மீண்டும் நல்லதொரு நாளில் தன் புதல்வர்களை விஸ்வா நடத்தும் ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்தார்,
ஹாஸ்டலுக்கு நால்வரும் தாஸ் அனுப்பிய காரில் சென்று கொண்Dஇருந்தனர்,
அவர்கள் அயோநீர் பங்களாவில் இருந்து வெகு தொலைவில் இருந்தது, அந்த ஹாஸ்டல் கம் ஸ்கூல், சூரியன் கிழக்கில் உதித்த்து கொஞ்சம் கொஞ்சம்மா மேலே ஏறி நடு உச்சிக்கு வந்து, பின்னாடி கொஞ்சம் கொஞ்சமா கீழே இறங்கி கொண்டிருந்தது, அதாவது அந்தி சாயும் நேரத்தில் பயணித்து கொண்டிருந்தனர்,
அவர்கள் வந்தகார் பழுதடைந்து நின்றது, டிரைவர் இவர்கள் நால்வரையும் தனியாக விட்டுசென்றார் மெக்கானிக்கை கூட்டிவர.
அப்போது
சற்று தொலைவில் ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது.
நான்கு சிறுவர்களும் கூச்சல் வந்த திசையை நோக்கி சென்றனர்
சற்று தொலைவில் ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது.
நான்கு சிறுவர்களும் கூச்சல் வந்த திசையை நோக்கி சென்றனர்
எங்கு தேடியும் யாரும் கண்னில் படவில்லை, ப்ரணடன் மற்றும் சரத் பயந்துவிட்டனர், அவர்கள் பயந்து மறுபடி கார் அருகில் சென்று விட்டனர், லக்ஸும் ரோமியோவிடம் போகலாம் என்றான் ஆனால் அந்த 13 வயது டீன் ஏஜ் ரோமியோ சப்தம் எங்கிருந்து வருகிறது என நோட்டமிட்ட படியே இருந்தான்,
கடைசியில் ஒரு சிறிய குழியில் அவளை கண்டனர், அவள் மயங்கி இருந்தாள். ரோமியோ தைரியமாக கீழே இறங்கி அவன் வைத்திருந்த வாட்டர் பாக்கெட்டில் இருந்து அவள் முகத்தில் தண்ணிரை தெளித்தான்,
விழித்து பார்த்த அந்த சிறுமி பயந்து போனாள், அவள் பிறகு சுதாரித்து வந்தவர்கள் தன்னை காப்பாற்ற வந்தவர்கள் என அறிந்தாள்,
ரோமியோ : யார் நீ எப்படி இங்கே வந்தே
அவள் : என் பேர் நீலாம்பரி, நான் சிலோன்ல இருந்து வந்திருக்கேன், நான் என் அண்ணன்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோவிலை பார்க்க வந்தோம்,
ரோ : அவங்கெல்லாம் எங்கே, நீ எப்படி இந்த குழியில் விழுந்த.
நீலா : நான்ங்க சும்மா பீச்சுக்கு வந்தோம், எல்லாரும் பீச்சுல இருக்காங்க, நான் அப்படியே போன் பேசிட்டே வந்தேன், தெரியாம இங்கே வந்து விழுந்துட்டேன்.
ரோ : சரி பார்த்து போம்மா, துணைக்கு நாங்க வேணும்னா வரட்டுமா
நீலா : நோ தேங்க்ஸ், உங்க பேர் என்னானு நான் தெரிஞ்சிக்கலாமா
ரோ : நான் ரோமியோ, இது என் தம்பி லக்ஸ்,
நீலா : நைஸ் நேம், சரி நான் கிளம்பறேன், அண்ணா தேடுவார், ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு.
ரோ : ஆபத்துல இருக்கிறவங்களுக்கு உதவுறது தானே மனித பண்பு. அதானே நான் செஞ்சேன்
(அப்போது தூரத்தில் 4-5 பேர் சூர்யா சூர்யா என சத்தம்போட்டு கொண்டு வருவது கேட்டது)
No comments:
Post a Comment