ஆழ்வார் பேட்டை ஆண்டவா எல்லா பிகரை நல்லா வச்சிருப்பா)
எஸ்க்யூஸ் மீ இந்த 27C தி.நகர் போகுமா மேடம்
ஹலோ மிஸ்டர் இது உங்களுக்கே இது ஓவரா இல்லை, நீங்க இந்த வண்டிலதானே டெய்லி தி.நகர் போறீங்க, இன்னிக்கு மட்டும் என்ன டவுட்டு, என்ன பேசறதுக்கு பிட்டு போடுறீங்களா
நோ நோ நான் ரொம்ப டீசண்ட்டானவன்,
நாங்கெல்லாம் ஸ்கூல் முடிச்சி, காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கவங்க, உங்களை மாதிரி எத்தனை பேரை பாத்திருப்போம், வேற ஆளை பாருங்க, அல்ரெடி புக்குடு.
(பார்த்தப்பவே நினைச்சேன்) தாங்க் யூ, ஆல் த பெஸ்ட்,
எஸ்க்யூஸ் மீ, தி நகர் ஒன்னு கொடுங்க,
உள்ளே போங்க சார்,
சார் கேர்ஸ்லாம் நிக்குறாங்க சார், எப்படி போறது, சின்னதா இடிச்சாலும் காச் மூச்னு கத்துவாங்க சார்,
பரவாயில்லே சார், ஆபத்துக்கு பாவமில்லே, பீக் ஹவர்ஸ்ல இதெல்லாம் கண்டுக்காதீங்க சார்,
சார் பிகர் நல்லா இருந்தா கூட திட்டு வாங்கலாம், போனதும் வந்ததும்தான் சார் திட்டுறாங்க,
யோவ் உள்ளே போய்யா, பீக் ஹவர்ல தொண தொணனுட்டு,
தாங்க்ஸ், இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னே தெரியலையே, ரொம்ப டெர்ரர்ரா போயிட்டு
இருக்கே, (அப்பாடி 2 பேரு இறங்க பாக்கூறாங்க, ஜன்னலோரமை பிடிச்சிட வேண்டியதுதான், அப்பாடட சீட் கிடைச்சிடுச்சி, இனிமே ஜாலியா சைட் அடிச்சிட்டே போக வேண்டியதுதான்)
அடடா பால் போல 16ல் ஒரு பொண்ணு வருதே. ம். ஆழ்வார் பேட்டை ஆண்டவா, கொஞம் கருணைகாட்டப்பா. அடடா என் பக்கத்துல வருதே, என் பக்கத்து சீட் ஆளை தொறத்திட்டு உட்கார வச்சுடனும்.
அங்கிள் அங்கிள்,
சார் உங்களைதான் கூப்பிடுது இந்த பொண்னு
உங்களைதான் அங்கிள்,
என்னையா, அங்கிளா (அடடா ஷேவ் பண்ணாம வந்தது எவ்ளோ பெரிய தப்பா போச்சி)
ஆமாம் அங்கிள், இந்த பேக் வச்சிக்கோங்க, அங்கிள்,
இங்க பாரு, வேணும்னா என் சீட்ல உட்கார்ந்துக்கோ, இப்படி அங்கிள்னு சொல்லாதே
நோ தாங்ஸ் அங்கிள், உங்க பக்கத்துக இருக்கவர் இப்போ இறங்கிடுவார், இதோ இறங்கிறார், அப்பாடி
என் பேக் தாங்க அங்கிள்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்ன்ன சோதனை இது, உன் திருவிளையாடலை எங்கிட்டயேவா
அங்கிள், நீங்க எங்க இறங்கறீங்க வடப்ழனிலையா
இல்ல
அப்போ கோடம்பாக்கமா அங்கிள்,
இங்க பாரு வேணும்னா அண்ணா சொல்லிக்கோ, அங்கிள்னு சொல்லி என்னை டென்ஷன் பண்ணாதே.
ஹா ஹா ஏன் அங்கிள், சாரி சாரி ஏன் அண்ணா
இங்க பாரு என்னை பார்த்தா அங்கீள் மாதிரி இருக்கா, இப்ப கூட நான் யூனிபார்ம்ல போனா
என்னைப்பார்து +2 ஸ்டூடண்ட்னு சொல்லுவாங்க,
அப்போ +2 ஸ்டூடண்ட்ச்லாம் ப்ளே ஸ்கூல்ல இருப்பாங்களா, கோவிச்சிக்காதீங்க, நம்ம ஊர்ல ஸ்கூல் பசங்களே 1000 பேர் இருப்பாங்க, காலேஜ்ல் ஸ்டூடண்ட்ஸ் ஒரு 10000 பேர் இருப்பாங்க, இதுல உங்களை மாதிரி ஆளுங்க வேற. இத்தனை பேர்கிட்ட இருந்து நாங்க எஸ்கேப் ஆக இப்படி எதாச்சும் சொன்னாதானே உண்டு,
ஏய், என்னை பார்த்தா எப்படி தெரியுது, நான் என்ன பொறுக்கி மாதிரியய இருக்கேன், நான் ஆபீஸ் போவேனா இல்ல உன் பின்னாடி சுத்திட்டு இருப்பேனா.
அங்கிள் சாரி அண்ணா, பார்த்தேனே, உங்க பார்வையே சரியில்லை, அதான், உங்களை ஓட்ட அப்படி சொன்னேன்,
நல்லா ஓட்டினே, என் பார்வையே அப்படித்தான் ( ஸ்ரீ வர வர உன் பார்வையை எல்லாரும் கண்டுபிடிச்சிடுறாங்களே, அந்த அப்பாவி பார்வை மறுபடி வரவழைச்சிடு, இல்லே எல்லாமே இப்படித்தான் ஆகும்)
பிரதர், நான் இறங்க வேண்டிய இடம் வந்துட்டது நான் இறங்கிடறேன், அங்கே பாருங்க உங்களுக்கு
ஏத்த பொண்னு அங்க மஞ்ச கலர் ட்ரெஸ்ல இருக்கு,
அதுவா, நல்லாத்தான் இருக்கு, ஆனா கல்யாணம் ஆகி இருக்கும் போல இருக்கே.
நான் அங்கீள்னு கூப்பிடது தப்பே இல்லை, நீங்க ஏன் மஞ்ச சேலை கட்டின பொண்ண பார்த்தீங்க, அந்த சுடியை சொன்னேன்.
எங்கே...................................................................
தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment