14 May 2009

கத போல தோணும் - 4

உடனே நம்ம சால்ஸ்க்கு ஒரு காலை போடனும். 9...8.... 4...1...0....5....5...2...0....2.

நீங்கள் டயல் செய்த சந்தாதாரர் வேரொரு லயனில் பிசியாக இருக்கிரார்.
லயனிலேயே காத்திருக்கவும். அல்லது தொடர்பௌ துண்டித்து மீண்டும் முயற்ச்சி செய்யவும்ம்ம்ம்

(கோவிந்தா கோவிந்தா......)

(மச்சி நீ போடும் கடலைக்கு ஒரு நன்றி, எப்பிடியோ நல்லா இரு)

அடுத்தது எவனை பிடிக்கலாம், பல்சர் பாண்டிக்கு கால் பண்ண வேண்டியதுதான். 9...8....8. (டொக்)

வேணடாம், அவன்கிட்ட கேட்பினும் கேட்காமை நன்று, எதுக்குனு கேட்ப்பான், எப்படியோ போட்டு வாங்கிடுவான், அப்புறம் அந்தா ஹால்ப் டவுசர் பல்சரை எடுத்துகிட்டு வந்து அலம்பல் பண்ணுவான்
(குறிப்பு - புல்டோசர் வண்டியின் தம்பி பல்சர், அதான் ஹால்ப் டவுசர்)

அடுத்தது யாருக்கு போன் பண்ணலாம். முரளி, மூர்த்தி, நாகு, நாராயணன், நிலா, பங்காளி, பட்டாபி...............

யுரேகா

நிலா. எஸ் எஸ், நிலா தான் சரி, நிலாக்கா, நீங்க இப்ப எனக்கு நிலா இல்லை, அண்ணபூரணீ, அஷ்ட லட்சுமி, 9.....8.....4......0......X......X......X......X......X.

யப்பா உப்பிலியப்பா, மறுபடியும் கண்ணை தொறந்துட்டயேப்பா

ரிங்க் போகூஊஊஊஊஊஊஊஊஉது, போய்ட்டே இருக்கு.

எஸ்...எஸ் ஹலோ நிலா நான் எப்படி இருக்கீங்க, எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனுமே நீங்க.

யார் நீங்க.....?

என்ன நிலா திடிர்னு ஆண்குரலில் பேசறீங்க.

ஹலோ, அவங்க மீட்டிங்கில் இருக்காங்க, நான் அவங்க கொலிக் பேசறேன்.

ஓ சாரி சாரி, அவங்க எப்போ மீட்டின்கில் இருந்து வெளிவருவாங்கனு சொல்ல முடியாது.

2 மணி நேரத்தில வந்துடுவாங்க.

2 மணி நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.

யெஸ். எதாவது சொல்லனும்னா சொல்லுங்க அவங்ககிட்ட சொல்லிடறேன்.

அப்படியா, மீட்டிங்கில பெட்ரோல் விலையும், பிரியாணி விலையும் குறைக்க சொல்லி ஒரு மசோதாவை தாக்கல் செய்ய சொல்லுங்க.


வ்வ்வாட்ட்?


ம்ம். அது போச்சு 1000வாட்ஸ் தாண்டி, இன்னும் கொஞ்ச நேரம் போனா அதிர்ச்சி 2000வாட்ஸ் தாண்டிடும் போல இருக்கு.

சார், கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க.

நோ நோ, இது என்னோட சோகம், என் சோகம் என்னானு சொல்லாம ஏங்க அழுகையா வருது, நான் அழுது.....

ஹெலோ, ஹெலோ... வச்சிட்டான். நல்லாருங்கப்பா.

ஓகே, அடுததது யாருக்கு பண்ணலாம்.......

வினோத்??? அடக்கடவுளே இந்த நாட்டாமையை எப்படி மறந்தேன்.
9.....9.....4.....4......4......X......X......X......X......X.,
(you don't have sufficiant balance to make a cal, pls recharge imm)

(என் கதை முடியும் நேரமிது, என்பதை சொல்லும் ராகமிது)

சார்... அந்த ரேடியோ பொட்டியை ஆப் பண்றீங்களா....

ஹேய் கட்டம் போட்ட சட்டை, என்ன பண்றே அங்க

(வந்துட்டாய்யா வந்துட்டாயா)

(தொடரும்)

No comments: