15 May 2009

திரு(வின்) விளையாடல் ஆரம்பம் - 1

இந்த சிறுகதையின் நாயகர்கள் இருவர். 1. ஸ்ரீநிவாசன். 2.ஸ்ரீகாந்த். இவர்கள் போட்ட ஆட்டமே திருவிளையாடலாக)


(அதிகாலை 7.30 மணி(!?) அளவில், பெங்களூரூ பெங்களுராக இருந்த காலத்தில் மெஜ்சஸ்டிக் பஸ் ஸ்டேண்ட் டெலிபோன் பூத்தில்)

மச்சான் ஸ்ரீ, நான் ஸ்ரீ பேசறேண்டா, நான் இப்ப மெஜஸ்டிக்கில நின்னுட்டு இருக்கேன். உன் ரூம் எங்கடா

ஸ்ரீ.. நான் ஸ்ரீதாண்டா பேசறேன். என்னடா காலங்காத்தால வந்து நிக்குற.

டேய் மணி 7.30 ஆச்சுடா.

அட இந்த டூபாக்கூர்ல 9 மணி ஆனாதாண்டா விடியலே. சரி சரி சிவாஜி நகர் பஸ்டேண்ட் வந்திடு அங்க இருந்து, என் ரூம் பக்கத்திலதான் இருக்கு

மச்சி பைக்ல வந்து பிக் அப் பண்ண மாட்டியாடா,

(பைக்கா அடப்பாவி) டேய் இது என்ன சேலமாடா ஈசியா வண்ண்டியோட்ட, இங்க லைசென்ஸ், ஆர்சி எல்லாம் இல்லாம கூட ஓட்டிடலாம், ஆனா KA ரெஜிஸ்ட்ரேஷன் இல்லாம வண்டியோட்டினே, எதாச்சும் ஒரு காரணத்தை கண்டுபிடிச்சி சிட்டிசன் அங்கிள் அது கொத்தா, இது கொத்தானு சொல்லி நம்ம வண்ண்டியை கொத்திட்டு போய்டுவாங்க. டேய் சென்னன சிட்டிசன் அக்கிளுக்கே நான் 50ரூ மேல கொடுட்ததில்லே. ஆனா இங்க நான் 2 தடவ எங்கிட்ட இருந்து 500 கறந்துட்டாங்கடா

அப்படியாடா...

என்ன நொப்பிடியா, கிளம்பி வாடா சீக்கிரம்.

இன்னும் அரை மணிநேரத்தில் உன் அறையில் இருப்பேன் (கவித கவித)

(மதியம் 11.30)

எங்க போனான் இந்த பய. 4மணி நேரமாச்சி. மெஜஸ்டிக் டூ சிவாஜி நகர் 30 நிமிசம்தானே. (அப்போது செல் சிங்காவுது, அதாவது ரிங் ஆவுது)

ஹலோ, டேய் ஸ்ரீ எங்கடா போன ஏண்டா இவ்ளோ நேரம். உன்னால நான் இன்னிக்கு லீவுடா.

மச்சி, ஒரு சின்ன பிரச்சனைடா....

என்ன பிரச்சனை நம்ம ஊரு ஞாபகத்துல டிக்கெட் எடுக்காம வித் அவுட்ல வந்தியா.

அதெல்லாம் இல்லடா.

பின்ன என்ன பிரச்சனை

ஒரு பொண்ணு....!


பொண்ண்ன்ன்ன்ன்ன்னா.............................................



(தொடரும்)

No comments: