என்ன சொல்றே, ஒன்னும் புரியலையே
நீ ஒரு துண்டு சீட்டு எடுத்தியே அதான் பஸ் டிக்கெட்டு, அந்த பொண்ணு அங்கே இருந்தா போயி கேளு இல்லாட்டி, 500ரூ தண்டம் அழுவு
கிராதகா
சாரி மச்சி எதுவும் கேட்கலை, டாடா
எங்கே அந்த பொண்ணு.....................
ஹலோ எஸ்க்யூஸ்மீ மேடம்
ஹலோ சார் முதல்ல சீட்டு எடுங்க. இல்லாட்டி பைன் கட்டுங்க, உங்க ரொமான்ஸ்லாம் அப்புறம்,
ரொமான்ஸா? அதெல்லாம் இல்லை சார்? இந்தாங்க என் செல் போன் நான் டிக்கெட்டை கொடுத்திட்டு இதை வாங்கிக்கிறேன், வெயிட பண்ணுங்க....
ஹலோ மேடம், ஹலோ, ஹாய்
யார் நீங்க,
நான் ஸ்ரீ. சுருக்கமா ஓம் ஸ்ரீனு சொல்லுவாங்க, என்னோட டிக்கெட் உங்ககிட்ட.....
டிக்கெட்? புரியலையே..., என்ன டிக்கெட்?
அது வந்து நான் என் பேர் எழுதின டிக்கெட். நான் டிக்கெட்.. உங்க சீட், இல்லாட்டி பைன், போன் நம்ப்ர்ர்ர், (ஐயோ எனக்கே புரியலையே)
நான் பஸ் பாஸ் வச்சி இருக்கேன், எனக்கு டிக்கெட்லாம் தெரியாது, உங்களை பார்த்தா பயமா இருக்கு, நான் போலிஸ் கூப்பிடுவேன், போலிஸ்....
என்னது என்னைய பார்க்க பயமா இருக்கா, சரி விடுங்க, நான் கிளம்பிட்டேன், எதுக்கு அங்கிள்ஸ டிஸ்டர்ப் பண்றீங்க அவங்களுக்கு 1000 வேலை இருக்கும், தேங்க்ஸ் பை
(சே ஒரு பொண்ணுகிட்ட கூட பேச தெரியலையே நமக்கு)
(அப்போ அந்த சீட்டில் தான் இருக்குமோ, போய் அந்த சீட்டில் தேடுடனும்)
காணோமே, 2ரூ-3ரூ டிக்கெட்லாம் இருக்கு 5ரூ டிக்கெட் இல்லையே, எங்கே போயிருக்கும்,
சார் பைன் கட்டுறீங்களா, இல்ல செல்ல வித்து எடுத்துக்கவா, எங்களுக்கும் வேற வேலை இருக்கு சார்.
சார் பைன் எவ்வளவு சார்.....
(மீண்டும் இன்று.....)
ஹலோ, ஸ்ரீ நான் வீரா பேசறேண்டா, என்னடா ரொம்ப நாளா உங்கிட்ட இருந்து போன்னே இல்ல,
என்னைலாம் மறந்துட்டியாடா புது வேலை கிடைச்சவுடனே,
உன்னை மறக்கமுடியுமாடா, இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் மறக்க முடியுமாடா, சுளையா 500ரூ, அநாமத்தா போச்சேடா, உன்னால,
அத இன்னுமா ஞாபகம் வச்சி இருக்கே, சரி நான் ஈவ்னிங் ஆபிஸ் வறேன், நாம 2 பேரும் நெற்குன்றம்ல இருக்கிற நாடி சோதிடர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தியை பார்க்க போவோம்,
மறுபடியும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயா, வேணாம்யா நான் வரலை, ஒரு தடவ போனதே போதும், நானும் ஒரு வாரமா தலைய பிச்சிகிட்டு இருக்கேன்,
ஏன் என்னாச்சி
(அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
என்ன புரியலையா அ முதல் அக் வரை சொல்லிட்டான்)
மச்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி சொன்னா கண்டிப்பா நடக்கும், இப்படித்தான் எங்க அண்ணன் பொண்ணு நடக்க முடியாம இருந்துச்சி, இன்னும் 2 நாள்ல நடப்பானு சொன்னார், அதே மாதிரி நடந்துடா தெரியுமா,
அப்படியா என்ன வயசு உங்க அண்ணன் பொண்ணுக்கு
என்ன வயசு 1 வயசாகுது,
அப்ப கண்டிப்பா பெரிய ஆளுதான் அவரு,
சரி, அன்னிக்கு அந்த பொண்ணுகிட்ட போன் நம்பர், மெயில் ஐடி கொடுத்தியே அவளா இருக்குமோ அந்த மோகனா குமாரி,
எந்த பொண்ணு.....
அடப்பாவி 500 பிரச்சனைல என்னை மறக்க மாட்டேன் சொன்னவன் அந்த லாஸுக்கு காரணகர்த்தாவானா அந்த பொண்ணை மறந்துட்டியே,
ஓஹோ, அப்படி இருக்குமா என்ன, எப்போவோ வந்திருக்கனும்மே,
உன் நேரம் இப்போ வருது,
எப்படி கண்ண்டு பிடிக்கிறது,
நாளைக்கு லீவுதானே, அவ பின்னாடியே பாலோ பண்ணீ எங்க போறான்னு பாரு, முடிஞ்சா அவகிட்ட பேரை கேளு, இல்லாட்டி எங்க போறான்னு பார்த்து பின்னாடியே போயி பேர் கண்டுபிடி.
என்னது பின்னாடியே போறதா, என் ஸ்டேட்டஸ் என்ன ஆறது, என் பேர் என் கௌரவம் என்ன ஆகும்,
என்னடா உன் ஸ்டேடஸ், கௌரவம் அதே பொண்ணுக்கு பஸ்ல டிக்கெட் போன் நம்பர் எழுதி தந்தவந்தானே நீ,
அது அப்போ
என்ன அப்போ இப்போனுகிட்டு, அது என்ன 3 வருஷம் முன்னாடியா நடந்துச்சி, இப்பதானே 2-3 மாசம் முன்னாடிதானே நடந்துச்சி,
எப்படிடா பாலோ பண்றது, யாராவது பார்த்துட்டு எதாவது ஆகி போலிஸ் கீலிஸ்னு மாட்டி, எப்.ஐ.ஆர் போட்டு என் பாஸ்போர்ட் அதாலே பிரச்சனை ஆச்சினா நான் எப்படி குவைத் போவேன், எப்படி ஸ்டேட்ஸ் போவேன்.
அது உன் சாமர்த்தியம், உன் நோவுக்கு நீ தான் மருந்து சாப்பிடனும்,
அப்போ நாளைக்கு பாலோ பண்ணனுமா என்ன
கண்டிப்பா பண்ணு
*(தொடரும்)*
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment