இல்ல என் பேர் ப்ரியா.
ஓ சாரி நான் வேற பேரா இருக்கும்னு நினைச்சேன்
வேற பேரா என்ன வேற பேர், என் முழுப்பேர் சொல்லட்டா
இல்ல வேணாம், நான் தேடி வந்தது வேற பொண்ணு
என் முழுப்பேர் மோகன ப்ரியா
ஓஓஓ, அப்போ அது நீங்க தானா.
எது
மோகனா
அப்போ இல்ல எப்பவும் நான் மோகனாதான்.
ஹா ஹா குட் ஜோக் குட் ஜோக்
என்னோட பேர் உங்களுக்கு ஜோக்கா இருக்கா
ஏங்க இப்படி கடிக்கிறீங்க. நீங்க தானே அது
எது?
மோகனா, மோகனா நீங்க தானே
ஆமாம்...
அப்போ நீங்க தான் அது.
ஹலோ என்ன ஈவ் டீசிங்க் பண்றீங்களா.
டீசீங் இல்லீங்க, ஒரு சின்ன க்ளாரிபிகேசன், எனக்கு மெயில் பண்ணீங்களானு கேட்க வந்தேன்,
எஸ்க்யூஸ் மீ, நீங்க என்ன லூசா......
(லூசாவா) நீங்க மெயில் பண்ணீங்களா இல்லையா..
இல்லை.
அப்ப எப்படி நீங்க மோகனாவா இருக்க முடியும்.
ஹலோ நான் சின்ன பொண்ணா இருந்தப்ப இருந்தே மோகனாதான்.
(வீராவிடம் இருந்து அழைப்பு வருகிறது) ஒரு நிமிசம் போன் பேசிட்டு வந்திடுறேன்.
ஹலோ....
எதுக்குய்யா இப்ப கால் பண்றே.
பார்த்தாச்சானு கேட்கத்தாண்டா பண்ணேன், அதுக்கு ஏன் டென்ஷன் ஆகிற.
பார்த்தாச்சி, பேசியாச்சி, ஆனா மெயில் பண்ணலைனு சொல்றா, ஆனா மோகனானும் சொல்றா
உங்கிட்ட பொய் சொல்றானு நினைக்கிறேன், இப்ப எங்க இருக்க
தி.நகர் பஸ்டேடண்ட் பக்கத்துல அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கில்ல
அடப்பாவி போலிஸ் ஸ்டேஷன்லயா இருக்கே, மாட்டிக்கிட்டியா
அடிங்க, அந்த ரோட்டுல நடந்து போய்ட்டு இருக்கேன் டா, அய்யய்யோ..........
ஏண்டா என்னாச்சி, போலிஸ்ல சொல்லிட்டாளா
உன் நார வாய்ல ஆசிட் ஊத்தி கழுவு, அவ கிளம்பி போய்ட்டே இருக்கா,
போன் பேசிகிட்டே பாலே பண்ணு,
என்னடா இவ்ளோ கூட்டமா இருக்கு, திடிர்னு காணாம போயிட்டா
பின்னே தி.நகர்னா சும்மாவா, ஒரு ரயில்வே பாலம் சப்வே வரும் பாரு, அப்படித்தான் போயி இருப்பா,
ஆமா இருக்க்க்க்க்கே, அடடா பார்த்துட்டேன், அடடா ஏதோ ஸ்கூல் வருதே ஒரு வேளை ஸ்கூல் பொண்ணா இருக்குமோ, +2னாக்கூடா 17 வயசு கூட இருக்காதேடா,
அதனால என்னடா
அதுனால என்னவா ஸ்கூல் பொண்ணு பின்னாடி சுத்திட்டான் ஸ்ரீனு நாளைக்கு வரலாறு தப்பா பேசாதா.
ஓ க்ரேட் எஸ்கேப் அந்த பொண்ணூ ஸ்கூல் உள்ளே போகலை, அப்போ அது +2 கிடையாதுடா, காலேஜாத்தான் இருக்கும்.
இப்ப எங்க போறா.
மச்சி கோயிலுக்கு உள்ளே போறாடா.
நீயும் போடா,
என்னது நான் கோவிலுக்குல்லயா, நெவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் ஒரு தீவிர நாத்திகன், நான் கோவிலுக்குல்லே போறதா, நடக்காது, நடக்கவும் கூடாது.
மச்சி ஷூ போட்டிருக்கியா, அதுக்கு ஏன் இவ்ளோ பில்ட் அப். தயவு செஞ்சு ஷூ வ கழட்டிட்டு போற ஐடியா இருந்தா மாத்திக்கோ, கம்முனு வெயிட் பண்ணு.
(எப்படித்தான் கண்டுபிடிக்கிறானுங்களோ) அது இல்லடா, என் சாக்ஸு.........
மச்சி எதுவும் சொல்ல வேணாம், பாம்பின் கால் பாம்ப்றியும், கம்முனு வெயிட் பண்ணு, நீ பாலோ பன்றது தெரியாத மாதிரி பண்ணி திடிர்னு போய் பேசு,
வந்துட்டா, வந்துட்டா. இப்ப நான் என்ன செய்ய
ஆமா இவரு தம்பி மாதவனு, 2 பேரை பொறட்டி போட பெர்மிசன் கேட்க்கிறாரு, கொஞ்சம் மறஞ்சி நில்லுடா,
ம்ம்ம். மறைஞ்சிக்கிட்டேன். வெளிவந்துட்டா, செப்பல் போட்டாச்சி, என்னடா வந்த வழியிலேயே திரும்பி நடக்கிறா, மச்சி மறுபடி அதே ஸ்கூல். போச்சி போச்சி போச்சி, அப்பாடி அத தாண்டி போயிட்டா. மறுபடி ரெயில்வே சப்வே ல போறா, என்னடா என்னை அலைய வைக்கனும்னே இவ்ளொ தூரம் சாமி கும்பிட வந்திருப்பாளோ.
நீ ரொம்ப விளையாடிட்ட அதான் உன்னை வெச்சி இப்ப விளையாடறாங்க.
என்னைய வச்சி விளையாடுறாங்களா, யாரு.
நீ விளையாடினதுக்கு பழிக்கு பழியா விதி சதிராடுதுனு சொன்னேண்டா.
என்னமோ போடா, ஐயய்யோ, அவ பேக் கீழே விழுந்துடுச்சி, இதான் சமயம் நான் ஓடிப்போயி உதவிபண்றேன்.
ஹலோ மோகனா, என்னாச்சி, எப்படி பேக் கீழே விழுந்தது,
கால்தவறி விழப்போனப்போ விழுந்துடுச்சி
உனக்கெதும் அடிப்படலையே, ஆர் யூ ஆல்ரைட்,
இல்ல, பேக்தான் கிழிஞ்சிடுச்சி
அடடா புக்ஸ்லாம் கீழே விழுந்துடுச்சே, என்ன புக் இது, தமிழ் புக்கு, என்னது பத்தாம் வகுப்பு தமிழ் புக்கா. அப்போ நீ 10ம் க்ளாஸா,
ஆமாம்..........
(தொடரும்)
15 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அச்சச்சோ பத்தாம் வகுப்பு பொண்ணையாப்பா பார்த்தீங்க
எனக்கு கொஞ்சம் பெரிய அம்மாவா பாரேன்பா
Post a Comment