(இரவு 10 மணி சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம்)
பற்பல ஊர்களுக்கு செல்ல பயணசீட்டு பெற்றூக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது கவுண்டரில் கூட்டம் அலைமோதிகொண்டிருந்தது, அந்த நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கிறான் நம் கதையின் நாயகன் (அதாவது என் கதையின் நாயகன், நம்னு சொன்னதும் கதைக்கு சொந்தம் கொண்டாடாதீங்க)
நம்ம நாயகன் பேரு திரு, ஆறடிக்கும் ஒரு சில அங்குலமே குறைவு, அளவான உடல், கருநீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். மரியாதையா கூப்பிடுவோமா, கருநீல ஜீன்ஸ் அணிந்திருந்தார். மேலே அடிக்கும் மஞ்சள் வண்ண டி-ஷர்ட், முழுசாக ட்ரிம் பண்ணின தாடி மீசை, கையில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் மீடியமான ட்ராவல் பேக்
மெது மெதுவாக க்யூவில் முன்னேறிக்கொண்டிருந்தார் திரு.திரு அதாவது மிஸ்டர். திரு, அதேசமயம் அவன் சட்டை பையில் இருந்த செல்லிடை பேசி கிச்சுகிச்சு மூட்ட, கையிலெடுத்து காதில் வைத்தான்
திரு ‘ ஹலோ சொல்லுடா மச்சான், இப்பதான் டிக்கெட் கவுன்டரை பாதி தாண்டி இருக்கேன், இன்னும் 20 நிமிடம் ஆகலாம்,
எதிர்முனையில் திருவின் நண்பன் பேசினான், “பிரச்சனை இல்லடா மணி 10தான், எப்படியும் 11 மணிக்குதான் அடுத்த ட்ரெயின், செவ்வாய் கிழமைதானே, கூட்டம் இருக்காது, கல்யாணநாளும் இல்லை, ப்ரீயா வரலாம், காலைல சேலம் 5.30 வந்து சேரும், சேலம் பக்கம் வந்ததுமே ஒரு கால் பண்ணிடு, நான் உடனே வண்டியை கிளப்பிட்டு வந்துடறேன்,
திரு’ , சரி மச்சி, நீ தூங்குடா நான் காலைல கால் பண்றேன்.
சிறிது நேரத்தில் சேலத்துக்கு டிக்கெட் பெற்றுக்கொண்ட திரு, நேராக 11ம் ப்ளாட்பாரமில் இவனுக்காகவே காத்த்திருந்தது போல நின்ற ரயில்பொட்டியில் ஏறிக்கொண்டான், கூட்டம் அதிகமில்லாமல் இருந்தது, அவன் லக்கேஜை மேலே வைத்துவிட்டு ஜன்னலோலரமாக சென்று அமர்ந்தான், நேரம் சரியாக 10.45என்று காட்டியது,
தனியாக வைத்திருந்த ஒரு பேக்கில் இருந்து சில புத்தகங்களை எடுத்து பார்த்தான், கல்கியின் பொன்னியின் செல்வன அட்டைபடத்தில் இருந்த கல்கியின் படத்தையே உற்றுபார்த்து கொண்டிருந்தான்,
சென்ற மாதங்களின் நடந்த நிகழ்சிகள் ஒவ்வொன்றாக நினைவுபடுத்த ஆரம்பித்தான், தஞ்சாவூர் சென்றது, பெரியகோவில் தரிசனம், சரஸ்வதி மஹால் , சரபோஜி மன்னர் அரண்மனை, சிவங்கங்கை பூங்கா ஒவ்வொன்றாக் நினைவுக்கு வந்தது,
சரஸ்வதி மஹாலில் சந்தித்த அந்த சித்தர் பெரியவர் உருவம் ஞாபகத்திற்கு வந்தது, நினைத்த மாத்திரத்தில் அந்த உருவம் எதிரி தோன்றுவது போல இருந்தது
அப்போது
(தொடரும்)
14 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இப்ப கமெண்ட் போட முடியுது.
தல சூப்பர்,அட்டகாசம்,மார்வலஸ் அய்யோ இன்னும் என்னமோ சொல்ல சொன்னீங்க மறந்துட்டேன் தல.
Post a Comment