அது ஒரு பெண்கள் சங்கம்டா,அதுக்கு பேர் கூட என்னமோ தாமசமோ என்னமோதானே. தாமசமா
என்னடா பேர் இது.
ஆங் நியாபகம் வந்துட்டது,
*த.த.ம.ச* - *த*ங்க *த*மிழ் *ம*கள் *ச*ங்கம்
மச்சி கிளம்புடா....
எங்க எப்படி எப்போ,
கேள்விலாம் கேட்காத கிளம்பிட்டே இரு, எச்.ஏ.எல் 3ர்ட் ப்ளாக் போறோம், பஸ் நம்பர் என்னனு தெரியலையே.
பஸ்ஸா...? மச்சி ஆட்டோல போலாம்டா, நான் நடுவிலே உட்காந்துக்கிறேன், அந்த பொண்ணு எனக்கு இடப்பக்கம், நீ வலப்பக்கம் ஓகேவா?
டேய் ஒரு சமயம் நீ பேசறது பார்த்து அப்பாவித்தனமாதான் இருக்கு, ஆனா பல சமயம் உன் பேச்சு கொஞ்சம் கோக்கு,மாக்காத்தான் இருக்கு, கொஞ்சம் கம்முனு பஸ்ல வறீயா
இல்லடா மறுபடி அந்த பொண்ணை எப்போ பார்ப்போமோ, மாட்டோமோ, அதான் ஒரு தடவை..... சரி விடு.. பஸ்லயே போவோம் வா
(மாலை 4 மணி)
மச்சி அதோ அந்த ரோடு கட்டாகிதுல்ல அங்கத்தான் ததமச இருக்கு,
டேய் ஸ்ரீ ப்ரூட் ஜூஸ் சாப்பிடலாமா, பாவம் அந்த பொண்ணும் பசிக்கும் இல்லே.
அடிங்கொ----------------- , நானே காலைல இருந்து சாப்பிடாமத்தான் இருக்கேன் என்ன, ரொம்ப ஓவரா போகாதே, சரி சரி நீங்க மட்டும் சாப்பிடுங்க, எனக்கு வேணாம்.
சரி வேண்டாம் விடு அதான் பக்கத்துல வந்துடுச்சி இல்லே, வா போகலாம்
(த.த.ம.ச வாசலில்)
ஐயா,,,, அம்மா, யாராச்சும் இருக்கீங்களா....
(அப்போ ஒரு கணீர் குரல்) நான் சென்ஸ் இது பெண்கள் சங்கம், பெண்க்கள் மட்டும்தான் இருப்பாங்க,
அய்யோ சாரிம்மா, இது த.த,ம.ச தானே.
நான்-சென்ஸ் இது த.த,ம.ச நான் ஒன்னும் அம்மா இல்லே, வேணும்னா அக்கா சொல்லிக்கோ.
சரிங்க்கா,
ஓகே மேன் வாட் யூ வாண்ட்
இது தங்கத்தமிழ் மகள்......
யெஸ், அப்கோர்ஸ் வாட் யூ வாண்ட், வாட் யூ நீட்
அக்கா இதுல தமிழே வரலையே
தம்பி தமிழ்ல பேர் வைக்கிறதுலாம் ஒரு பேருக்குத்தாண்டா, சும்மா சும்மா தமிழிலேயே பேசினா யாரு மதிப்பா அப்பப்போ நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாத்தான் மதிப்பு, அவனவன் மிரண்டு போவான். அதிருக்கட்டும் உனக்கென்ன பிரச்சனை, உனக்கு இங்கே என்ன வேலை....
அக்கா இந்த பொண்ணு பேரு நவ்யா, தமிழ் தெரியாது,
ஓ ஷீ டோண்ட் நோ டமில், வாட் அ பிட்டி,
(ம்க்கூம் இதுக்கொண்ணும் குறைச்ச்லில்லை) அக்கா இவ ஒரு கன்னடப்பொண்ணு, பஸ் ஸ்டாண்ட்ல எங்க போறதுனு தெரியாம முழுச்சிகிட்டு இருந்தா, அப்புறம் உங்க சங்கத்தை பத்தி தெரிஞ்சி இங்க கூட்டிட்டு வந்தோம்.
ஏய் மேன், உண்மையை சொல்லு, இல்ல போலிஸ்க்கு போக வேண்டி வரும்.
என்னது போலிஸ்ஸா, ஏன் மேடம்?
உன்மேல எனக்கு டவுட்டா இருக்கு, நீ ஏதோ ஒரு பொன்னை ஏமாத்திட்டு அவளை வந்திருக்கியோனு சந்தேகப்படுறேன்ன்.
அக்கா அக்கா அப்படிலாம் அவசரப்பட்டு சந்தேகப்படாதீங்க, இருங்க என் ப்ரண்டையும் அந்த பொண்ணையும் கூப்பிடுறேன்.
(உள்ளே இருவரும் வர) இவன் என் ப்ரண்ட் ஸ்ரீ, இது அந்த பொண்ணு நவ்யா.
உன் பேரை சொல்லு
நான் ஸ்ரீ.
என்னடா பேரைக்கேடா ஸ்ரீ ஸ்ரீனு விளையாடுறீங்களா,
அய்யய்யோ அக்கா அப்படிலாம் இல்லை, 2 பேரோட பேரும் ஸ்ரீ தான்,
இந்த பொண்ணை எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே. யாக்கே ரீ கன்னடம் கொத்தா?
டேய் என்னடா கன்னடம் கொத்து கறியா என்ன சொல்றாங்க.
டேய் இது கன்னடம், அவங்க பேசி முடிக்கட்டும் அப்புறம் என்ன பேசினாங்கனு கேட்டு சொல்றேன்)
என்ன சொல்றாங்க இந்த பொண்ணு
யாரு இந்த பொண்னோட லவ்வர்,
என்னது லவ்வரா? யாருனு தெரியலையே.
யாரும்மா அந்த பையன்.
இவர்தாங்க என்று தமிழில் சொல்லி கை காமித்தால் நவ்யா.....................................
(தொடரும்)
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment