத்கிட்ட நின்னுகிட்டு இருந்தா நான் கொடுத்த சீட்டை கையிலே வச்சிகிட்டு, நான் பக்கத்துல போனவுடனே என் பக்கத்துல வந்து அழுதுகிட்டு நின்னா.

அழுதாலா? ஏன்? எதுக்கு?

அவ என்னென்னமோ பேசினாடா என் கையை பிடிச்சிகிட்டு. சுமார் 1.30 ஹவர்ஸ் பேசி இருப்பா.

1.30 மணிநேரமா என்ன பேசினா?

என்ன பேசினானு எனக்கு என்ன தெரியும்? எனக்கு தான் கன்னடம் தெரியாதே.


*(தொடரும்)*

No comments: