ஹேய் கட்டம் போட்ட சட்டை, என்ன பண்றே அங்க
(வந்துட்டாய்யா வந்துட்டாயா)
இங்க என்ன பண்ணிட்டிருக்க. வா கிளம்பலாம்.
சாப்பிட்டாச்சா?
சாப்பிட்டாச்சு, சாப்பிட்டு ப்ரஷ் ஜூஸ் குடிச்சாச்சி, பில் கட்டியாச்சி இப்போ கிளம்பியாச்சி.
(அடிக்கிராதகி நீயே பில் பண்ணிடுவேனு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது குடிச்சிருப்பேனே.)
ஹ்லோ ஏன் இப்படி முழுக்கறீங்க, கிளம்பலாமா.
ம்ம். அதுக்கு முன்னாடி உங்க பேர்ர்ர்ர்ர்ர்ர்....
அட ஆரம்பிச்சிட்டீங்களா, கிளம்புங்க அடையாறு போனதும் சொல்றேன்.
என்னங்க மிஸ். எக்ஸ் 4 மணி நேரம் உங்களுக்காக வெயிட் பண்ணி இருக்கேன். உங்களை அடையாறுவரை கூட வந்து டிராப் பண்ண போறேன். சப்போஸ் வழியில எங்கயாவ்து எதிர்பாராத விதமா ஆக்சிடண்ட் ஆச்சினா உங்களை ஆஸ்பிட்டலில் சேக்கும் போது அங்க உங்க பேர் கேட்ப்பாங்களே. அதுக்காவ்து பேர் சொல்லுங்க
ஏங்க இப்படி அபசகுணமா பேசுறீங்க.
அப்ப சுபசகுணமா உங்க பேரை சொல்லுங்க, பேர் சொன்னாதான் நான் வருவேன்.
சும்மா அடம்பிடிக்காம கிளம்புங்க ஜெய்கர்.
எம் பேரு. என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும். உங்க ஊர் பேர், எங்க வர்க் பன்றீங்க எல்லா டிடெயிலும் தெரியும்.
எப்படி எப்படி? என் ஐடி கார்டை பார்த்திருப்பீங்க, ஆனா அது எங்கிட்டதானே இருக்கு. தென்?
அப்புறம் சுமதி பத்தியும் தெரியும் எனக்கு. அது கண்டிப்பா ஐடில வ்ர மேட்டர் இல்லை.
எப்ப்படி எப்படி எப்படி? நீங்க சுமதி ப்ரண்டா? அப்படி இருந்தாலும் சுமதி என்னை பத்தி உங்ககிட்ட சொல்ல வாய்ப்பே இல்லையே.
சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி அடையாறு. ஓகே.
(ஒரு வேளை பேய், பிசாசா இருப்பாளோ, சே காலேஜ்லேயே கால் இருக்கானு சரியா பார்த்துட்டு ஏறி இருக்கலாம்)
சரி உட்காருங்க, கிளம்புவோம்.
(மாலை 4 மணி அளவில்)
ஏங்க நீங்க சொன்ன இடம் வந்துட்டது. இப்பயாச்சும் சொல்லுங்க.
என்ன சொல்ல்னும்.
(வில்லியா இருப்பா போலிருக்கே)
சுமதியை எப்படி தெரியும்.
அப்போ என் பேர் வேண்டாமா?
(கன்பார்ம்டு,வில்லியேதான்)
முதல்ல உங்க பேர், அப்புறம் சுமதி பத்தி.
நான் ரெண்டுல ஒன்னுக்குதான் பதில் சொல்லுவேன்னா எதுக்கு சொல்ல சொல்லுவீங்க.
(கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானேகற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான். வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அடநானும் ஏமாந்தேன்)
ஏன் இப்படி முழிக்கரீங்க. ஹலோ பேசுங்க... ஹலோ...
இல்ல கண்ணதாசனை நினைச்சேன். கொஞ்ச நேரம் வாயடைச்சி போய்ட்டேன்.
நான் என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க.
ஏங்க ரெண்டும் சொல்லிடுங்களேன்.
ஓ கே என் பேர். ப்ரியா.
ஓ ஸ்வீட் நேம் ( தூ... 3 எழுத்து பேரை சொல்ல 30கிமீ பயணம்). சுமதி எப்படி.....
ம்ம் சொல்றேன். உங்க ப்ரண்ட்தான் சொன்னார்.
என் பிரண்ட்டா? யாரு? தெளிவா சொல்லுங்களேன்.
>
>
>
>
>
>
(மாலையில் அறையில்)
மச்சான் மேட்ச் ஜெயிச்சிட்டோம், இன்னிக்கு நைட் உனக்கு ப்ரியாணி, ஓகேவா
வேண்டாம் டா.
ஏண்டா, என்ன ஆச்சி, காலைல எதாவது பொண்ணுகிட்ட பிட்டு போட்டு கிக்கு எதாச்சும் வாங்கினயா.
அதெல்லாம் இல்ல, நீ ஏண்டா அந்த காலேஜ் 2007லதான் ஓப்பன் பண்ணாங்கனு சொல்லலை,
அதை விடு, அது ஒரு ஆர்ட்ஸ் & சய்ன்ஸ் காலேஜ்னாச்சும் சொல்லி இருக்கலாம் இல்லே. அதைக்கூட விடுடா, உன் ப்ரண்ட் ப்ரியாவை பத்தியாச்சும் சொல்லி இருக்கலாம் இல்லே.
இத்துடன் இக்கதை இனிதே முடிவுற்றது..........
(அப்படினு நினைக்காதீங்க கொஞ்சம் பாக்கி இருக்கு அது கீழே)
(செல் ரிங் அடிக்கிறது. சார்லஸிடம் இருந்து அழைப்பு) ஹலோ....
மச்சான் நான் சார்லஸ் பேசுறேண்டா, உன் மிஸ்ட்கால் பார்த்தேன் மாம்ஸ். நான் இப்பதான் போனை வச்சேன், சொல்லு மச்சி என்ன விஷேசம்.......
முற்றும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment